இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கவிக்கோ அப்துல் ரகுமான், கேப்டன் அமீர் அலி, எஸ்.எம்.இதாயத்துல்லா, பிரஸிடெண்ட் அபுபக்கர், எஸ்.எஸ்.ஷாஜகான், பி.அப்துல்காதர் ஆகியோர், முதல்வர் கருணாநிதியை 19.04.2011 அன்று நேரில் சந்தித்தனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சிறுபான்மை மக்களின் முழுமையான ஆதரவு திமுக கூட்டணிக்கு கிடைத்திருப்பதால், 6வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவது உறுதி என தெரிவித்தனர். 2007ல் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மாநாட்டில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பின்னர், கழகத்தின் கோரிக்கையான 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 2011ல் வாக்குறுதி அளித்ததற்கும் நன்றி கூறினர். புதிய ஆட்சி அமைந்ததும் இதற்கான ஆணைக்கு முதல் கையெழுத்திடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
உலமா நலவாரியம், சிறுபான்மை ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம், முஸ்லிம் மாணவர்களுக்கு விடுதிகள், பிற மாநிலங்களில் வழங்கப்படாத மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை தமிழகத்துக்கு கூடுதலாக பெற்றுத் தந்தது உள்ளிட்ட பல்வேறு இலக்கியக் கழகத்தின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
மே மாதம் மலேசியாவில் நடக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
No comments:
Post a Comment