கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் அதிக வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் வெல்வார் - செல்வி செல்வம்
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி செல்வம் தெரிவித்தார்.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக கடந்த 22ம் தேதி முதல் அவரது மகள், நூற்றுக்கணக்கான கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் தொகுதிக்குட்பட்ட அரசவனங்காடு, காப்பனாமங்கலம் ஆகிய கிராமங்களில் 06.04.2011 அன்று வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருவாரூரில் நேற்று அவர் தினகரன் நிருபரிடம் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முதல்வர் கருணாநிதி குளித்தலை, சேப்பாக்கம், துறைமுகம் போன்ற தொகுகளில் போட்டியிட்டார். இந்த முறை அவரது சொந்த மண்ணில் போட்டியிடுகிறார். இது திருவாரூர் தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 16 நாட்களாக திருவாரூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன்.
எல்லா கிராமத்திலும் திமுக அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் மட்டும் வாக்களித்தாலே போதும். தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் ஒரு கிராமத்தில் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்டபோது, 108 க்குதான் வாக்களிப்பேன் என்றார். முதல்வர் கருணாநிதியின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைந்திருப்பதற்கு இதுவே சான்று. முதல்வரின் எல்லா திட்டங்களும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதி மக்கள் முதல்வருக்கு வாக்களிப்பதை பெருமையாக நினைக்கின்றனர். எனவே அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
திருவாரூர் தொகுதியில் இன்று (நேற்று) அரசவனங்காடு, காப்பனாமங்கலம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தேன். அரசவனங்காட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற பெற்றோரிடம் கேட்டபோது, சமச்சீர் கல்வியை கொண்டுவந்த முதல்வருக்கு தான் என் ஓட்டு என்று ஒரு பெண் சொன்னார். திமுக கொடியை பிடித்துக்கொண்டு நின்ற ஒரு முதியவர், நூறு ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் அல்லாடிக்கொண்டு இருந்தேன். சின்னச்சின்ன கைச்செலவுக்கும் வழியில்லாமல் கிடந்தேன். இப்போது நான், 500 ரூபாய் முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். அதை ரூ.750 ஆக உயர்த்தி தருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். முதல்வருக்குதான் என் ஓட்டு என்று கூறினார். இவ்வாறு எல்லா தரப்பு மக்களும் தங்கள் ஓட்டு முதல்வர் கருணாநிதிக்கு தான், உதயசூரியன் சின்னத்திற்கு தான் என்று பெருமையுடன் கூறுகின்றனர்.
இவ்வாறு செல்வி செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment