கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 29, 2010

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை: கலைஞர்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிவடைந்தையொட்டி கோவையில்செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். அப்போது மாநாடு சிறப்பாக நடத்த உதவியவர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்டர்வர்களுக்கும் முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி,

செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், கலைஞர்கள், பொதுமக்கள், மாநாட்டுக்கு பணியாற்றிய அமைச்சர் அன்பழன், துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநாட்டின் பல்வேறு குழுக்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள், கோவை மேயர் ஆகியோருக்கும், தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், அவ்வை நடராஜன், பொற்கோ, வைரமுத்து மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்கள் சிவதம்பி போன்வறவர்கள், சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர், காவல்துறையினருக்கு நன்றி. சிறப்பாக பணியாபற்றிய ஒலி ஒளி ஏற்பாடு செய்தவர்கள், மாநாடு நடைபெற ஒத்துழைத்த தமிழ் பொதுமக்களும் நன்றி.

தொடக்க விழாவில் பொதுமக்கள் 2 லட்சம் பேர் கூடினர். அன்று மாலையில் நடைபெற்ற இனியவை நாற்பது என்ற தலைப்பிட்ட கலை இலக்கிய வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில், சாலையில் இருபுறமும் நின்று கண்டுகளித்தோர் 5 லட்சம் பேர்.

24 முதல் 26 வரை 3 நாட்களில் மாநாட்டில் நடந்த கவியரங்கம், பட்டிமன்றங்களில் நாள்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொது கண்காட்சி அரங்கிலும் மணிக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும், தினமும் 13 நேரம் மொத்தமாக, நாள்தோறும் 40 ஆயிரம் பேரும், இதுவரையில் 1,70,000 பேர் வருகை தந்துள்ளார்கள்.

மாநாட்டு சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள கட்டுரையாளர்களுக்கு 3200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 2003 மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இணைய மாநாட்டில் மொத்தம் 130 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. பொதுகண்காட்சிக்கு வந்த அனைவரும், இணைய மாநாட்டை கண்டு களித்தனர்.

மாநாடு நடந்த 5 நாட்களும் சுமார் 4 லட்சம் பேருக்கு, 30 ரூபாய் சலுகையில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு நபர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் 92. 1642 அறைகளில் தங்கியிருந்தனர். 2605 நபர்கள் தங்கியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.


கே: இந்த மாநாட்டின் தலையாய சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

ப: தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் தமிழ்மொழியை மேலும் படிப்படியாக வளர்த்து உயர்த்தி கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த மாநாட்டின் சாதனையாக கருதுகிறேன்.

கே: பல வெளிநாடுகளில் தமிழர்கள் தங்கள் மொழியையும், நிலத்தையும் மறந்து வாழுகிறார்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களுடன் வாழ்வதற்கு தமிழறிஞர்களையும், தமிழ் நூல்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ப: அப்படி வேண்டும் என்று கோரிக்கை வந்தால் அதற்கான வசதிகள், வாய்ப்புகள் தேவைப்பட்டால் அவற்றை உருவாக்கி அந்த நாடுகளுக்கு தமிழறிஞர்களை தமிழ் பணியாற்ற அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

கே: தமிழில் படித்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கூறியிருக்கிறீர்கள். இதனை அரசியல் சட்டம் ஏற்குமா? ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல கூறினால் ஒருமைப்பாடு என்னவாகும்?

ப: இந்த கருத்தை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டதை மாநாட்டில் பார்த்தீர்கள். இதனை நானாக சொல்லவில்லை. தமிழ் நாட்டில் இத்தகைய கருத்துள்ள பல ஏடுகள், இதழாசிரியர்கள், புலவர் பெருமக்கள் தெரிவித்த கருத்துக்களின் எதிரொலியாகத்தான் மாநாட்டில் இதனை அறிவித்தோம்.எனவே இதனை தமிழ் மீதும், தமிழர் மீதும் அவர்களுடைய முன்னேற்றத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள். எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

கே: சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வருமா?

ப: இப்போதுதான் இவ்வளவு பெரிய தமிழ் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். அதற்குள் சட்டமன்ற தேர்தலுக்கு என்ன முக்கியம்.

கே: கோவையில் செம்மொழி மாநாட்டு பூங்கா எவ்வளவு காலத்தில் அமையும்?

ப: பூங்காவின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

கே: செம்மொழி மாநாட்டுக்காக கைதிகளை விடுவிப்பதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

ப: செம்மொழி மாநாட்டிற்காக கைதிகளை விடுவிக்கப் போவதாக அரசு சார்பில் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டதாக எந்த ஏடுகளுக்கும் அரசு சார்பில் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எதை நம்பி, யாரை நம்பி இப்படி அறிக்கை விடுத்தார் என்று தெரியவில்லை.விஷயமறிந்த ஏடுகள் கூட அவரது அறிக்கையை எப்படி வெளியிட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அந்த அறிக்கையில் கைதிகளை விடுவிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால் அவரே தான் முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு 1992ம் ஆண்டு 230 கைதிகளையும், 1993 ஆம் ஆண்டு 132 கைதிகளையும், 1994 ஆம் ஆண்டு 163 கைதிகளையும் விடுதலை செய்திருக்கிறார்.ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டை விட தனது பிறந்தநாள் புனிதமானது என்று அவர் கருதி கைதிகளை விடுவித்திருக்கலாம். எனக்குள்ள வேதனையெல்லாம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் இதையெல்லாம் நினைவுப்படுத்தினால் தவறுகள் மீண்டும் மீண்டும் வராது.

கே: மத்திய ஆட்சிமொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்றுகூறியிருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இதனை வலியுறுத்துவார்களா?

ப: உங்கள் கருத்து ஏற்கப்படும்.

கே: கொடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி தொழிற்சாலை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ப: நீங்கள் சொன்ன புதிரான செய்தி விசாரிக்கப்படும். அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும்.

கே: செம்மொழி மாநாட்டுக்கு பிறகு நீங்கள் ஓய்வு பெற போவதாக அறிவித்தீர்களே?

ப: அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை.

கே: அரசியலிலிருந்து சற்றே விலகி இருக்கப் போவதாக கூறினீர்களே?

ப: நீங்கள் சொல்லுங்கள். நான் விலகியிருக்கட்டுமா?

கே: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?

ப: இப்போதுதானே முதன் முதலில் செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறோம்.

கே: செம்மொழி மாநாட்டில் உங்களை நெகிழ வைத்த நிகழ்வு எது?


ப: எல்லா நிகழ்ச்சிகளுமே என்னை நெகிழ வைத்தன.

கே: அடுத்த செம்மொழி மாநாடு எப்போது நடத்தப்படும்?


ப: தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் மாநாட்டை கூட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மாநாட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்ப் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டுள்ளது.

கே: இலவச நிலம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?

ப: இரண்டு ஏக்கர் இலவசம் என்று கூறியிருந்தோம். அதனை பிரித்துக் கொடுக்கும் போது சில இடங்களில் ஒன்றரை, ஒன்றேமுக்கால் ஏக்கர் என ஆங்காங்கே உள்ள நிலங்களுக்கு ஏற்ப அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்திலும் இரண்டு ஏக்கர் நிலத்திற்குரிய பயன் விளையலாம்.ஆகவே ஆங்காங்குள்ள நிலப்பரப்புக்கு ஏற்பவும், பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டன.

கே: உயர் கல்வியில் தமிழ் என்று அறிவிப்பு வெளியிடப்படுமா?

ப: இந்தாண்டு முதல் பொறியியல் கல்வி தமிழில் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே அமைச்சர் அறிவித்துள்ளார். இனி அடுத்தது மருத்துவ கல்விதான்.

கே: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு திமுகவும் காரணம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

ப: தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் காரணமாக அவர்கள் உத்தேசித்திருந்த அளவை விட தற்போது ஓரளவு விலை உயர்வை குறைத்து அறிவித்திருக்கிறார்கள். நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இந்த விலை உயர்வால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.150 கோடி நிதிச்சுமை ஏற்படும். என்றாலும் பொது மக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கேள்வி: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறீர்களே?

பதில்: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என நான் கூறியதற்கு ஓய்வு பெற போவதாக அர்த்தம் இல்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வு எடுக்க தயாராக உள்ளேன்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?

பதில்: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருப்பதாலேயே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலை உயர்வில் இருந்து தற்போது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது; இந்த விலைவாசி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.

கேள்வி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கக் கூடாது என்று ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் கூறியிருந்தார்களே?

பதில்: அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான்அதனை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் இங்குள்ள தமிழர்களையும், வெளிநாட்டு தமிழர்களையும் மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.

அதற்காக குடியரசு தலைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பேசியதை தாங்கள் அறிவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தார்.முதலமைச்சர் வெளியிட்ட 15 அம்சத் திட்டங்கள்கோயம்புத்தூரில் கடந்த ஜூன் 23 முதல் 27 முடிய நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் (27.6.2010) முதலமைச்சர் சிறப்புமிக்க 15 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழா நிகழ்ச்சியின் தலைவர் மத்திய நிதியமைச்சர், நம்முடைய அன்பிற்குரிய நண்பர் பிரணாப் முகர்ஜி அவர்களே, முன்னிலை வகித்துள்ள மத்திய உள்-துறை அமைச்சர் அருமை நண்பர் ப. சிதம்பரம் அவர்களே,

சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் தம்பி ராஜா அவர்களே, தமிழக நிதிய-மைச்சர் இனமானப் பேராசிரியர் அவர்களே, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி அவர்களே, தயாநிதி மாறன் அவர்களே, வரவேற்புரையாற்றிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிறீபதி அய்.ஏ.எஸ்., அவர்களே, நன்றியுரை நவிலவிருக்கின்ற, நன்றிபல பாராட்டப் படவேண்டிய அய்.ஏ.எஸ். அதிகாரி, இந்த மாநாட்டிற்கான சிறப்பு அலுவலர் அலாவுதீன் அய்.ஏ.எஸ்., அவர்களே,

எத்தனையோ இன்னல்களுக்கிடையேயும், இடையூறுகளையெல்லாம் தாண்டி இந்த மாநாட்டை அல்லும் பகலும் உழைத்து வெற்றிகர-மாக நடத்துவதற்கு தானும், தன்னுடைய அலுவ-லாளர்களும் மாவட்டத்திலே உள்ள அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்துத் தந்துள்ள மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் உமாநாத் அய்.ஏ.எஸ்., அவர்களே, (கைதட்டல்)

பெரியோர்களே, தாய்மார்களே, வெளிநாட்டி-லிருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்களே, என் உயி-ரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே (கைதட்-டல்) இந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்து நம்மை வாழ்த்திப் பாராட்டிச் சென்ற_ இந்திய நாட்டினுடைய குடியரசுத் தலைவர் அவர்களுக்குப் பிறகு இன்று, இந்த மாநாட்டின் நிறைவு விழாவிலே நிறைந்த மனதோடு மகிழ்ச்சிப் பெருக்கோடு வந்து கலந்துகொண்டு _நம்மையெல்லாம் மகிழ்ச்சியிலே ஆழ்த்-தி-யுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் அவர்-களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் நண்பர் சிதம்-பரம் அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட முறை-யிலும், இந்த மாநாட்டுப் பந்தலிலே குழுமியிருக்கின்ற உங்கள் அத்தனை பேருடைய சார்பிலும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக முதலமைச்சர் கலைஞர் நேற்று (27.6.2010) கோவையில் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாட்டு நிறைவு விழாவில் பேருரையாற்றினார். அவரது உரையைக் கேட்க மத்திய _ மாநில அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த காட்சி.

இந்த மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இங்கே எடுத்துரைத்தார்கள். நான் பக்கத்திலே நிதிய-மைச்சர் இருக்கிறார் என்ற (கைதட்டல்) தைரியத்தில், அவர் சொன்னதையெல்லாம் செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்)

நடைபெறக் கூடுமென்று எதிர்பார்த்து, முன்-கூட்டியே நான் அவைகளையெல்லாம் இந்த மாநாட்-டிலே என்னுடைய பேச்சோடு பேச்சாக, இரண்டு நாள்களுக்கு முன்பு நான் அறிவித்தவாறு ஏறத்தாழ ஒரு நிதிநிலை அறிக்கையைப் போல என்னுடைய பேச்சைத் தயாரித்திருக்கின்றேன்.

பிரணாப் முகர்ஜியும் - சிதம்பரமும் இருக்கும்போது நிதியைப் பற்றி கவலையில்லை

நிதிநிலை அறிக்கை என்றதும் நம்முடைய பிரணாப் அவர்கள் பயந்து விட வேண்டிய அவ-சியமில்லை. நான் நம்பிக்கையோடு இருப்பதற்குக் காரணம், பிரணாப் அவர்கள் என்னிடத்திலே கொண்டுள்ள அன்பு தமிழ் மக்களிடத்திலே அவருக்-குள்ள அன்பு, ஆர்வம் -தமிழின்பால் உள்ள பற்று - இவைகளின் காரணமாக நான் இந்த மாநாட்டிலே வெளியிடுகின்ற பல்வேறு காரியங்களுக்கு நிதி உதவி அதிகம் தேவைப்படுகிறது. அந்த நிதி உதவியை மத்திய பேரரசுதான் வழங்க வேண்டும். வலது புறத்திலே பிரணாப்பும், இடது புறத்திலே சிதம்-பரமும் இருக்கும்போது நான் நிதியைப் பற்றிக் கவ-லைப்படத் தேவையில்லை என்ற அந்த உணர்வோடு உங்கள் முன்னால் என்னுடைய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவுரையை வைக்க விரும்புகின்றேன்.

அய்ந்து நாட்களாகக் கோவை மாநகரில் எழுச்சியும், ஏற்றமும் கொண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு விழா காண்கிறது. உள்ளமெல்லாம் தமிழ் நிறைந்திருக்கும் வேளை_- ஊனும், உயிரும் தமிழோடு கலந்திருக்கும் வேளை_- எதைப்பற்றிப் பேசினாலும், தமிழைப் பற்றிப் பேசிடும் வேளை_- எதையும் தமிழோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வேளை_ என இந்த அய்ந்து நாள்களும் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ், தமிழே என்றாகி; இந்த மாநாட்டில் நாம் அனைவரும் மனநிறைவும், மகிழ்ச்-சி-யும் கொள்ளத்தக்க அளவுக்கு; விளைத்திருக்கும் பயன்களோ பலப்பல என பாரோர் போற்றிட நடைபெற்று, நிறைவுவிழாக் கட்டத்தை இப்போது இந்த மாநாடு எய்தியிருக்கிறது.

விரிந்து பரந்து கிடக்கும் கடல் போல எத்திசை நோக்கினும் - மக்கள் வெள்ளம் கூடியுள்ள பேரழகு கண்ட பெருமித உணர்வோடு இந்த நிறைவு விழாவில் எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்புக்குரியது தமிழ்மொழி. தமிழ்மொழியின் தொன்மையை ஏனைய உலக மொழி-களோடு ஒப்பிட்டு நோக்கினால், அதன் அருமையும், பெருமையும் மேலும் உயர்வதை அனைவரும் உணரமுடியும்.

வரலாற்று மொழியாக தமிழ் திகழ்வதால் அறிஞர்கள் பலர் கூடியுள்ளனர்

இன்று உலக மொழியாகத் திகழும், ஆங்கில மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அறிவியல் மொழியாகிய ஜெர்மன் மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி.9ஆம் நூற்றாண்டில்தான் கிடைத்தது. ரஷ்ய மொழியின் பழைமையான எழுத்து வடிவம் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லத்தீன் மொழியில் இருந்து உருவான இத்தாலிய மொழி 10ஆம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது.

ஆனால் கிறித்து பிறப்பதற்கு பல நூற்றாண்டு-களுக்கு முன்பே - முதல் எழுத்து ஆவணமாக, தொல்காப்பியம் நூலைப்பெற்று, இலக்கண வரம்பு கொண்டு வாழ்ந்த தமிழ்மொழி இன்றும் சாமானியர் முதல் ஆன்றோர், சான்றோர் வரை வாழும் மொழி-யாக-வும், வளரும் மொழியாகவும், வரலாற்று மொழி-யாகவும் திகழ்வதனால் தான், இன்று உலக அளவில் அறிஞர்கள் கூடி விழா எடுக்கும் பெருமையைப் பெற்றுள்ளது.

காதல், வீரம் இரண்டும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வு பூர்வமான பெருமை அளித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய சங்கப்பாடலில் இதோ இரண்டு காட்சிகள்!

குழந்தைப் பருவத்தில் எனது தாயார் விளையாடியபோது மணலில் அழுத்திய விதை, பின் முளைத்து புன்னை மரமாக வளர்ந்துள்ளதாம். இந்தப் புன்னை மரம், எனக்கு முன் தோன்றியதாம்; எனவே இதனை என் அக்காள் என்று எனது அன்னை ஏற்கனவே கூறியுள்ளாள்.

என் அக்காளாகிய இந்தப் புன்னை மரத்தின் முன் உன்னொடு காதல் மொழி பேச என்மனம் கூசு-கிறது; வேறிடம் செல்வோம் வா எனக் காதலனை வேறிடத்திற்கு அழைக்கிறாள் மங்கையொருத்தி;

நற்றிணையில் ஒரு பாடல்

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் இது கவிதை வரிகளாக வருகின்றது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என நற்றிணை நவில்கிறது.

ஒருத்தியின் குழந்தை பருவத்தில் _ இவளுக்கு மூத்த வளாக இன்னொரு குழந்தை. ஒரு இடத்திலே நட்ட -_ பதித்துவைத்த விதை வளர்ந்து அது புன்னை மரமாக நின்று கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்-திலே காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். நெருங்கு-கிறான் காதலன். அப்போது காதலி சொல்கிறாள். இந்தப் புன்னை எனக்கு அக்காள் முறை. ஏனென்-றால் எனக்கு முன்னால் என் தாயாரால் விதை புதைக்-கப்பட்டு, அது இங்கே வளர்ந்து நிற்கின்றது. எனவே அது எனக்கு அக்காள் முறை. அந்த அக்காளுக்கு முன்னால் உன்னோடு காதல் பேசுவதற்கு வெட்கமாக இருக்கிறது என்று அந்தக் காதலி சொல்வதாக சங்க இலக்கியத்திலே ஒரு அழகான கவிதை.

இப்படி அகவாழ்க்கையின் நாகரிகத்தைச் சமு-தாயத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டிக் காத்துப் புகழ் ஈட்டியுள்ளது தமிழ்நாடு!

குழந்தைக்கும் வீரம்

ஒரு குழந்தை இறந்தால்கூட - விழுப்புண் படா-மல் இறந்துவிட்டதே என வருந்தி வீரச்சின்னம் விளங்க அந்தக் குழந்தையின் மார்பை வாளால் பிளந்து பிறகு குழந்தையைப் புதைத்து, வீரத்தைப் போற்றும் நாடு தமிழ்நாடு! இதனைத்தான் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார்

- எனப் புறநானூறு கூறுகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

_ என்று அய்யன் திருவள்ளுவர் கூறியதிலிருந்து; சமதர்ம சமுதாய நெறியைப் போற்றிப் பின் பற்றிய நாடு தமிழ்நாடு!

கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாண-யங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்தவற்றை விட, ரோமானிய நாணயங்கள் இந்தக் கொங்கு நாட்டுப் பகுதியில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ரோமானியப் பேரரசர்களான அகஸ்டஸ், டைபீரியஸ் காலத்து நாணயங்கள் பொள்ளாச்சியிலும்; ஜெர்மானியஸ், கிளாடியஸ் காலத்து நாணயங்கள் வெள்ளளூரிலும்; நீரோ, நெர்வா காலத்து நாணயங்கள் கலைய-முத்தூரிலும் கிடைத்துள்ளன. இதிலிருந்து, கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, மூன்று, நான்கு நூற்றாண்டுகள் ரோமர்கள் கொங்கு நாட்டுப் பகுதி-யுடன் வாணிகம் செய்து வந்தனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

கிழக்கே சீனா முதலிய பல நாடுகளுடனும் ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய தீவுகளுடனும் தமிழ்நாடு வாணிகம் காரணமாகத் தொடர்பு கொண்டிருந்தது.

தமிழர்களின் கலைத்திறன்கள் உலக அறிஞர்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இசை, நடன, நாடகக் கலைச் சிறப்புகளைச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை புலப்படுத்துகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணை தமிழரின் பொறியியல் கலைத் திறனுக்கு தகுதிமிக்க சான்றாக விளங்குகிறது. கி.பி.6ஆம் நூற்றாண்டு கால மாமல்லபுரச் சிற்பங்கள், தமிழரின் அரிய சிற்பக் கலைச் சின்னங்களாகத் திகழ்கின்றன. அழகோவியமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோவில் - 10ஆம் நூற்றாண்டில், கட்டடக் கலையில் தமிழகம் பெற்றிருந்த ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது.

தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முத்திரைக் குறியீடாக இலங்குவது தமிழ்மொழி. தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் நெறிகளால், நீதி நிர்வாக, அறநெறி வழிகளால், இன்னபிறவற்றால், மிக உயர்ந்த மாண்புகளைக் கொண்டுள்ளது செம்மொழியாகிய தமிழ்மொழி !

தமிழ் வளர்த்த மன்னர்களை போற்றி வணங்குகிறேன்

தமிழ்ச் செம்மொழியெனும் தகுதிபெறத்தக்க இலக்கியச் செல்வங்களைப் படைத்தளித்த சங்ககாலப் புலவர் பெருமக்களை - சான்றோர்களை - அவர்கள் அனைவரையும் ஆதரித்து தமிழ் வளர்த்த மன்னர்-களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்!

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட அறிஞர் டாக்டர் கால்டுவெல்; தமிழ்மொழியின் அருமைகளை அவனிக்கு எடுத்துரைத்த ஜி.யு. போப், வீரமாமுனிவர்; தமிழ் செம்மொழியே என அறிவித்த சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்; சங்க இலக்கியச் செல்வங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மீட்டெடுத்து, அச்சு நூல் வடிவம் பெறச்-செய்த டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர்; அவரைப் போலவே, தமிழ் நூல்களை ஆராய்ந்து, அச்சிட்டு அளித்த சி.வை. தாமோதரம் பிள்ளை; இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புத்துயிர் பெற உழைத்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடி-களார்; தமிழ்த் தென்றல் திரு.வி.க.; நாவலர் வேங்கட-சாமி நாட்டார்; மகாகவி பாரதியார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்; ஈழத்து தனிநாயகம் அடிகளார்; வ.அய்.சுப்ரமணியனார், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தந்த தந்தை பெரியார்; தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா போன்ற எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களையும் இந்த இனியவேளையில் நினைவு கூர்ந்து, வணங்கிப் போற்றுகிறேன்.

அரசர்களும், புலவர்களும், அறிஞர்களும், கவிஞர்-களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், பன்னாட்டு ஆய்வாளர்களும் வளர்த்து வாழ்வித்துள்ள அன்னைத் தமிழ்மொழியை, எதிர்வரும் காலத்தில், நாளும் மலரும் அறிவியல் புதுமைகளுக்கேற்ப, வளர்த்துக் கட்டிக் காப்போம்! வருங்காலத் தலை முறைக்கு வற்றாத செல்வமாய் வழங்கிக் களிப்போம்! என இந்த மாநாட்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடை- கின்ற இந்நாள் வரை, அல்லும் பகலும் அயராமல், ஒல்லும் வகையிலெல்லாம் ஓய்வின்றி உழைத்துப் பாடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துப் பாராட்ட வேண்டும்; ஆனால், அதற்கு நேரமும், இடமும் பொருந்தாத நிலையில் அனைவரும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து என்னை அணி செய்கிறீர்கள் என்னும் மகிழ்வோடு, உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டு-களையும், நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

தமிழக அரசின் சார்பில் நான் விடுத்த அழைப்-பினை ஏற்று, இம்மாநாட்டிற்கு வருகை தந்து, தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து, தமிழ்மொழியின் மேன்மைக்குப் பங்காற்றியுள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த - தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்துத் தமிழ் பேரறிஞர்களுக்கும், குறிப்-பாக, கோவை மாநகர மக்களுக்கும் எனது நன்றி-களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்-கிறேன். இந்த மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாக இருந்த மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களையும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், நான் மனமாரப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்-கிறேன்.

நமது அன்பான அழைப்பினையேற்று, இன்று இங்கே வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் நண்பர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும், நண்பர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். மாநாட்டைத் தொடங்கிவைத்து, உரையாற்றிய மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், தொடக்க விழாவில் கலந்து கொண்ட மேதகு தமிழ்-நாடு ஆளுநர் அவர்களுக்கும், எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவிப்புகள்

தமிழ்மொழி வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை யொட்டி, 26.6.2010 அன்று மாநாட்டுப் பந்தலிலே உள்ள தொல்காப்பியர் அரங்கில் பேராசிரியர் ஈழத்து கா.சிவத்தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்க அமைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும் பொது மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்-களின் அடிப்படையிலும்இங்கே நான் சில தீர்-மானங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட விரும்புகிறேன்:

1. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் தமிழகத்தைச் சூழல் இயலின் அடிப்-படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நமது முன்னோர் அய்ந்திணை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு சூழல் இயல்பகுதியும், அதற்குகந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்டவை. இந்த இயற்கை வளம் - உணவு உத்தர-வா-தத்திற்கும், உடல் நலம் காப்பதற்கும், சித்த மருத்து-வத்திற்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளன. அய்க்-கிய நாடுகள் மன்றம் 2010ஆம் ஆண்டினை உலக உயிரியல் பன்மை ஆண்டு என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில், அய்ந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி அவர்கள் இந்தப் பாரம்பரிய மரபணுப் பூங்காக்களின் அமைப்பாளராக இருப்பதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 2. இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல இயலாமல் இன்னமும் முகாம்களில் தங்கவைக்கப்-பட்-டிருப்பதும், முகாம் களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்-வாழ்வும் பாதுகாப்பும் உறுதியளிக்கப்பட்டு முழுமையான அளவுக்கு மறுகுடியமர்த்தம் செய்யப்படாததும், இலங்கை தமிழ் மக்கள் தமது மொழி இன உரிமையை நிலை நாட்டிக் கொள்வதற்கு அவர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கோரிவரும் அரசியல் தீர்வு காணப்படாததும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்-கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்-படாததும்; கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திரண்டுள்ள இலட்சோ-பலட்சம் உலகத் தமிழர்களுக்கு வேதனையைத் தரு-கிறது. எனவே, இலங்கைத் தமிழர்களின் அனைத்-துப் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலி-யுறுத்திட வேண்டுமென்று; இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டு-மென்பது தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும், மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்ட-மாக - செம்மொழியாம் எம் தமிழ்மொழியை மத்திய ஆட்சிமொழியாக ஆக்கவேண்டுமென்று; கோவை-யில் நடைபெறும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்-கிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு பயன்பாட்டு மொழியாக அங்கீகாரம்

4. சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்-பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டு-மென்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறை-வேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரை-யினையும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே, தாமதமின்றி உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீ-கரிக்கப்பட வேண்டுமென்று; இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

5. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று; தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத் தொகையினை வழங்கிட முன்வர வேண்டு-மென்று இந்த மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

6. இதுவரை இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்ந்து தோராயமாக ஒரு இலட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள், குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்-வெட்டுகள் ஆகும். இதனையும், இனிக் காணப்பெற வேண்டிய தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கையை-யும் கருத்தில் கொண்டு; மத்திய அரசு உருவாக்க முடிவு செய்துள்ள இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறு-வனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென, இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, ஏற்கனவே நான் எழுதிய கடிதத்தில், எழுப்பியுள்ள கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டுமென்று இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

7. கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடத் தேவையான திட்டம் வகுத்துச் செயல்படுத்திட வேண்டு-மென்று மத்திய அரசை, இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8. தமிழகத்தின் ஆட்சிமொழியாக - நிருவாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்டநாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதனை நிறைவேற்றிட தமிழக அர-சுக்கு, அலுவலர்களும், பொது மக்களும் தேவை-யான ஒத்துழைப்பு வழங்கிச் செயல்பட வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்

10. தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்-பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் வைரமணிமொழிகளை வையகத்திற்குத் தந்துள்ள கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் விருதும், பாராட்-டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க, இன்றைய நிகழ்ச்-சியில் அந்த விருதும், ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் பனேசியோ டிரீம் வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இந்த மேடையிலே வழங்கப்-பட்டுள்ளது. இந்தப் பரிசளிப்பு ஆண்டு தோறும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

11. தமிழகத்தின் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில்; தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். 12. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்று மதுரை மாநகரில் தொடங்கப்பெற-வுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் பின் வரும் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றும்:-

(1) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்து-வதற்-கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்; இப்போது இந்த உலகத் தமிழ் மாநாடு பதினைந்து ஆண்டு கால இடைவெளிவிட்டு, இதுவரை நடைபெறாமல் இருந்து இப்போது தான் நடைபெறுகிறது. இனி இப்படிப்பட்ட இடைவெளிகள் ஏற்படாமல் குறிப்பிட்ட கால இடை வெளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

(2) திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைத்தல்;

(3) தமிழ்மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கி அதனைப் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். (4) பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போலத் தற்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல்;

(5) மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்ற-வற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரியமுறையில் ஆதரித்து, அவர்களை தமிழ்மொழி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

(6) உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களைப் பற்றிய விவரத்துடன் கையேடு தயாரித்து வெளி-யிடுதல்; உலக அளவில் உள்ள தமிழ் அமைப்பு-களு-டன் தொடர்புகளை மேற்கொள்ளுதல்.

கோவையில் செம்மொழிப் பூங்கா

13. கோவையில் இந்த மாநாட்டின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யக்கூடிய செம்மொழிப் பூங்கா அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் களைய ஒரு மேம்பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கோவை மக்களிடையே உள்ளது, நகரின் மிக முக்கிய வணிகப் பகுதியான இங்கு பெரிய பேருந்து நிலையங்களும் இருப்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு குறுக்குச் சாலை மற்றும் நூறு அடிச்சாலை ஆகிய சாலைகள் சத்தியமங்கலம் சாலையைக் கடக்கக் கூடிய சந்திப்புக்களில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரும் மேம்-பாலம் ஒன்று சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

14. தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும், அய்ரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும்; பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்திடவும்; அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்-திடவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.

15. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக; தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் (திஸீபீ) உருவாக்கப் பட்டு உரிய முறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுத்தப்படும்.

நான் இங்கே செய்துள்ள இந்த அறிவிப்புகளுக்கு மத்திய அரசினுடைய உதவியும் எதிர்பார்க்கப்-படுகிறது என்பதையும் தெரிவித்து, அதை நிறை-வேற்றித் தர வேண்டும் என்று மத்திய அரசினுடைய நிதி அமைச்சர் அவர்களையும், அதற்கு துணையாக நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்களையும் பாடுபடவேண்டும், அதை நீங்கள் உங்களுடைய கைதட்டல் மூலமாக அதை தெரிவிக்க வேண்டு-மென்று (அப்போது மாநாட்டில் குழுமியிருந்த லட்சோப லட்சம் மக்கள் கை தட்டினர், மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள் துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கை தட்டினர்) அவர்களே கை தட்டுகிறார்கள். நன்றி.

இந்த மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து, பல நாடுகளிலிருந்து, தமிழகத்திலே கூட பல்வேறு மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், குக்-கிராமங்கள் இங்கெல்லாம் இருந்து தமிழை வாழ வைக்க, வலுப்பெற வைக்க, வளர வைக்க, இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுக்கெல்லாம் ஆதரவு தருகின்ற வகையிலே வந்து குவிந்துள்ள இலட்சக்கணக்கான உடன்பிறப்புக்களாகிய உங்களுக்கெல்லாம் நான் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தையும், என்னுடைய அன்பான நன்றியையும் நெஞ்சை பிளந்து காட்டி தெரிவித்துக் கொள்-கின்றேன்.

நீங்கள் மாநாடு முடிவுற்று இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஊருக்கு திரும்புகின்ற உடன்பிறப்புக்கள் செல்லுகின்ற கார்களெல்லாம் மிக மெதுவாகவும், வேகமின்றியும் அவசரப்படாமலும் மிகுந்த எச்சரிக்-கையோடு ஊர்களுக்கு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (கைதட்டல்) நீங்கள் பத்திரமாக ஊர் திரும்பினீர்கள் என்று கேள்விப்-பட்டால்தான் என் மனம் நிம்மதியாக இருக்கும். இல்லையேல், கவலையில்ஆழ்வேன் (பலத்த கைதட்டல்) என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அரசியல் சாயல் இல்லை

அந்த நிலையில் இந்த நான்கைந்து நாட்களாக கோவை மாநகரில் பத்திரிகைகளில் எல்லாம் கூட, பாராட்டி எழுதுகின்ற அளவிற்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற அளவிற்கும் மாநாடு நடைபெற்று, அரசியல் சாயலே இல்லாமல் கட்சி சாயலே இல்லாமல் தமிழர்கள், தமிழுக்காக கூடினார்கள் என்ற அந்த ஒரே குறிக்கோளுக்காகத்தான் இந்த மாநாட்டை நடத்தினோம். அந்த ஒரே குறிக்கோளை இன்றைக்கு நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். நிறைவேற்றுவதற்கான கால் நட்டிருக்கிறோம் என்ற அந்த உணர்ச்சியை பெற வேண்டும்.

நான் அய்ம்பது நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இந்த மாநாடு நடக்கின்ற இடத்தை காண வந்த போது, நானும் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் உள்ள நண்பர்களெல்லாம் அகன்று விரிந்த சாலைகளில் சென்றபோது சில இடங்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வண்ணக் கொடிகள் இருந்ததைப் பார்த்து - நாம் நடத்துகின்ற ஒரு பொது மாநாடு _- மொழி மாநாடு -_ நம்முடைய தாயை வணங்குகின்ற ஒரு நிகழ்ச்சி _- அதில் கட்சியின் சாயல் ஒரு குண்டு மணி அளவு இருந்தால்கூட கட்சி மாநாட்டை நடத்தினோம் என்ற களங்கம் நமக்கு ஏற்பட்டுவிடக் கூடும் என்பதற்காகத் தான் மறுநாளே நம்முடைய கழகத்திலே உள்ள தோழர்களுக்கு ஒரு அறிக்கை விடுத்தேன். இது வேண்டுகோள் _- இது கட்டளை அல்ல என்று கனிவோடு நான் விடுத்த அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் நம்முடைய கொடி ஒன்று கூட இருக்கக்கூடாது. காணும் இடமெல்லாம் தமிழ்க் கொடியைத்தான் காண வேண்டும் _- நம்முடைய மாநாட்டிற்கான அந்த சின்னத்தைத்தான் காண வேண்டும் என்று சொன்னேன்.

வெறும் அறிவிப்புகள் அல்ல!

என்னுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு எவ்வளவு கட்டுப்பாடானது இந்த இயக்கம் என்பதை நிலைநாட்டும் வகையில் இங்கே உள்ள - கோவையிலே உள்ள எல்லா கட்சிகளையும் சேர்ந்த செயல்வீரர்கள் - தமிழ்க் கொடியைத் தவிர, இந்த மாநாட்டுச் சின்னம் அமைந்த கொடியைத் தவிர, வேறு எந்த கொடியும் கட்டாமல் எந்த வண்ணத்தையும் காட்டாமல் நடந்து கொண்ட அந்த பாங்கு , என்னை மிக மிக மகிழ வைக்கின்றது. அதற்காக இன்னொரு முறை என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தை உங்களுக்-கெல்லாம் நான் தெரிவித்துக் கொண்டு, இந்த மாநாடு பூரிப்போடு, புன்னகையோடு, குதூகலத்தோடு, கொட்டு முழக்கத்தோடு தொடங்கி, இன்றைக்கு எழிலுடன் நிறைவுறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழை வளர்க்க, தமிழுக்கு வலு சேர்க்க, நாமெல்லாம் இந்த மாநாட்டிற்கு வந்தோம், கலைந்தோம் என்றில்லாமல் தொடர்ச்சியாக தொடர் பணிகளைத் தொடங்க வேண்டும்; அதற்கான தீர்மானங்களை இந்த மாநாட்டிலே நீங்கள் சொன்ன கருத்துக்களை தீர்மானங்களாக ஆக்கி நான் வழங்கியிருக்கின்றேன். மேலும் பல அறிவிப்புகளை செய்திருக்கின்றேன். அறிவிப்புகள் நிச்சயமாக நடைமுறைக்கு வரும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இடர்ப்பாடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மாநாடு நடத்தியவர்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சியைத் தந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை உங்கள் கால் மலர்களில் சமர்ப்பித்து இந்த அளவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

செம்மொழித் தகுதி பெற்ற ஒரு மொழிக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது இதுதான் முதல்முறை மத்திய அமைச்சர் ஆ.இராசா பேச்சு


உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு நினை-வாக சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய அமைச்சர்ஆ.இராசா வெளியிட முதலமைச்சர் கலைஞர் பெற்றுக்கொண்-டார். உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளி-யிட்டு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது,

வரலாற்று சிறப்பு மிக்க இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பு அஞ்சல்தலை-களை வெளியிடும் வாய்ப்பு கிடைக்க பெற்றமைக்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன். அஞ்சல்தலையை வெளியிட்டு முதலமைச்-சரை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த விழா அல்ல. அந்த பாராட்டுகளை முதல-மைச்சரும் விரும்பக்கூடிய-வர் அல்ல.

இந்தியாவில் அஞ்சல் துறை சார்பில் பல அஞ்சல்தலைகள் வெளி-யிடப்பட்டிருந்தாலும், செம்மொழி விழாவிற்காக எந்த அஞ்சல் தலையும் இந்திய அஞ்சல் துறை சார்பில் இதுவரை வெளி-யிடப்படவில்லை. முதன் முதலாக தமிழ்மொழி அந்த தகுதியை பெற்றுள்-ளது. தமிழுக்கு செம்-மொழி தகுதி அளித்தற்-காக இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்-கிறது. இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது ஏன் என்பது பற்றி இங்கு விளக்க கடமைபட்டுள்-ளேன். தலைவர் கலைஞர் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட மத்திய அமைச்சர் என்ற கடமை-யினால் அந்தக் காரணங்-களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அமெரிக்காவில் கறுப்-பர் இன விடுதலைக்காக போராடி தனது 35 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்ற கறுப்பு மனிதர் மார்ட்டின் லூதர்கிங். அதே கறுப்பர் இனத்தில் பிறந்த ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு பேசிய பேச்சு பிரகடன-மாக இருந்தது. இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். முஸ்-லிம்கள் இருக்கிறார்கள். யூதர்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் இருக்கிறார்-கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கி-றார்கள். இவர்கள் எல்-லோரும் சேர்ந்து ஒரு தேசத்தை கட்டமைத்து இருக்கிறோம். அந்த தேசத்துக்கான பண்பாடுகளை உலகின் மூலை முடுக்குகளில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்ற வர-லாற்று சிறப்பு மிக்க பிரகடனத்தை ஒபாமா தெரிவித்தார். இதன் மூலம் ஒரு பெரிய புரட்சியை அமெரிக்கா செய்து விட்டதாக சொல்-கிறது. ஆனால் அதை-விட பெரிய புரட்சியை இந்த மாநாடு பறைசாற்-றுகிறது. அது எது என்றால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கலைஞர் கொடுத்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க வரியினால். உலகின் தலை-யாய மொழியாக தமிழ் விளங்குகிறது.

இந்தியாவில் இரு கலாசாரங்கள் உள்ளன. அந்த இரண்டு கலாசாரங்-களுக்கும் இடையில் உரசல் இல்லை, ஊடல் இல்லை. சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு செம்மொழிகளும் இந்தி-யா-வின் தூண்கள் ஆகும். சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெற்றது. பல மொழிகள் இருப்பினும் தலையாய மொழியாக தமிழ் விளங்கி வருகின்-றது. இந்த மாநாட்டின் மய்ய கருத்தான பிறப்-பொக்கும் எல்லா உயிர்க்-கும் என்ற தத்துவத்தை கொடுத்த பெருமை திரா-விட இயக்கத்திற்கு உள்-ளது. அதை உலகம் முழு-வதும் இந்த மாநாட்டின் மூலம் கொண்டு சென்ற பெருமை தலைவர் கலை-ஞருக்கு உண்டு. தாழ்த்தப்-பட்ட சமுதாயத்தை புறக்-கணித்து வந்த இந்த நாட்டில் அதே தாழ்த்தப்-பட்ட இனத்தை சேர்ந்த என்னால் அஞ்சல்தலை வெளியிடப்படுவதற்கு கார-ணமாக இருந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

சிந்து சமவெளி நாகரிகம்- திராவிடர் நாகரிகம் என்ற கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பானது! மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து


திராவிடக் கலாச்சாரத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இருந்த தொடர்பு-களையும், அக்கால மக்களின் வாழ்க்கை, வரலாறு மற்-றும் காலம் ஆகியவற்றை சிறப்பான இம்-மாநாட்டில் வெளியிட்டு இருப்பது சிறப்பானது என்றார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

கோவை _ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதிலும், தலைமை தாங்குவதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்த-தற்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த நட-வடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் கலைஞரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அவரோடும், இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள ஏனைய அறிஞர்களோடும் இணைந்து தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கு ஒரு வகையில் அய்க்கிய முற் போக்குக் கூட்டணி துணை நின்றதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

பெரும் வெற்றி பெற்ற மாநாடு

இந்த மாநாட்டில் நடைபெற்ற ஆய்வரங்கங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள், 50_-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆய்வரங்கங்களில், பொதுவிவாதங்கள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல் ஆகியவற்றில் பல்-வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து-கொண்டு சொற்பொழிவாற்றி, விவாதித்து, ஆய்வுக் கட்டுரை-களை சமர்ப்பித்திருப்பதை அறிகிறேன். முதல்வர் கலைஞரையே மிகப் பெரிய அரசியல் மேதையாக, தமிழறிஞராக, கவிஞராக, தலைசிறந்த எழுத்தாளராக பன்முகங்களை பெற்ற ஒருவர். எனவே, இந்த மாநாட்டை அவர் திட்டமிட்டு வெற்றி கரமாக நடத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. தமிழக மக்கள் தங்களது சிறந்த பாரம்பரியத்தின் மூலமாக இந்திய வரலாற்றுச் செழுமைக்கு சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் நாகரிகம் இவற்றை பொறுத்தவரை இதுவரை காணாத புதிய உற்சாகத்தையும், எழுச்சியையும் எல்லா முனைகளிலும் பெற்றிருப்பதைக் காண முடி-கிறது என்று கலைஞர் முன்பு குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் இணைய வளர்ச்சிக்கு உதவும்

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் பர-வலாக பயன்படுத்தப்பட்ட பிறகு, இது உண்மை என்பதையும் உணரமுடிந்திருக் கிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும், உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. இந்த இணைய மாநாட்டுக்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்திருக்-கிறது. இந்த முயற்சிகள் எல்லாம் தமிழ் இணைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தமிழ் இணைய மேம்பாட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்த இணைய மாநாடு பெரிதும் உதவியிருக்கிறது.

வெளிநாட்டு அறிஞர்கள் பாராட்டு

இந்த இணைய மாநாட்டுக்குச் சிறப்பான வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த முயற்சிகள் எல்லாம் தமிழ் இணைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த மாநாட்டில் பல பன்னாட்டு தமிழறிஞர்கள் சொற்பொழிவாற்றி, தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்கள். ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல அறிஞர் அஸ்கோ பர்போலா, இம்மாநாட்டில் கலந்து-கொண்டு, சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு என்ற ஆய்வுக்கட்டுரையையும் சமர்ப்-பித்துள்ளார். அது திராவிட கலாசாரத்துக்கும், சிந்து-சமவெளி நாகரிகத்துக்கும் இருந்த தொடர்பினையும், அக்கால மக்களின் வாழ்க்கை, வரலாறு மற்றும் காலம் ஆகியவற்றை சிறப்பான முறையில் வெளிப்படுத்த பெரும் துணையாக உள்ளது. அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாகும். சங்ககால இலக்கியத்தில் இருந்த சிறப்புகள், அதன் சமகாலத்தில் இருந்த வேறு எந்த இலக்கியங்களிலும் காணமுடியாது என்று பர்போலா கூறியிருக்கிறார். இம்மாநாட்டில், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் ஹார்ட் கலந்து-கொண்டு தனது ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்-பித்தார். அதில் செம்மொழியின் தனித்துவமும், சங்க செய்யுள்களின் சிறப்பு குறித்தும், அவர் சொல்லியி-ருக்கிறார். அது சங்ககால மக்களின் வாழ்க்கை முறையையும் சிறப்பாக சொல்வதாக உள்ளது.

இக்கால தமிழ் நாவல்களில், பழைமை மாறாமல், சங்ககால வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படு-வதை பற்றி குறிப்பிடுகிறார். அந்த நாவல்களில் சங்க கால வார்த்தைகளை குறிப்பிட்டாலும், அதன்மூலம் அவற்றின் பொருள்களை தெளிவாக, துல்லியமாக அவர்கள் விளக்குவதை பார்த்து வியப்பதாகவும் ஹார்ட் கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகளில் பெரும்-பாலானவை சங்க இலக்கியங்களில் இருந்து பெறப்பட்டவையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ் மொழியின் வளர்ச்சியையும், அதன் தகுதியையும் உணர்ந்த யாராக இருந்தாலும், அதன் செம்மொழித் தகுதிபற்றி மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். உலகத்தில் படைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக சங்க இலக்கியம் விளங்குகிறது என்றும் ஹார்ட் கூறுகிறார். காரணம், அதில் காணப்படும் கருத்துக்கள் எவையும் கடன்-வாங்கப்பட்டவை அல்ல. அவை வாய்மொழியாகவும், இலக்கியம் மூலமாகவும், பரிணாம வளர்ச்சி மூலமாகவும், அந்த பழக்கவழக்கங்களும், நுட்பங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன என்கிறார்.

அத்துடன் மட்டுமல்லாமல், சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த வரலாற்றில், தெற்காசியாவில் உள்ள இலக்கியங்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஹார்ட் கூறுகிறார்.

ரஷியாவை சேர்ந்த பேராசிரியர் துபியான்ஸ்கி சங்ககால இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள புத்தகங்களை பற்றி விரிவாக ஆராய்ந்து, நூல்களை எழுதியிருக்கிறார். அது மட்டுமின்றி, பனைச்சுவடி-களில் இருந்த சங்க செய்யுள்களையும் ரஷிய மொழியிலும் மொழி பெயர்த்திருக்கிறார். எனவே, தமிழ் மொழிச் செம்மொழியாக உருவாகியிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

கண்காட்சி அரங்கம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் மொழி வரலாறு, கலாசாரத்தை விளக்கும் விதமாக பொது கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் தமிழ் இணைய கண்காட்சியும், புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த கண்காட்சிகள் மிகவும் பிரபலம் அடைந்து ஆயிரக்கணக்கான பார்வையா-ளர்கள், அவற்றை கண்டு ரசித்திருக்கிறார்கள். இவை, தொடர்ந்து மக்கள் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. அதன் காரணமாக இந்த கண்காட்சிகளை ஜூலை 4-ஆம் தேதிவரை நீட்டிக்க, அதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டின் தொடக்க நாளில் நடத்தப்பட்ட முக்கிய அம்சமான ``இனியவை நாற்பது என்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு, தமிழ் கலாசாரம், வரலாறு, நாகரிகம், இலக்கியம், பாரம்பரியம், கலை, கட்டடக் கலை ஆகியவற்றின் பல்வேறு வடிவங்கள் சிறப்பான முறையில் விளக்குவதாக இருந்தது.

இந்த கண்கவர் அணிவகுப்பானது சிந்தையைக் கவரும் வகையில் இருந்ததால், அதனை சாலையின் இருபுறங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

மாநாடு - சிறப்பான வெற்றி

முதல்வர் கலைஞர் எதையும் சிறப்பாக செய்பவர். அவரது சிறப்பான முயற்சி மற்றும் வழிகாட்டுதலால், இந்த மாநாடு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

இந்த மாநாடு இத்தகைய சிறப்பான ஒரு வெற்றி பெற சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருந்த மற்றவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் கற்ற பாடங்கள், பிற்காலத்தில் தமிழ்வளர்ச்-சிக்கு சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக, உதவியாக இருக்கும். _ இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

Monday, June 28, 2010

தமிழை செம்மொழியாக ஏற்கச் செய்த பெருமை கலைஞரையே சாரும்! செம்மொழி மாநாட்டில் நிதியமைச்சர் பேராசிரியர் உரை


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்வரங்க மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றிய நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள், தமிழை செம்மொழியாக ஏற்கச் செய்த பெருமைக்குரியவர் கலைஞர். செம்மொழியான தமிழுக்கு கிடைத்த வெற்றி. அந்தத் தமிழை தாய் மொழியாகக் கொண்ட சமூகத்திற்கும் கிடைத்த வெற்றி! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பேராசிரியர் ஆற்றிய உரை வருமாறு:

இந்த மகாநாட்டில் நடைபெறுகின்ற ஆய்வரங்கத்-தினுடைய தொடக்கமாக அமைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் - இதைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு ஆய்-வறிக்கை திரு. சிவத்தம்பி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் தயாரிக்கப்பட்டு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் மகாநாட்டிற்காக சிறப்பு மலர் ஆளுநர் அவர்களால் வெளியிடப்பட்டு முதல்வர் அவர்களிடத்திலே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எழுச்சி மிகுந்த மகாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்-கின்றன. பல மலர்கள் வண்ண மலர்களாக சிறு சிறு மலர்களாக எழுத்து ஓவியங்களாக நம்முடைய இனத்தை பெருமைபடுத்தும் முயற்சியாக உருவாகியிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தனிச்சிறப்பு மிகுந்த மாநாடாக இந்த மாநாடு விளங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மாநாடு நம்முடைய தாய்மொழியான தமிழுக்கு செய்கிற சிறப்புக்கு அடையாளமான மாநாடு. மனித வாழ்வில் தாய்மொழியை விட ஆழமான இடத்தைப் பெறக் கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. மனிதன் என்று சொல்கிறபோதே அவனவன் தாய்-மொழியோடு கலந்தவனாகிறான். தாய்மொழியோடு கலக்காதவன் தாய் மொழியின் அடையாளத்தை இழக்கிறான். இந்தத் தாய்மொழி நம்முடைய தாய்மொழி. இந்த தாய் மொழியிடத்திலே பற்றுடைய பெருமக்கள் செய்யுட்கள், பாடல்கள் அவற்றை-யெல்லாம் தொகுத்து எழுதிப் பார்ப்பீர்களேயானால் அது மிக விரிவுடையதாகும்.

இந்த தமிழ் அவ்வளவு இனிமையுடையது. அமுதத் தமிழ், இன்பத் தமிழ் என்றெல்லாம் பாராட்டப்படும் தமிழுக்கு அதன் ஏற்றத்தை உணர்த்தும் செம்மொழி மாநாடாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் அவர்கள் உரையாற்றுகிறபோது சொன்னதைப்போல இந்த மகாநாடு, முதல்வர் கலைஞர் அவர்களுடைய திட்டத்தின்படி பெரிய முயற்சியினாலே அவருடைய திறமையினாலே நடைபெறுகிற ஒரு வெற்றி மாநாடு என்ற கருத்தை குடியரசுத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு, இந்த மாநாட்டுக்காக அமைக்கப்பட்டி-ருக்கிற இந்த எழுச்சிப்பணி, தமிழ்ப்பணி, கலைஞர் அவர்களுடைய அற்புதமான திறமையினாலே உருவான ஒன்று என்பதையும் அவர் எடுத்துக்காட்டி பாராட்டினார். அப்போது அவர்கள் சொல்கிற-போது, பல ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து 19 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வர் பொறுப்பை ஏற்று நிருவகித்து அப்படிப்பட்ட பணி-களுக்கு இடையில் தமிழ் தொடர்பான பல்வேறு துறைகளிலும் ஆற்றல் மிக்க ஒருவராக பல திறம்வாய்ந்த ஓர் தமிழ் அறிஞராக கலைஞர் அவர்கள் விளங்குவது மிகப்பெரிய பாராட்டுக்-குரியது என்று குறிப்பிட்டார்கள். அதை நான் இங்கே சொல்வதற்குக் காரணம் தேசியக் கவி பாரதியாரைப் பற்றி புரட்சிக்கவிஞர் சொன்னார். பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும், தமிழால் பாரதி தகுதி பெற்றதும் என்று சொன்னார். அதைப்போல தமிழ் செம்மொழியால் கலைஞர் தகுதி பெற்றதும், கலைஞடைய திறனால் தமிழ் செம்மொழி பெற்றதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. தமிழுக்கு செம்மொழி தகுதி இயற்கை என்று சொன்-னா-லும்கூட அது அதனுடைய வளத்தோடு ஒட்டி-யது என்றாலும் கூட அதற்கு திருக்குறள் ஒன்றே போதும் என்று வாதிட்டாலும்கூட, தங்கத் தமிழ் செப்பாத செம்மொழியா என்று கேட்டாலும்கூட, தொல் காப்பியம் இருக்கிறபோது அதை மிஞ்சு-வதற்கு வேறு என்ன இருக்கிறது என்று சொன்னா-லும்கூட, அவற்றையெல்லாம் மிஞ்சி தமிழை செம்மொழி என்று ஏற்காத உலகம் இருந்தது. ஏற்க மறுத்த நிலைகூட இருந்தது. அதை எற்கச் செய்த பெருமை கலைஞருடையது. அவருடைய தொண்டு, திறமை, ஆற்றல்தான். இன்னும் சொல்லப்போனால் அறிஞர் அண்ணா கலைஞர் அவர்களிடத்திலே ஒப்-படைத்த ஆற்றல், இந்த இயக்கத்தின் மூலமாக அவர் பெற்ற உணர்வு, அவரே தனது தலைமை உரையிலே சொன்னதைப் போல இளமையிலே இருந்து அவர் பெற்ற பயிற்சி, ஊக்கம், ஆர்வம்தான் தமிழுக்கு அந்த ஏற்றத்தைத் தந்திருக்கிறது. தமிழ் இந்த வாழ்வைப் பெற்றிருக்கிறது.

நிறைவான வெற்றி

நம்முடைய வா.செ. குழந்தைசாமி அவர்கள் பேசுகிற போது சொன்னார்கள். ஒரு நிறைவான வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். இன்னும் தொடர வேண்டிய போராட்டம் இருக்கிறது என்றும் சொன்னார்கள். நமக்கு வெற்றி; ஆனால், நம்முடைய வெற்றியை நிலை நாட்ட விடுவார்களா? என்பது வேறு பல எண்ணங்கள் காரணமாக குறுக்கீடு இருக்கிறது. உண்மையாகவே தமிழ் மொழி செம்மொழி என்ற பெயரை அது இயற்கையிலேயே பெற்றது.

அமிழ்தமிழ்து என்று உரைத்தாலே அதில் தமிழ் என்ற உச்சரிப்பு வருமென்று கவிஞர்கள் சொன்-னார்கள். தமிழ்தான் அமிழ்து, அமிழ்துதான் தமிழ். தமிழுக்கு அமிழ்தென்று பேர், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றெல்லாம் பாடினார்கள். அந்தத் தமிழ் தொடக்க காலத்திலேயிருந்து தமிழகத்திலே செந்தமிழ் என்றும் கொடுந்தமிழ் என்றும் விளங்-கியது. என்ன காரணத்தாலே என்றால் இலக்கணத்-தோடு நெருங்கி வருகிற நடை ஒத்துப்போகிற நடை. ஒரு பொது நடை அது செந்தமிழ் நடை, ஒத்துப்-போகாத நடை கொடுந்தமிழ் நடை என்று பிரிக்கப்-பட்டது. ஒரு வகையிலே வட்டார மொழிகளாக வழங்குகிற மொழி களெல்லாம் கொடுந்தமிழாக அந்தக் காலத்திலேயே சித்திரிக்கப்பட்டது.

ஆனால், இலக்கியத்தோடு தொடர்புடைய அந்த மொழி செந்தமிழாக ஏற்கப்பட்டது. ஆனால் செந்தமிழாக ஏற்கப்பட்டாலும் இந்திய மொழி-களோடு ஒரு மொழியாக எண்ணப்பட்ட காரணத்-தால் பரிதிமாற் கலைஞர் விரும்பியதற்கு மாறாக இந்திய மொழிகளிலே ஒன்று தமிழ்; ஆகவே இது ஒரு வட்டார மொழி என்று கருதப்பட்ட காரணத்-தால் செம்மொழிச் சிறப்பு செந்தமிழுக்குக் கிடைக்-க-வில்லை.

இந்த கலைஞர் முடித்து வைக்கிற...

எனவேதான், தமிழ்மொழியினுடைய உயர்வுக்காக நடைபெறுகிற போராட்டத்தில் பரிதிமாற் கலைஞர் தொடங்கி இந்த கலைஞர் முடித்து வைக்கிற இந்த போராட்டத்தில் தமிழ் செம்மொழி என்பதை மத்திய அரசு ஏற்று அறிவித்து உலகமெல்லாம் வரவேற்கக் கூடிய நிலை இருந்தாலும்கூட இந்த செம்மொழி தமிழ். தமிழர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கின்ற மொழி. செம்மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளித்-தாலும்கூட ; இது வெறும் மொழியினுடைய வெற்றி-யல்ல. தமிழ் மொழி யினுடைய தனி வெற்றி அல்ல. தமிழ் மொழியை தாய் மொழியாகப் பெற்ற சமூ-கத்தினுடைய வெற்றி.

தமிழ்மொழியே தாழ்ந்த மொழி. அதைப் பேசுகிற மக்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணப்பட்ட காலம் ஒன்று இருந்த காரணத்தால்தான். மேல் நாட்டு அறிஞர் ஜி.யு.போப் சொன்னார், நாலடியாரும், திருவாசகமும் திருக்குறளும் போல அறநெறி உரைக்கின்ற நூல்களை தன்னுடைய தாய்மொழியாக பெற்றிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் எவ்வகையிலேயும் பிற மொழியைவிட தங்களுடைய தாய்மொழி தமிழ் என்று எண்ணி தலை குனிந்து நடக்கத் தேவை-யில்லை. பிற மொழிகளை உயர்வென்று கருதி தமிழை தாழ்வென்று கருதி தலை குனிந்து நடவாதீர்கள் என்று ஜி.யு.போப் நம்மவர்களுக்கு அறிவுரை சொல்-லக்கூடிய அளவிற்கு அந்த தமிழ் அதைப் பேசுகிற மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தார்கள்.

நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். உயர்ந்த கருத்துக்களின் உறைவிடம் தமிழ். ஞான முதல் மொழி தமிழ்மொழி. மிகச்சிறந்த கருத்துக்-களுக்கு இருப்பிடமான மொழி தமிழ்மொழி. அந்த உயர்ந்த கருத்துக்கள் உலகத்திற்கு அறிய அறியத்தான் திருக்குறளை அறிந்து தான் தமிழை அறிந்தார்கள். தொல் காப்பியத்தை அறிந்துதான் தமிழின் தொன்-மையை ஏற்றார்கள். மேல் நாட்டு அறிஞர்கள் எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு அந்த இலக்கியங்கள் துணை நின்றன. அந்த இலக்கியங்கள் வழியாக தமிழனு-டைய பெருமை உலகத்திலே நிலை நாட்டப்பட்டது.

அது ஞான முதல் மொழி. இந்திய மொழி-களி-லேயே முதன்மையான மொழி என்பதைவிட தொன்மை வளம் பெற்ற மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி. இலக்கிய வளம் பெற்ற மொழி, இயல், இசை, கூத்து என மூன்றாக வளர்ந்த மொழி. இன்றும் வாழ்கிற மொழி. இலக்கியச் செம்-மையுடைய மொழி, ஊடயளளஇஉயட டுயபேரயபந என்பதெல்லாம் என்றோ வாழ்ந்த மொழியாக இருக்க வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து தமிழ் மொழியை புறக்கணிக்கக்கூட காரணமாக இருந்தது. அதைப் பரிதிமாற் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார். இந்தத் தமிழ் வாழ்கிறது என்ற காரணத்தால், பேசுகிறோம் என்ற காரணத்தால் - இலக்கிய மொழி-யாக classical language ஆக ஏற்கப்படக்-கூடாதா? என்ற கேள்வியை அவர் கேட்கிறார். ஆகவே அப்படிப்பட்ட மொழி நம்முடைய தாய்மொழி. அதிலே உயர்ந்த கருத்துக்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன.

நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். ஒரு பாடல் நேற்றும்கூட இங்கே அறிஞர்களாலே மகாநாட்டிலே எடுத்துச் சொல்லப்பட்டது.

உண்டால் அம்மஇவ் உலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலும் இவர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

தமக்கென்று வாழாமல் சுயநல நோக்கத்தோடு வாழாமல் பிறக்கென்று வாழ்கிறவர்கள்; இந்திரனு-டைய அமிழ்தம் கிடைத்தால்கூட தான் மட்டுமே உண்டு மகிழாமல் பலரோடும் பகுத்து உண்கிற மனப்பக்குவம் பெற்றவர்கள். பழி என்று சொன்னால் உலகமே கிடைத்தாலும் ஏற்காதவர்கள், புகழ் என்றால் உயிரும் தருபவர்கள் என்று சொல்லப்-பட்டுள்ளது

இன்னொரு பாடல் யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று இந்த இரண்டு பாடல்களையும் இணைத்துப் பார்ப்பீர்களேயானால் எப்படிப்பட்ட உச்சமான நிலையில் தமிழன் வாழ்ந்தான் பொது நோக்கத்தில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டவன். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தான். தீதும் நன்றும் பிறர்தர வாராது என்று கருதியவன். இப்படி உயர்ந்த எண்ணங்கள் மலர்கிற சோலையாக நம்முடைய செம்மொழி தமிழ் விளங்குகிறது. தொடர்ந்து விளங்கும் வளரும்; வாழும். வாழ்த்துவோம்! வணக்கம்! இவ்வாறு பேராசிரியர் உரையாற்றினார்.

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" சிறப்புக் கருத்தரங்கில் கி.வீரமணி உரை


கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நெருக்கடியான காலம்

நெருக்கடி காலத்தைச் சந்தித்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது காலத்தின் நெருக்கடியைச் சந்திக்கின்ற வேளையில் நான் உங்கள் முன்னாலே நிற்கின்றேன்.

மக்கள் கடல்

இவ்வளவு பெரிய மக்கள் கடலைக் கூட்டி தமிழர்களின் உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளமாக ஈரோட்டுக் குருகுலப் பயிற்சியையும், காஞ்சிக் கருவூலத்தினுடைய சிறப்பான பாடங்களையும் உள்ளடக்கி இது வருமா? வராதா? என்று பல பேர் நினைத்த அந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி மிகப்பெரிய அளவிலே தமிழ் செம்மொழி என்பது கனவல்ல அது பெரும் திட்டம், இதோ வந்துவிட்டது என்பதைக் காட்டி, செம்-மொழியால் உயர்வு பெற்ற தமிழர்கள் நன்றி உணர்ச்சிக்காகக் குழுமியிருக்கின்ற மாநாடு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகும். முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

அத்தகைய பெருமைக்குரிய முதல்வர் கலைஞர் அவர்களே! இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு பல அறிவார்ந்த கருத்துகளை எடுத்து வைத்திருக்கின்ற அருமைத் தலைவர் பெருமக்களே!

தமிழ் இனத்தின் மீட்சிக்கான மாநாடு எதிரே இருக்கக் கூடிய ஆற்றல்மிகு இந்த மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளமாக அமர்ந்திருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களே! பல பேரை உருவகப்படுத்துவதற்குப் பதிலாக ஒருவரைச் சொன்னால் போதும் என்கிற வகையிலே_ஆற்றல் வாய்ந்த துணை முதலமைச்சர் அவர்களே!

நம்முடைய இனமானப் பேராசிரியர் உள்பட அனைத்து அமைச்சர் பெருமக்களே! வெளிநாடுகளி-லிருந்து வந்து கூடியிருக்கின்ற உலகத்தின் தமிழ் உறவுகளே! தாய்மார்களே! பெரியோர்களே! நண்-பர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

காலத்தால், கருத்தால், வளத்தால் மூத்த-மொழி-யான முத்தமிழ் என்ற முத்திரை பதித்த எம்மொழி செம்மொழி என்று பிரகடனப்படுத்தக் காரணமான, அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும், அதேபோல அந்த அறிஞர் பெருமக்களுடைய சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக்கி இப்பொழுது நடைமுறையிலே சட்டபூர்வமாக அதனை அறிவிக்க முயற்சி எடுத்ததோடு இல்லாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தலைப்பில் இங்கே சிறப்புக் கருத்தரங்கத்தை உருவாக்கி, இந்த மாநாடு கூடிக் கலைகின்ற மாநாடு அல்ல; அல்லது காட்சிக்காக இருக்கின்ற மாநாடு அல்ல. தமிழ் இனத்தின் மீட்சிக்காக இருக்கின்ற மாநாடு என்பதை உறுதி செய்யக் கூடிய அளவிலே_நல்ல திட்டத்தை உருவாக்கி_தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலே எப்படி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கும் தமிழ்_எதிலும் தமிழ் என்ற அடுத்த கொள்கைத் திட்டத்தை_அடுத்த இலக்கை நாம் எப்படி அடைவது என்பதை ஆய்வு செய்வதற்காக இங்கே அருமையாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணத்தோடு கூடியிருக்கின்றோம்.

திராவிடர்களுடைய அடையாளம்

திராவிடர்களுடைய அடையாளம்_திராவிடம் என்பது எவ்வளவு பெரிய எழுச்சியை உருவாக்கி-யிருக்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்து அதிலே எப்படி ஓர் எழுச்சியை உருவாக்கினார்களோ, அதே போலத்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்ற சிறப்பினை மிகத் தெளிவாக இங்கே உருவாக்கியிருக்கின்றார்கள்.

நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையிலே இது வெறும் செம்மொழி மாநாடு என்றால் மொழியி-னுடைய சிறப்புகள், ஆற்றல்கள், திறமைகள் இவற்றை எல்லாம் மட்டும் எடுத்துச் சொல்லுகின்ற மாநாடு அல்ல. இது மீட்சிக்குரிய மாநாடு.

நூறு ஆண்டுக்கு முன்னால் என்ன நிலை?

அருமை நண்பர்களே! ஒரு நூறாண்டுகளுக்கு முன்னாலே நீதிக்கட்சி, அதே போல திராவிடர் இயக்கம்_சுயமரியாதை இயக்கம் இந்த நாட்டிலே பிறப்பதற்கு முன்னால் அதனுடைய பணிகள் தந்தை பெரியார் அவர்களாலே, பேரறிஞர் அண்ணா அவர்களாலே, இன்றைய முதல்வர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்திலே தமிழ்க்கொடியை ஏந்தினார்களே, அந்தக் காலகட்டத்திலே எல்லாம் இருந்த சூழ்நிலை என்ன?

இன்றைக்கு செம்மொழி என்று பாராட்டக் கூடிய அளவிற்கு உலகம் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஏற்கெனவே அதற்கு அந்தத் தகுதி இருந்தாலும் கூட, இன்றைக்கு பெருமையாக அது அதிகார பூர்வமான தகுதியைப் பெறக்கூடிய அளவிலே இருக்கக் கூடிய எம்மொழி_தமிழ் மொழி_மூத்த மொழி. காலத்தால் மூத்தது; கருத்தால் மூத்தது; வளத்தால் மூத்தது என்ற பெருமை எல்லாம் இருந்தாலும் இந்த மொழிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே என்ன பெயர்?

நீச்ச பாஷை

நீச்ச பாஷை கோயிலுக்குள்ளே அனுமதிக்கப்-படாத ஒரு மொழி. சாதாரணமாக கீழ் ஜாதிக்-காரர்கள் பேசக் கூடிய ஒரு மொழி. அதுமட்டுமல்ல; இது சூத்திர மக்களுடைய மொழி என்றெல்லாம் ஜாதியை அடையாளப்படுத்தி அந்த வகையிலே கீழ்மைப்படுத்தப்பட்ட மொழி_இன்றைக்கு எல்லோராலும் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும், எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மொழியை நீச்ச மொழி என்று சொல்ல முடியாது; சூத்திர மொழி என்று சொல்ல முடியாது. செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்ற அடித்தளத்தை உருவாக்கிய கலைஞர் அவர்களே! உங்களுக்குத் தமிழ் இனத்தின் சார்பாக எங்கள் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்-கொள்கின்றோம்.

மொழி காலத்திற்கேற்ப மாற வேண்டும்

இது வரையிலே இனத்தின் மரியாதை குறைந்திருந்தது. ஒரு மொழி என்று சொல்லும்-பொழுது அந்த மொழிக்கு இருக்கின்ற சிறப்பு என்னவென்று சொன்னால், அதனுடைய ஆற்றல் மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்லுவார்கள்: மொழி என்பது ஒரு போராட்டக்கருவி. அந்தப் போராட்டக் கருவி என்பது காலத்திற்குக் காலம் மாற வேண்டும். உங்களுடைய அற்புதமான கருத்துகளை ஆய்வரங்கத்திலே மிகத் தெளிவாகச் சொன்னீர்கள். அதைத்தான் இந்த மாநாட்டின் முத்தாய்ப்பாக எங்களைப் போன்றவர்கள் எடுத்துக்கொள்கிறோம். என்ன?

தமிழை 21ஆம் நூற்றாண்டிற்கு தயார் செய்யுங்கள்!

இருபத்தோராம் நூற்றாண்டிற்குத் தமிழை தயார் செய்யுங்கள். இதுதான் முக்கியமானது. அந்த ஆய்வரங்கத்திலே சொன்ன கருத்துகளோடு உலக அறிஞர்கள் சொன்ன கருத்துகள். தமிழ் நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துகள்_ எடுத்து வைத்த சிந்தனைகள்_இவைகளை எல்லாம் மய்யப்படுத்தி நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, ஒன்றை துணிந்தே சொன்னீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும் கூட நீங்கள் இந்த மாநாட்டை நடத்தக் கூடியவராக இருந்தாலும்கூட, நீங்கள் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தாலும்கூட, என்ன சொன்னீர்கள்?

எங்களுக்கு ஆணையிடுங்கள்

ஆய்வரங்கத்திலே நீங்கள் சொன்னீர்கள், புலவர் பெருமக்களே, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெரு-மக்களே, ஆணையிடுங்கள்! எங்களுக்கு ஆணை-யிட்டுக் கருத்துகளைச் சொல்லுங்கள்! என்று சொன்-னீர்கள். அதைச் செய்வதற்கு நாங்கள் இருக்-கின்றோம் என்று சொன்னீர்கள்.எனவே அப்படிப்பட்ட கருத்துகளை ஆணை-களாக எடுத்துக்கொண்டு மிகப்பெரிய அளவிலே எடுத்துக்கொண்டு செய்ய வேண்டிய காலகட்டம் இன்றைக்கு நம்முடைய நாட்டிலே இருக்கின்றது.

பெருமைப்படுவதா? துன்பப்படுவதா?

இது ஒரு வேதனையான அம்சம்தான். நாம் தமிழ்நாட்டிலே வாழுகின்றோம். தமிழ் மக்கள் வாழுகின்றோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உத்தரவு போடுங்கள், ஆணையிடுங்கள் என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டிய நிலையிலே இருக்கின்-றோமே, அதை நினைத்துப் பெருமைப்படுவதா? அல்லது துன்பப்படுவதா? துயரப்படுவதா? இதைத் தான் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவேதான் செம்மொழி மாநாடு என்று சொன்னால் அது வெறும் மொழிப்பெருமையைச் சொல்லுவது அல்ல. மீட்சி வரவேண்டும் என்று சொல்லுவதுதான் முக்கியம்.

மணக்க வரும் தென்றலிலே

குளிரா இல்லை?

தோப்பிலே நிழலா இல்லை?

தனிப்பெரிதாந் துன்பமிது

தமிழ்நாட்டின் தெருக்களிலே

தமிழ்தான் இல்லை

இதுதான் மிக முக்கியம்.

தமிழர்களை அடையாளம் காண வேண்டுமா?

நான் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கும்பொழுது பார்த்திருக்கின்றேன். தமிழ்நாட்டிலே இருந்து, வங்காளத்திலே இருந்து, ஆந்திராவிலே இருந்து, கேரளத்திலே இருந்து, கன்னடத்திலே இருந்து, ஏனென்றால் ஒருவர் இன்னொருவரிடம் பேசும்-பொழுது அந்த மொழியிலேதான் பேசுவார்கள்.

ஆனால் உலகத்திலே தமிழர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும் என்று சொன்னால், ரொம்ப சுருக்கமான வழி ஒன்று உண்டு என்ன-வென்று சொன்னால் இரண்டு பேர் ஆங்கிலத்திலேயே பேசினால் அவர்கள் தமிழர்கள், அவர்கள் தமிழ்-நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது வெட்கப்பட வேண்டியதா? அல்லது மகிழ்ச்சியூட்டக் கூடியதா? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே ஆழமாகச் சிந்திக்கின்ற நேரத்திலே மிக வேகமான சிந்தனை நமக்கு வரவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

எதற்கும் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்ல வேண்டிய அளவிற்கு வந்தது? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு அந்தப் படையெடுப்பின் காரணமாகத்-தான் தமிழ் வீழ்ந்தது. ஏனென்றால் சோழன் காலத்தில் தமிழ் இல்லையா? சேரன் காலத்திலே தமிழ் இல்லையா? பாண்டியன் காலத்தில் தமிழ் இல்லையா? அவர்கள் காலத்தில் தமிழ் இருந்தது. பண்பாட்டுப் படையெடுப்பு உள்ளே நுழைந்த காரணத்தால், நுழையக் கூடாதது., நுழைந்தால் நடக்கக் கூடாதது நடந்தது.

முட்டுக்கட்டைகள்

எனவேதான் செம்மொழி எம்மொழி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்கமிட்டால் போதாது. தமிழ் இருக்கின்றது. அந்தத் தமிழுக்கு எங்கெல்லாம் முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் நீக்கினாலொழிய வேறு வழி கிடையாது. வரலாறுகள் திரிபுவாதத்திற்கு ஆளாகக் கூடாது. நம்முடைய கருவிகள் அற்புதமான இசைக்கருவிகள்தான். ஆனால் வரலாறு என்ன?

தீட்டாயிடுத்து என்று எழுதியவர்தான்

தமிழ் பாடிய மேடை தீட்டாயிடுத்து என்று சொல்லும்பொழுது தீட்டாயிடுத்து என்று எழுதிய கலைஞர் அவர்கள்தான் இன்றைக்கு செம்மொழியைக் கொண்டு வந்திருக்கின்றார். அதுதான் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்தக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்த லட்சியத்தின் வெற்றி. இப்படி வெற்றிகளுக்கு மேல் வெற்றி வந்தால் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வரும். ஏனென்றால் தடையாக உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இன்னமும் கூட என்ன சொல்லுகிறார்கள்? கருநாடக சங்கீதம்_அதுதான் சங்கீதம் என்று தமிழ் இசைக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் யார் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பேராசிரியர் பெருமக்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாகச் சொல்லுவார்கள்.

தமிழிசை வளர்த்த மும்மூர்த்திகள்

தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? செம்மொழிச் சிறப்பு என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தப் புதை பொருள்களை மீண்டும் நாம் மீட்டெடுத்துப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தமிழன் உள்ளே புக வேண்டும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆக்கினீர்கள். தமிழ் உள்ளே புகுந்தது. ஆனால் தமிழன் இன்னும் உள்ளே புகவில்லை. என்னுடைய அருமை நண்பர் பேசும்பொழுது சொன்னார். தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று சொன்னார். லும் போட்டுச் சொல்லக் கூடிய நிலை இருந்தது. கலைஞர் முதல்வராக வந்த பிற்பாடுதான் அந்த லும் என்பதை எடுத்துவிட்டார். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று ஆணையிட்டார். ஏனென்றால் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொன்னால் போதுமா? நேரத்தின் நெருக்கடி கருதி சில கருத்துகளை மாத்திரம் சொல்லி முடிக்கின்றேன்.

இது கணினி யுகம். நம்முடைய பழம் பெருமை-களை மட்டும் பேசினால் போதாது. நம்முடைய வலிமை எங்கேயிருக்கிறதென்று சொன்னால் இந்தக் கால ஓட்டத்திலே நாம் சந்திக்க வேண்டியவைகளை சந்திக்க வேண்டும். பழம்பெருமை ஓர் இனத்திற்கு_-ஒரு மொழிக்குத் தேவை. அதை அறவே நாம் ஒதுக்கிவிட முடியாது. அதைத் தாண்டித்தான் நாம் செம்மொழியைப் பெற்றிருக்கின்றோம். இதுதான் செம்மொழிக்கு அடித்தளம். ஒப்புக்கொள்கின்றோம்.

உரத்தை உணவாகக் கொள்ளக் கூடாது

ஆனால் அந்தப் பழம்பெருமை எப்படியிருக்க வேண்டும்? வயலுக்கு உரமாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பழம் பெருமையே இன்றைக்குத் தமிழனிடத்திலே பல நேரங்களிலே உணவாக இருக்கிறது. எனவே உரத்தை உணவாகக் கொள்ளா-தீர்கள். உரத்தை உரமாக வைத்துக்கொள்ளுங்கள். அதை, உணவை உருவாக்குவதற்குரிய உரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழை நவீன உலகத்திற்கேற்ப.....

எனவே தமிழை நவீன உலகத்திற்கு_21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னார்களே, அது தான் மிக முக்கியம்.

கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சி மொழியாகத் தமிழ், பயிற்று மொழியாகத் தமிழ், நீதி மன்ற மொழியாகத் தமிழ். பல மாதங்களுக்கு முன்னாலே முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலே, தீர்மானம் நிறைவேற்றி யிருக்கின்றார்கள். குடியரசுத் தலைவரிடம் பேசியிருக்கின்றார்கள். இந்த முறை அல்ல; அதற்கு முன்னாலேயே பேசியிருக்கின்றார்கள். மத்திய சட்ட அமைச்சரிடம் நீதிமன்றங்களிலே தமிழ் வாதாடக் கூடிய மொழியாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

சட்ட விரோதமல்ல

இது சட்டப்படி விரோதமல்ல. அரசியல் சட்டப்படி நமக்கு யாரும் காட்ட வேண்டிய சலுகை அல்ல. பிச்சை அல்ல. இது நமது உரிமை. தமிழனுக்கு இருக்கின்ற பல்வேறு கோளாறுகளில் ஒன்று எது? சலுகை. எது உரிமை என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாத வேதனையான நிலையில் இருக்கின்றோம்.

அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை

அரசியல் சட்டம் 348ஆவது பிரிவின்படி மாநில ஆட்சி மொழி அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பீகார் மாநிலத்திலே, ராஜஸ்தான் மாநிலத்திலே, மத்திய பிரதேசத்திலே, உத்தரப்பிர-தேசத்திலே அதே போல பல மாநிலங்களிலே இந்தி வழக்காடு மொழியாக இன்றும் இருக்கிறது.

எனவே இது ஒன்றும் பெரிய பெருமை அல்ல. வேறு எதுவும் கிடைக்காதவர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராக இதையாவது பிடிக்கலாமா? என்று கருதுகின்றார்கள்.

மரக்கிளையில் பழம்!

அவர்களுக்குத் தெரியும், பழம் விழப்போகின்றது என்று. காக்கை மரக்கிளையில் உட்கார்ந்தால் எங்களால்தான் இந்தப் பழம் விழுந்தது என்று. ஆகவே அவரால் முடியாதது ஒன்றுமில்லை. காரணம் தமிழால் முடியாதது என்பதல்ல. சுயமரியாதை உணர்வோடு அவர்கள் எதையும் சிந்திக்கக் கூடியவர்கள். ஆகவே வழக்கறிஞர்கள் தெளிவாக இருக்கலாம். தமிழிலே பெயர்கள் வரவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக மக்கள் படித்தவர்களாக வாழுகிறார்களோ, அவர்கள்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் கலந்து பேசுகிறார்கள்.

ஊடங்களில்_தமிழ் தொலைக்காட்சிகளில், தமிழ் தொலைந்த காட்சியை இன்றைக்குப் பார்க்கின்றோம். வேதனையாக இருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். தமிழைக் கூட நுனி நாக்குத் தமிழ் என்று சொல்லக் கூடிய அளவிற்கு சிலர் இருக்கிறார்கள். யாருக்காகவும் அல்ல. எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ, அதை அப்பொழுதே செய்யக் கூடியவர்தான் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

தொலைக்காட்சியினர் மாற வேண்டும்

தொலைக்காட்சிகளில் ஷோ டைம், டாப்டக்கர், ஸ்டார்ஸ் ஸ்டைல், சூப்பர் ஹிட் படம், கிளைமாக்ஸ், சூப்பர் டூப்பர், சூப்பர் காமெடி, சூப்பர் டாப்டென், என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. தொலைக்-காட்சிகளில் எல்லாம் தமிழ் முழுக்க வரவேண்டும். அதற்கு தொலைக்காட்சி நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு காலத்தில் அக்கிராசனர் என்று சொல்லப்பட்டவர் தலைவர் என்று தமிழால் அழைக்கப்பட்டார். நமஸ்காரம் வணக்கம் ஆயிற்று. அபேட்சகர் வேட்பாளர் ஆனார். இப்படி எல்லாம் இந்த இயக்கம் வளர்ந்த காரணத்தால் வடமொழி-யில் அழைக்கப்பட்டது. தமிழாக மாறியது. அந்த சுயமரியாதை, உணர்வு உள்ள காரணத்தால் இத்தனையும் நடந்திருக்கிறது. எனவேதான் நாம் தெளிவான வாய்ப்பை உருவாக்க வேண்டும். சொன்னார்கள் நண்பர்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். அறிவுக்காகப் படிப்பது என்பது வேறு. வேலைக்காகப் படிப்பது என்பதும் அதுவும் முக்கியம்தான். எனவே அதற்குரிய தீர்மானங்களை முதல்வர் கலைஞர் நிச்சயமாக எடுப்பார்கள். தமிழ் படித்தே தீர வேண்டும் என்பது கட்டாயம் மட்டுமல்ல.

அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று ஆக்கினால் பயன்தரும். செய்வார்கள். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற மத்திய பொது தேர்வு ஆணையம், அதிலே இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் தாய் மொழியில் எழுதிவெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது தமிழால் முடியாதது ஒன்று மில்லை. பயிற்று மொழி தமிழ், முடியுமா? என்று கேட்கிறார்கள். ஜப்பானை விட தொழில் வளர்ச்சி நிறைந்த நாடு வேறில்லை. தமிழ்மொழி அதுபோல் ஆட்சித் தமிழ், ஆய்வுத் தமிழ், அறிவியல் தமிழ், அதற்கெல்லாம் மேலாக தன்மான உணர்வைத் தர வேண்டிய தமிழ். ஆய்வாளர்கள் கூனிக் குறுகியிருப்பவர்களாக இருக்கக் கூடாது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதை இப்பொழுது நாம் பெற்றிருக்கின்றோம். எனவே இந்த செம்மொழி மாநாடு என்பது ஒரு அடித்தளம். அதிலேயிருந்து நாம் மேலே வர-வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்குரிய திட்டங்களை நீங்கள் சிறப்பாகச் செய்யுங்கள். அதே நேரத்திலே தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒரு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு நீங்கள்தான் பாதுகாவலர். இங்கே நடைபெறுவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. உலகத்தின் பற்பல நாட்டு நண்பர்கள் உறவுகளாக இங்கே வந்திருக்கின்றார்கள்.

எனவே தமிழ்நாட்டிலே மட்டும் தமிழ் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதே போல இந்தியாவிலே மட்டும் தமிழ் என்று நினைக்காதீர்கள். உலகம் முழுவதும் தமிழ் வெற்றிகரமாக நடைபோட வேண்டுமானால் தமிழ் எழுத்து சீர்திருத்தமடைய வேண்டும். இணையத்திற்குரிய வாய்ப்பைப் பெற வேண்டும். சிலருக்கு இன்னமும் பழமையில் ஆர்வம். அய்யோ, எழுத்தை எல்லாம் மாற்றினால் என்ன ஆகும்? பெரியார் எழுத்தைக் குறைத்தார். அதனால் எந்தச் சங்கடமும் இல்லை. எழுத்துச் சீர்திருத்தம் வராமல் இணையத்தில் தமிழ் எளிதாக ஆகாது. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் சொன்னார்: ஒலித் தகடுகளில் வரிகள் வருகின்றன. கே.பி.சுந்தராம்பாள் பாட்டு அய்யோ, காணாமல் போய்விட்டதே என்று யாரும் கவலைப் படத்தேவையில்லை. காசு போட்டால் வரும். சங்க காலத்திலிருந்து கல்வெட்டுகள் காலத்திலிருந்து ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

எதிர்ப்பு இருக்கும்

எனவேதான் அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். எந்த மாற்றத்தைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு இருக்கும். நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னீர்கள். இன்றைக்கு அது மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது போலத்தான் இணையம் முக்கியமானது. இணையத்திற்கு தமிழ் முக்கியமானது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியதற்குக் காணரம் எழுத்துகள் குறைவு.

எழுத்துகளை குறைப்பதால் தமிழ் கெட்டுவிடாது. இறுதியாக ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். கிராமத்திலே இருக்கிற தமிழைப் பார்த்து நகரத்துக்காரன் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை நம்முடைய நாட்டிலே. கிராமத்திலே இருக்கின்ற என்னுடைய தமிழச்சி அருமையாகச் சொல்லிக்-கொடுக்கிறார். சோறு சாப்பிட்டாயா? சாறு கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். ஆனால் படித்தவன், நாகரிகமானவன் சாதம் சாப்பிட்டாயா? என்று கேட்கின்றான்.

சோறு என்று கேட்டால் அது ஏதோ கீழ் ஜாதி என்று சொல்லுவதைப் போல, என்ன சோறு என்று சொல்லுகிறாயே என்று கேட்க ஆள் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வேகமாக நாகரிகமாக நளினமாக இருந்தால் ரைஸ் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். வெந்ததா? வேகவில்லையா? என்பது தெரியாது. ஆகவேதான் சோறு, சோறாக இருக்க வேண்டும். செம்மொழி வெற்றி பெற வேண்டு-மானால் சோறு சாதமாக ஆக்கக் கூடாது. ரைஸ் ஆகவும் ஆகக் கூடாது. சோறு சோறாக இருக்க வேண்டும். அதுதான் தமிழனின் அடித்தளம் சரியாக இருக்கிறது. பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்து தமிழனைக் காப்பாற்றுகிறோம் என்று பொருள்.

எனவே நீதிமன்றமாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் தமிழ் வளர வேண்டும். அதற்கு வேண்டிய அடித்தளத்தை நீங்கள் இடுங்கள்.

இந்த மாநாட்டிலே அதற்குரிய முடிவுகளை எடுங்கள். எல்லாவற்றையும் விட, செம்மொழியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு அடித்தளம் உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்குப் பாதுகாப்புத் தேடுங்கள். தமிழர்கள் எந்த நாட்டிலும் இலங்கை உள்பட முள்வேலிக்-குள்ளே இருக்கக் கூடாது. தமிழனுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தமிழனின் உரிமை பாதுகாக்க வேண்டும்

தமிழன், தனித்தன்மையோடு வாழ வேண்டும். தமிழனுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்கெல்லாம் ஒரு பாதுகாப்பு அமைப்பாக இந்த செம்மொழி மாநாட்டிலே ஒன்றை அறிவியுங்கள்.

உலகத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு

உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்பதை உருவாக்குங்கள். மொழிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்றது. மொழியை எப்பொழுது பாதுகாக்க முடியும்? மொழி மக்களை வைத்துத்தான் பாதுகாக்க முடியும் என்ற கருத்திலே வருகிற பொழுது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையாக இருந்தாலும் சரி, இன்னொரு நாடுகளில் தமிழர்கள் சந்திக்கின்ற கொடுமையாக இருந்தாலும் சரி, அதைத் தட்டிக்கேட்கக் கூடிய உரிமை இந்தத் தாய் மண்ணுக்கு உண்-டு. அதற்கொரு அமைப்பை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.

தலைசிறந்த மகுடம்

செம்மொழி மாநாட்டின் வரலாற்றிலேயே அதுதான். தலைசிறந்த மகுடமாக இருக்கும் என்று கூறி உங்களுக்கு காலமெல்லாம் நன்றி செலுத்த தமிழ் மக்கள் சுயமரியாதை உள்ள மக்கள் எல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

எனவே பண்பாட்டுப் படையெடுப்பை அடையாளம் காணுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.