கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 5, 2011

கோயிலுக்குள் நான் செருப்பு அணிந்து சென்றதால் தான் பிரச்னை எழுந்தது மு.க.அழகிரி மீது பொய் புகார் - தாசில்தார் பரபரப்பு கடிதம்


கோயிலுக்குள் நாங்கள் செருப்பு அணிந்து சென்றதால் தான் பிரச்னை எழுந்தது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது மதுரை மாவட்ட கலெக்டர் சொன்னபடி போலீசில் பொய் புகார் அளித்தேன் என தேர்தல் ஆணையாளருக்கு மேலூர் தாசில்தார் எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மத்திய அமைச்சர் அழ கிரி கடந்த 1&ந் தேதி மேலூர் தொகுதி அம்பலகாரன்பட்டி கோயிலில் சாமி கும் பிட்ட போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தா சில்தார் காளிமுத்து போலீ சில் புகார் அளித்தார். இதன்பேரில் அமைச்சர் அழகிரி, துணை மேயர் மன் னன் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இப் பிரச்னை குறித்து தாசில்தார் காளிமுத்து தேர் தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மேலூர் தாலுகா வெள்ளலூர்நாட்டை சேர்ந்த அம்பலகாரன்பட்டி வல்லுடையார் கோயிலுக்கு சாமிகும்பிட வருவதாக அறிந்தேன். அதன்பேரில் வீடியோகிராபர் துணை யுடன் அங்கு சென்றேன். அப்போது அழகிரி கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார். வீடியோ எடுக்க நாங்கள் கோயிலுக்குள் சென்றோம்.
கோயிலுக்குள் நாங்கள் செருப்பு அணிந்து சென்றதால் அங்கிருந்த பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் ஆட்சேபித்து வெளியே போகச் சொன்னார்கள். இத னால் அங்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது.
இதை நானும் மற்றவர்களும் மதுரை கலெக்டரிடம் தெரிவித்தோம். உடனே கலெக்டர் “இது குறித்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும், தானும் கீழவளவு காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. மூலம் தகவல் சொல்வதாகவும், அங்கு எவ்வாறு புகார் கொடுக்க வேண்டுமென்று கூறுவார்கள்“ என்றும் தெரிவித்தார்.
கலெக்டர் கூறியது போலவே கீழவளவு காவல் நிலையத்திற்கு சென்றேன். கலெக்டர் சொல்லியவாறு புகார் கொடுத்தேன்.
எனக்கும் மத் திய அமைச்சர் அழகிரி மற்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கும் எவ்வித மோதலும், பிரச்சினையும் நடைபெறவில்லை.
கோயிலுக்குள் நாங்கள் செருப்பு அணிந்து சென்றதை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆட்சேபித்தபோது, அமைச்சரும் அவருடன் இருந்தவர்களும் சாமிகும்பிட்டு விட்டு கோயி லில் இருந்து வெளியேறி விட்டனர் என்பதை பணி வுடன் தெரிவித்துக் கொள் கிறேன்.

இவ்வாறு கடிதத் தில் தாசில்தார் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

No comments:

Post a Comment