கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 30, 2010

முதலமைச்சரின் செயலாளர் கே.சண்முகநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை - கலைஞர் உடல்நலம் விசாரித்தார்


முதலமைச்சரின் செயலாளர் கே.சண்முகநாதனுக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந் ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவருக்கு உடனடி யாக இருதய அறுவை சிகிச்சை (பை பாஸ் சர்ஜரி) செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அவர், அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சண்முகநாதனை முதலமைச்சர் கலைஞர் நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் விசாரித்து அறிந்தார். கே.சண் முகநாதனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.

அயோத்தி தீர்ப்பு : கலைஞர் கருத்து


அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் இன்று அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, ‘’நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில், இரு தரப்பினரும் திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பில் குறை காண்போர், மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத்தக்கது’’என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாக பிரிக்கப்படும்


அயோத்தி 60 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மேலும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பில் நிலம் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம், சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு சொந்தமா அல்லது அகில பாரதிய இந்து மகா சபைக்கு சொந்தமா என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும், கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளின் தீர்ப்பு! அயோத்தி நில விவகாரத்தில் நீதிபதிகள் 3 பேரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். நிலத்தை பிரித்து இரு தரப்புக்கும் வழங்க 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நிலத்தில் கோவில் கட்ட அனுமதிக்க 1 நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு நிலம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்- என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம் மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மூன்றில் மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு பலத்த பாதுகாப்பு: தீர்ப்பு அளித்த 3 நீதிபதிகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று அயோத்தி தீர்ப்பை அளித்தது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், செய்தி சேகரிக்க குவியும் பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பை வழங்கும் நீதிபதி டி.வி.சர்மா இன்றுடன் ஓய்வு: அயோத்தி நில விவகார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையி்ன் 3 நீதிபதிகள்(டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான்) அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. நீதிபதி டி.வி.சர்மா பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில் நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பணித்துறை பணிகள்: கலைஞர் ஆய்வு



சென்னை ஜார்ஜ் கோட்டையில் பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.


முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.


பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தபோது, கருணை அடிப்படையில் 144 களப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிடப் பிரிவுகள் மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து முதல்வர் கருணாநிதி செய்தார்.
இந்த ஆய்வின்போது, தலைமை செயலாளர் மாலதி, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், நிதித் துறைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப்பணி துறை(நீர்வள ஆதாரம்) மூலம் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள், தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதி மாயனூரில் ரூ.165 கோடியில் கதவணை கட்டும் திட்டத்தை முடிக்க முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டம் ரூ.369 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட மற்றும் 2ம் கட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்த முதல்வர், இந்தியாவின் முன்னோடி திட்டமாகிய இத்திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் எடுத்து வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்வதற்கும், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் படிந்திருப்பதால் அங்கிருந்து மணல் எடுப்பதை அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.633 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருப்பதால், மழைக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை முற்றிலும் அகற்றுவதற்காக இப்பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இத்திட்டத்தின் பயனை விளக்கி அதன்மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்றும், இத்திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி பணிகள் நடைபெறுகின்றனவா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் மண்டலம் வாரியாக திட்ட செலவினங்கள், திட்ட பணிகள் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் கலைவாணர் அரங்கம் கட்டுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கி, விரைவாக முடிக்க கூறினார். வெளிச்சந்தையில் சிமென்ட் விலை அதிகரித்துள்ளதால் வேறு மாநிலங்களிலிருந்து அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து நியாயமான விலையில் சிமென்ட் கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், பொதுப்பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முழுவதையும் செலவிட்டு, திட்டங்களின் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள் முடிக்க மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சீனாவில் மு.க.ஸ்டாலின்




தமிழகத்துக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துணை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் சீனா, தென்கொரியா நாடுகளுக்கு நேற்று முன்தினம் பயணம் ஆனார். அவர் அக்டோபர் 5-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மேலும் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணமாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். அவர், நேற்று முன்தினம் 11 மணி விமானத்தில் பயணமானார்.

அவர் நேராக, சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்குச் சென்றார். அங்கு உலக வர்த்தக கண்காட்சி நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு பிரமாண்டமான அரங்குகளை அமைத்துள்ளன.

தமிழக தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் அவர் அதனை பார்வையிட்டார்



இந்தியன் வங்கியின் 52 கிளைகள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்


இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தியன் வங்கி சார்பில் தமிழகத்தில் 5 கிளைகள், 21 ஏடிஎம் மையங்கள் மற்றும் இந்தியாவின் 11 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 21 கிளைகள், 31 ஏடிஎம் மையங்கள் தொடக்க விழா, தலைமைச் செயலகத்தில் நேற்று காலையில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத் தார். அப்போது நிதித் துறை செயலர் சண்மு கம், இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின், செயல் இயக்குனர்கள் பட்டாச்சாரியா, ராமகோபால் ஆகியோர் உடன் இருந் தனர்.
பின்னர், இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின் கூறியதா வது:
சுய உதவிக் குழுக்களுக்கு எங்கள் வங்கி சிறந்த முறையில் கடன் அளித்து வருவதை முதல்வர் பாராட்டினார்.
2 வெளிநாட்டு கிளை உட்பட இந்தியா முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,796 கிளைகளும், 1,062 ஏடிஎம் மையங்களும் உள்ளன. மேலும் 250 ஏடிஎம் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 768 கிளைகளும் 532 ஏடிஎம் மையங்களும் உள்ளன. விரைவில், இலங்கையில் கொழும்பு, கண்டி, இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சிங்கப்பூரில் கிளைகள் திறக்கப்பட உள்ளன. ஹாங்காங்கிலும் கிளை தொடங்கப்படும்.
இலங்கையில் தமிழர் பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு ஸீ500 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியை மக்களிடம் சேர்ப்பதற்காக, யாழ்ப்பாணத் தில் விரைவில் வங்கி கிளை தொடங்கப்ப டும். அங்குள்ள மக்க ளின் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.
இவ்வாறு பாசின் கூறினார்.

Wednesday, September 29, 2010

புறம்போக்கு நில வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டம் - கலைஞர் உத்தரவு


ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டம் மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிடுள்ள செய்திக்குறிப்பில்,

‘’அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டிக் குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்குத் தேலையில்லையெனில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அக்குடியிருப்புகளைப் புலத்தணிக்கை செய்து உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானங்களைப் பெற்று வீட்டுமனைப் பட்டா வழங்கி வரன்முறைப்படுத்திட 30.12.2006 அன்று ஆணையிட்ட முதலமைச்சர் கருணாநிதி,

இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பெறுவதற்கான வருமான வரம்பினைப் பின்னர் இரத்து செய்ததுடன், ஐந்தாண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டிக் குடியிருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்துமெனவும் ஆணையிட்டார்.

இத்திட்டத்தின்கீழ், கடந்த நான்காண்டுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 595 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள 5 இலட்சத்து 29 ஆயிரத்து 307 இலவச வீட்டுமனைப் பட்டாக்களுடன் இதுவரை மொத்தம் 7 இலட்சத்து 56 ஆயிரத்து 902 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அதிக அளவில் பயனாளிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்திடவும் ஆணையிடப்பட்டு, 30.9.2010 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில், இத்திட்டத்தினை மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 30.9.2011 வரை நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனக்கு பத்திரிக்கைகள் கொடுக்கும் இலவச விளம்பரங்கள் - மு.க.அழகிரி பேட்டி


மத்திய அமைச்சரும் , திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளருமான மு.க.அழகிரி நேற்று
சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.


ஜெயலலிதாவுக்கு வரும் கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
செய்துள்ளதே?


அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை நான் படிக்கவில்லை. அதற்கு விளக்கம் அளித்து வந்த தலைவர்(கலைஞர்) அறிக்கைகளையும் நான் முழுவதுமாக படிக்கவில்லை. அதனால்
அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.


நாகர்கோயிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் நீங்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதே?


பேப்பர் காரங்க எல்லாம் சேர்ந்து எனக்கு இலவச விளம்பரம் கொடுக்குறீங்க(சிரிப்பு).


சட்டமன்ற தேர்தலுக்கு நீங்கள் தமிழகத்திற்கு வந்துவிடுவீர்கள் என்று பேசப்படுகிறதே?


எலக்‌ஷன் வேலை பார்க்க வேண்டாமா. அதனால் வருவேன்.


மத்திய அமைச்சர் பதவியை விட்டுவிட்டு தமிழக சட்டமன்றதேர்தலில் களம் இறங்குவீர்கள் என்று பேசப்படுகிறதே?


தினம் தினம் என்னைப்பற்றி செய்தி வராத பத்திரிகையே இல்லை(சிரிப்பு). இது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.


அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு ஸீ2 லட்சம் நிதி உதவி - முதல்வர் கருணாநிதி உத்தரவு


தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல்லை மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த எம்.சுபஹானி மனைவி ஜமீலா பீவி, பிரசவத்துக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஜமீலா பீவியின் கணவர் எம்.சுபஹானி, ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். எனவே, அவருடைய குடும்பத்தின் வறுமை நிலையை கருதி, அவருடைய மூன்று வயது மகன் ரியாஸ்கானுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஸீ2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை சிறுவன் ரியாஸ்கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பெயரில் கூட்டாக நிரந்தர வைப்பீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை சிறுவனின் பராமரிப்புக்காக செலவிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவருக்கும் சத்துணவு தமிழக அரசு உத்தரவு - 17 மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவர்


தமிழகத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் 17 மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கோவை, ஈரோடு, திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன.
குழந்தை தொழிலாளர்களாக இருந்து அரசால் மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் இந்த சிறப்பு பள்ளிகளில் படிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 71 சிறப்பு பள்ளிகளில் 1,811 மாணவர்கள் படிக்கின்றனர்.
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவியில் இருந்து மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதிய உணவினை, அந்தந்த மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிவிட்டது.
மாநில அரசு மதிய உணவினை வழங்கும்வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான செலவினை பின்னர் மொத்தமாக தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் 6 மாதங்களாக ஆசிரியர்களின் சொந்த பணத்தில் இருந்து மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மற்ற பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்று, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க அதிகாரிகள் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் அக்டோபர் முதல் சிறப்பு பள்ளிகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஸீ13 லட்சம் செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறப்படும்’ என்றனர்.

ஜெ.வுக்கு மிரட்டல் கடிதம் வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்: தமிழக அரசு


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக வந்த கடிதங்கள் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்துள்தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ஏழு கடிதங்களின் அடிப்படையில், சென்னை நகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோரிடம், ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரங்கநாதன் மற்றும் கே.பி. சுனில் ஆகியோர் 28.8.2010, 3.9.2010, 17.9.2010 (இரண்டு கடிதங்கள்) மற்றும் 24.9.2010 (மூன்று கடிதங்கள், இரண்டு புகார்கள்) ஆகிய தேதிகளில் கொடுத்த புகார்களின் பேரில், சென்னை மாநகர் கிண்டி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 506 (ii) ஆகியவற்றின் கீழ் குற்ற எண்கள் 692/2010, 709/2010, 796/2010, 823/2010 மற்றும் 824/2010 ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மேற்கண்ட ஐந்து வழக்குகளிலும் சிறப்புத் தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்புத் தனிப் படைகள் மதுரை, தஞ்சை ஆகிய இடங்களுக்குச் சென்று அஞ்சல் நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் உள்ளிட்ட 113 பேர்களை இதுவரை விசாரித்துள்ளனர். இக்கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலன் விசாரணை உயரதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், நேற்று (27 9 2010) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலாளரையும், உள்துறை முதன்மைச் செயலாளரையும் சந்தித்து, மேலும் கொலை மிரட்டல் விடுத்து மூன்று கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுவரை கொடுத்த புகார்களின் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஒரு மனு அளித்துள்ளனர்.


தமிழகக் காவல் துறை இந்தப் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வந்துள்ள போதிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களின் தலைமையில் வந்த குழுவினர் அளித்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்குகள் அனைத்தையும் மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒத்திவைப்பு


முதல்வர் கருணாநிதியுடனான திமுக நிர்வாகிகள் கலந்துரை யாடல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
முதல்வர் கருணாநிதி தஞ்சை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார். அவரது உடல்நலன் கருதி, ஏற்கனவே மாவட்ட வாரியாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படு கின்றன. கூட்டம் நடைபெறும் தேதி மாவட்ட வாரியாக பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா, தென்கொரியாவுக்கு மு.க.ஸ்டாலின் பயணம்


தமிழகத்துக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (27.09.2010) புறப்பட்டுச் சென்றார்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்குச் ஸ்டாலின் செல்கிறார். அங்கு உலக வர்த்தக கண்காட்சி நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு பிரமாண்டமான அரங்குகளை அமைத்துள்ளன. தமிழக தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் அவர் அதனை பார்வையிடுகிறார். அவற்றை பார்வையிட்டு, எத்தகைய ஆலைகளை தமிழகத்தில் அமைக்கலாம் என்று ஆய்ந்தறிகிறார். தமிழகத்தை சேர்ந்த, சீனாவில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ள லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் (எல்.எம்.டபிள்யூ.) முதல் தயாரிப்புப் பொருளை, சீன நிறுவனத்துக்கு வழங்குகிறார்.

பிறகு, ஷாங்காயில் இருந்து தென்கொரியா புறப்படுகிறார். அந்நாட்டில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். ஹூண்டாய், சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்கள் சார்பில் எத்தகைய விரிவாக்கத் திட்டங்களை தமிழகத்தில் தொடங்கலாம் என்பது பற்றி விவாதிக்கிறார்.

அங்கு பல்வேறு தொழில் நிறுவனத்தினரை அழைத்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கையும் அவர் நடத்துகிறார். அதில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசு என்னென்ன உதவிகளை வழங்கும் என்பது பற்றியும், தமிழகத்தில் நிலவும் தொழில் அமைதி பற்றியும் விளக்கமாக பல்வேறு தொழில் நிறுவனத்தினருக்கு எடுத்துரைக்கிறார்.

சீயோல் நகரில், சென்னையின் கூவம் நதியை போல் அழுக்கு நிறைந்த நதி ஒன்று இருந்தது. அதனை புதிய தொழில்நுட்பம் மூலமாக, தூய்மையான நதியாக மாற்றி இருக்கிறார்கள். அதனை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், அந்நதியை தூய்மைப்படுத்த கையாண்ட உத்திகளை பற்றியும் விவாதிக்கிறார். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 5ந் தேதி தமிழகம் திரும்புகிறார்.


Tuesday, September 28, 2010

செம்மை நெல்லுக்கு ராஜராஜன் பெயர் - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


தஞ்சையில் நடைபெற்ற பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழாவில் செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 என்று முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இரண்டாவது தலைமுறைக்கும் நான் வாழ்த்து கூறும் வகையில் வயது உயர்ந்துள்ளது. ஆனால், அதுபற்றி நான் கவலைப்பட்ட போதெல்லாம் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுவிழா வருகிறது. அதை காணும் வாய்ப்பு ஏற்பட போகிறது என்ற மகிழ்ச்சியுடன் நான் இருப்பேன். அப்படிப்பட்ட விழா மாமன்னர் ராஜராஜனுக்கு பெருமை, புகழ் சேர்த்திருக்கிறோம்.
ராஜராஜன் வசூலித்த பல்வேறு வரிகள் குறித்து பேராசிரியர் அன்பழன் குறிப்பிட்டார். அந்த வரிகள் அனைத்தும் பொன்னும், நெல்லுமாகச் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகள் வரி கட்டவில்லையெனில் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு பொக்கிஷத்துக்கு போய்விடும். திரட்டிய நிதி மக்களின் நலவாழ்வுக்கும், சுகம், வீரத்தை காப்பாற்ற, நாட்டைக் காப்பாற்ற ஆற்ற வேண்டிய வீரப்பணிகளுக்காகவும் வரிப்பணம் செலவிடப்பட்டது. இப்பணம் வருவாய் பற்றி உங்கள் காதில் விழும் செய்திகளை நான் கவனிக்காமல் இல்லை. வரிகளை வசூலித்து மக்களின் பணத்தைத் திரட்டி இன்று தமிழக அரசு ஒவ்வொரு தலையிலும் இவ்வளவு ரூபாய் கடன் வைத்திருக்கிறது என்று கணக்கிட்டுப் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு மனிதனும் இவ்வளவு ரூபாய் தர வேண்டும் என்று எந்த நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை. குறிப்பாக தமிழகத்திலும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. அப்படி வந்தாலும் இருக்கவிடப் போவதில்லை.
ஊர் அவை உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான தகுதிகள் வகுக்கப்பட்டன. அவர்கள் எண்ணத் திலும், செயலிலும், நேர்மையாகவும் 30&75க்குள் வயதுக்குள்ளும், யாரையும் ஏமாற்றியதாக புகார் வராதவராகவும், ஒழுக்கமாக வாழ்ந்தவராக இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு உட்பட்டு எந்த நிறுவனத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. வழக்குகள், குற்றவாளி, பொய்சாட்சி கூறியவர்கள், அவப்பெயர் எடுத்தவர்கள், குற்றப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவர், லஞ்சம் வாங்கியவர்கள், பொய் கையெழுத்துப் போட்டவர்கள், அபராதம் செலுத்தியவர்கள், கையெழுத்துப் போட்டுவிட்டு அது என் கையெழுத்து இல்லை என்பவர்கள் வாழும் காலத்தில் ராஜராஜன் காலத்தைய விதிமுறைகள் ஆச்சர்யமாகத்தான் தோன்றும். தேர்தலின்போது கூட்டத்தில் ஒரு குடம் வைக்கப்படும். குடும்பத்துக்கு ஒருவர் தங்களுக்கு பிடித்தவர் பெயரை ஓலையில் எழுதி அதிகாரி முன் குடத்தில் போட வேண்டும். அதை கட்டி, குடத்தின் மேலே குடும்பத்தின் பெயர் எழுத்தப்படும். ஓலைகள் குலுக்கப்பட்டு ஒரு ஓலை குழந்தையால் எடுக்கப்படும். அரசு அதிகாரி அரசு அதிகாரி ஓலைப்பெயர் படிப்பார். அவ்வாறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தகைய புகழ்வாய்ந்த ராஜராஜன் பற்றி தமிழக மக்கள் நாள்தோறும் சிந்திக்க, நினைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். ஏற்கெனவே இந்த விழாவையொட்டி பல்வறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.
தஞ்சை மேம்பாட்டுக்காக ஸீ25 கோடி தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மூலம், பஸ் நிலையம¢ மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதார வளாகம், ஒளிவிளக்கு, பெரிய கோயில் முன்புறத்தில் கான்கிரீட் தளம் போடுவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 7 முக்கிய பாலங்கள் ஸீ9.35 கோடியில் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. ஸீ2.35 கோடியில் தஞ்சை மையத்தில் கல்லணைக்கால்வாய் கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் புதிய விபத்து சிகிச்சைப் பிரிவும் புற்றுநோய் பிரிவு ஏற்படுத்தப்படும். சமுத்திரம் ஏரி மேம்படுத்தப்படும். தமிழக அரசு அளிக்கும் தொகை மட்டுமின்றி மத்திய அரசும் ரூ.25 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் நாராணயசாமி கூறியுள்ளார். அப்பணம் இன்னும் வந்து சேரவில்லை. அதற்கு அவர் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராஜராஜன் நினைவாக அஞ்சல் தலை, ராஜராஜன் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அனுமதி பெற்றுத்தந்த நண்பர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்களுக்கு நன்றி. ஏற்கெனவே தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல உற்பத்தி திறன் கொண்ட செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 என்று தமிழக அரசு சார்பில் பெயரிட்டு அறிவிக்கிறேன். ஐஆர் 8 போல், ஐஆர் 20 போல் இந்த பெயர் அமையும். ராஜராஜன் புகழ் பரவ இது உதவும். மக்கள் விரும்புவதுபோல் சோழர்கால சிறப்புக் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்றார் முதல்வர்

தஞ்சைபெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழாவில் ராஜராஜன் நாணயம்,அஞ்சல் தலை வெளியீடு - முதல்வர் கலைஞர் முன்னிலையில் நிறைவு விழா




மன்னர் ராஜராஜசோழன் தஞ்சாவூரில்கட்டிய பெரிய கோவில், உலகப் பாரம் பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் கட் டப்பட்டு ஆயிரம் ஆண்டு கள் நிறைவடைவதை யொட்டி ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை, தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் கொண்டாட முதல் அமைச்சர் கலைஞர் ஏற் பாடு செய்தார். அதன்படி கடந்த 22ஆம் தேதி தஞ் சையில் சங்கமம் நிகழ்ச்சியு டன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவை, மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து 3 நாள்கள் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. கண்காட்சி விழாவின் 3ஆவது நாள் நிகழ்ச்சியாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர் கால சிறப்புகளை விளக்கும் வகையில் அமைக் கப் பட்டு இருந்த கண்காட் சியை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத் தில் நடந்த இந்தியப் பெருமைக்கு தஞ்சை யின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடந்த சிறப்பு ஆய்வரங்கத்தை யும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். 4ஆவது நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் பெரிய கோவில் வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நிதி அமைச்சர் அன்ப ழகன் தலைமையில் நடைபெற்றது.

மாலை நிகழ்ச்சியாக பெரிய கோவிலில் பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலை மையில் ஆயிரம் கலை ஞர்கள் ஆடிய நாட்டி யாஞ்சலி நிகழ்ச்சி நடந் தது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங் கள், மலேசியா, சிங்கப் பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது இல்லை என்று கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது. பெரிய கோவி லின் உள்ளே தெற்குப் பகுதியில் அமைக்கப் பட்ட மேடையில் நடை பெற்ற இந்த அற்புதமான நாட்டியாஞ்சலி நிகழ்ச் சியை முதல் அமைச்சர் கலைஞர் ரசித்து பார்த் தார். பின்னர் டாக்டர் ஆர்.நாகசாமி எழுதிய புத்தகத்தை கலைஞர் வெளியிட்டார்.

விழாவின் 5ஆவது நாளான நேற்று முன் தினம் காலை 11 மணி அளவில் முதல மைச்சர் கலைஞர் அரண் மனை வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கண் காட்சிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 அரங்குகளுக் கும் பேட்டரி கார் மூலம் சென்று பார்வையிட் டார்.

நிறைவு விழா

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை தஞ்சை ஆயுதப் படை மைதானத்தில் நிறைவு விழா கோலாக லமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் கோபு ரம் போன்று அமைக்கப் பட்டு இருந்த மிகப் பெரிய மேடையில் நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை செயலாளர்சு.மாலதி வரவேற்று பேசினார். அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் ஆ.இராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு அஞ்சல் தலையை முதல் அமைச்சர் கலைஞர் முன்னிலையில் வெளி யிட்டார். அதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்பு அஞ்சல் தலையின் மாதிரி வடிவத்தை, கலை ஞர் திறந்து வைத்தார். பின்னர் மத்திய அமைச் சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜ ராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய அமைச்சர் நாராயண சாமி பெற்றுக்கொண் டார். 26.9.2010 அன்று நடைபெற்ற விழாவில் நாட்டியாஞ்சலி நிகழ்ச் சியில் பங்கேற்ற ஆயிரம் நடன கலைஞர்களுக்கும் நேற்று வெளியிடப்பட்ட 5 ரூபாய் சிறப்பு நாண யங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்காக மொத் தம் 1000 நாணயங் களைக் கொண்ட பொற் கிழியை, முதலமைச்சர் கலைஞர், பத்மா சுப்பிர மணியத்திடம் வழங்கி னார். பெருமழை புலவர் சோமசுந்தரனார் மகன் கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியையும் கலைஞர் வழங்கினார்.

நிறைவு விழா பேருரை

விழாவில், மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஆ.இராசா, பழனி மாணிக்கம், நாராயண சாமி, தமிழக அமைச் சர்கள் அன்பழகன், துரை முருகன், பொன்முடி, உபயதுல்லா, தங்கம் தென்னரசு, கோ.சி. மணி மற்றும் நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் கலை ஞர் நிறைவு விழா பேரு ரையாற்றினார். முடிவில் சுற்றுலா பண்பாட்டு துறை செயலாளர் வெ. இறையன்பு நன்றி கூறி னார். விழா நிகழ்ச்சிகளை டாக்டர் சுதா சேஷய்யன் தொகுத்து வழங்கினார்.

தஞ்சை கோயில் 1000ம் ஆண்டு நிறைவு விழா சோழர் வரலாற்று கண்காட்சி - முதல்வர் ரசித்து பார்த்தார்



தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழர் கால வரலாற்று கண்காட்சியை முதல்வர் கருணாநிதி 26.09.2010 அன்று காலை பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.
முற்கால சோழர் ஆட்சி முறை குறித்த தகவல்கள், கோயில் பராமரிப்பு பணிகள் குறித்த விவரம், சோழர்கால தானிய உறை ஆகியவை குறித்து காப்பக அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர் புறநானூறு, திருக்கோவை, திருமுருகாற்றுப்படை, நன்னூல், கம்பராமாயணம், பெரியபுராணம், நளவெண்பா, சீவக சிந்தாமணி உள்ளிட்ட இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளையும், சோழர்கால செப்பேடுகள், எசலாம் செப்பேடுகள், பராந்தக சோழனின் வேலஞ்சேரி செப்பேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய கலை நிறுவனத்தினர் வைத்திருந்த பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் மாதிரிகளையும், 11, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஓவியங்கள், கும்பகோணம், கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் ராஜராஜசோழன் குறித்த ஓவியங்கள், சோழர் கால நாணயங்கள் ஆகியவற்றையும் அவர் ரசித்து பார்த்தார்.
அதேபோல் சங்கீத மகாலில் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட அரிய வகை ஐம்பொன் சிலைகளின் வரலாறு குறித்தும் தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி விளக்கினார். பின்னர், நாகசாமி எழுதிய சோழர் ஈந்த கவின்மிகு கலைகள் என்ற நூலையும், பிரகதீஸ்வரர் உருவும் கருத்தும் என்ற நூலையும் முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, தங்கம்தென்னரசு, சுரேஷ்ராஜன், பொங்கலூர் பழனிச்சாமி, எம்பிக்கள் கனிமொழி, செல்வகணபதி, தமிழக பாஜக பொது செயலாளர் இல.கணேசன், தலைமை செயலர் மாலதி, சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இசைக்க வைத்து ரசித்த முதல்வர்
இசைக்கருவிகள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சமுக இசைக்கருவிகள், கல் தவில், நாதஸ்வரத்தை பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, அந்த கருவிகளை இசைக்கக்கூறி சிறிது நேரம் கேட்டு ரசித்தார். பின்னர், சோழர்காலப் போர்க்கருவிகளையும், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொல்பொருள் சார்ந்த வெளியீடுகளையும் பார்வையிட்டார். மொத்தம் 1 மணி நேரம் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.

தஞ்சை பெரிய கோயில் விழா 1000 கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி - முதல்வர் கலைஞர் கண்டு களித்தார்




தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. 4ம் நாளான 25.09.2010 அன்று மாலை பெரிய கோயில் வளாகத்தில் நந்தி மண்டபம் முன்பு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர் சங்க தலைவர் பத்மா சுப்பிரமணியம் மற்றும் தஞ்சை டாக்டர் வரதராஜன் தலைமையில் இயங்கும் பிரகன் நாட்டிய அறக்கட்டளை சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.
ராஜராஜனின் ஆன்மிக குரு கரூர் தேவர் பாடிய திருவருட்பாவின் 11 பாடல்களையும், சிவபஞ்சாட்சர சுதியையும், மரபுவழி வந்த கணபதி கடிகத்தையும் வைத்து நடன நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டு நடனமாடினர். முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், முரசொலி சொர்ணம்&அருள்மொழி மகளுமான முத்தரசி மகள் பவித்ரா, அமிர்தம் பேத்தி இலக்கியா ஆகியோரும் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை 16 நடன ஆசிரியர்கள் தொகுத்தனர். 7.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி, 8.15க்கு முடிந்தது. இந்த பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியை தனி மேடையில் இருந்து முதல்வர் கருணாநிதி கண்டு களித்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:
தஞ்சையில் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் பின்னணியில் 1,000 நடன மங்கைகள் நடனமாடியது மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. இந்த நடனத்தை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் நடத்திக்காட்டினர் என்றால் அது பொருந்தாது. பத்மா சுப்பிரமணியத்தின் சேனையினர் நடனமாடி காட்டி இருக்கிறார்கள். அவர்கள் ஆடிக்காட்டிய கருத்துக்கள் முழுமையாக ஏற்கத்தக்கது அல்ல என்றாலும், அவர்களின் ஆர்வம், நம்பிக்கை, பற்று இவைகள் எல்லாம் வியக்கத்தக்க வகையில் இருந்தது.
இந்நிகழ்ச்சியை 150 நாடுகளில் இருந்து மக்கள், அறிஞர்கள், சான்றோர், விஞ்ஞானிகள் ஆகியோர் கண்டுகளித்துள்ளனர். ஆயிரமாவது ஆண்டு விழாவில் இந்த ஆயிரம் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி மிக அற்புதமாக இருந்தது. நிகழ்ச்சி நடத்த ஆயிரம் பேரை சேர்த்து ஒத்திகை பார்க்க வேண்டுமே. அது சாத்தியமா என்று பத்மா சுப்பிரமணியத்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒவ்வொருவரும் எப்படி ஆட வேண்டும் என்று அனைவருக்கும் தனித்தனி சிடி அனுப்பி உள்ளேன் என்றார். அவர் சிடி அனுப்பினாரோ, இல்லையோ. நான் சிஐடி போட்டு அவர்கள் நன்றாக ஆடுவார்களா என்று விசாரித்தேன். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பத்மா சுப்ரமணியன் குழுவினருக்கு நன்றியையும், பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
பின்னர், முனைவர் நாகசுவாமி எழுதிய ராஜராஜன் காலத்து நடன மங்கைகள் குறித்த ஆங்கில நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரை முருகன், கோ.சி.மணி, உபயத்துல்லா, செ.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர்கள் ராசா, பழனிமாணிக்கம், காந்தி செல்வன், கனிமொழி எம்.பி, பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன், உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
பட்டு சட்டை, வேட்டியில் முதல்வர்
நடன நிகழ்ச்சியை பார்வையிட முதல்வர் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்தார். இதுகுறித்து அவரிடம் இல.கணேசன் கேட்டபோது, ‘இது நம்ம ஊர் நிகழ்ச்சி. அதுதான்’ என்று முதல்வர் கூறினார்.

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு - முதல்வர் கருணாநிதி உத்தரவு


தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி தர முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது, ஜூலை முதல் முன்தேதியிட்டு, நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு கணக்கிட்டு ஊதிய உயர்வு தரப்படும்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2190 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

Tamil Nadu Chief Minister condemns Sri Lanka


[TamilNet, Thursday, 17 August 2006, 15:42 GMT]
Kalaignar M Karunanidhi, the Chief Minister (CM) of the southern Tamil Nadu state of India, has condemned the Sri Lanka Air Force (SLAF) bombing in Vallipunam in Mullaithivu district in NorthEast Sri Lanka, where tens of schoolgirls were killed and more than 100 wounded Monday. Describing the SLAF air-strike as an "atrocious and inhumane act", the Chief Minister of Tamil Nadu state, home to 60 million Tamils in India, has urged the Prime Minister of India, Manmohan Singh, to request the Sri Lankan government to hold talks to settle the issue peacefully and stop killing innocent Tamils.


The Tamil Nadu Legislative Assembly Thursday passed a resolution condemning the recent killings. Speaker of the Tamil Nadu Assembly, R Avudiayappan, brought the condolence resolution, and expressed shock and grief over the Vallipunam killings. The House condemned the killings, characterising it as "uncivilised and inhumane act" of the Sri Lankan military. "There should be a full stop to such incidents which cannot be forgiven... There cannot be two opinions on this," Chennai Online reported Chief Minister Karunanidhi as saying. Referred to as Kalaignar, Karunanithi, the leader of the DMK Party and five times Chief Minister (CM) of Tamil Nadu State since 1969, is known for his oratorical skills, for writing historicals and scriptwriting.

கையிருப்பு குறைவாக உள்ளதால் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கூடாது - பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்


இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்க்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அடுத்த பருத்தி சீசன் தொடங்குமுன் பருத்தி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து, தங்களுக்கு கடந்த 19.5.2010 அன்று கடிதம் எழுதினேன். மேலும், பருத்தி சீசன் தொடங்கப்பட்ட பிறகு பருத்தி விளைச்சல், உள்ளூர் தேவை, உபரியாக இருக்கும் பருத்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்த பிறகு, பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கலாம் என்றும் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
பருத்தி ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டதன் காரணமாக, கடந்த மூன்று வாரங்களாக பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, பருத்தி விலையில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க சரியான நடவடிக்கை தேவை. ஜவுளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே முதன்மையாக திகழ்கிறது. ஜவுளித்துறையின் மூலம் ஏற்றுமதி செய்வது ஒரு பகுதியாக இருந்தாலும், நாடு முழுதுவதும் லட்சகணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகவும் இது இருக்கிறது. இந்த தொழிலில் ஈடுப்பட்டு இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தினக்கூலி கைத்தறி நெசவாளர்கள் தான். பருத்தி விலை உயர்வினால் நூல் விலையும் கணிசமாக உயரக்கூடும். இதன் காரணமாக கைத்தறி துறை பெரும் இன்னலுக்கு உள்ளாகும்.
எனவே, பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதற்கு முன்பு உள்ளூரில் பருத்தி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்துவது மிக முக்கிய மானதாகும். மேலும், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகள் சர்வதேச ஜவுளி சந்தையில் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன. உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் பருத்தி கிடைப்பதை உறுதிப்படுத்தினால்தான் சர்வதேச சந்தையில் போட்டியிட இயலும். துணி விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பருத்தி சந்தைக்கு வரும் வரையில் நிலைமையை உறுதி செய்ய வேண்டும். அதுவரை பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிக்க கூடாது என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

தயாளு அம்மாளின் அண்ணி மரணம்



திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த கோயில் திருமாளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சகோதரர்.
மாவட்ட வேளா ண்மை விற்பனை குழுத்தலைவர். இவரது மனைவி தனம் அம்மாள்(77). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் 22.09.2010 அன்று இரவு வீட்டில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, எம்.பி. கனிமொழி, மு.க.தமிழரசு, தயாளு அம்மாள், சாந்தா ஸ்டாலின், செல்வி செல்வம், அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் நேற்று, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் 23.09.2010 அன்று மாலை நடந்தது. இதில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சோனியா, கருணாநிதி தவிர கூட்டணி பற்றி யாரும் பேச முடியாது - தங்கபாலு பேட்டி


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு 23.09.2010 அன்று காலை 10.10 மணிக்கு முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
பின்னர், தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் பற்றி பேசினீர்களா?
இது வழக்கமான சந்திப்பு. இரண்டு கட்சி தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல்தான் பேசுவோம். குலாம்நபி ஆசாத் வருகை தொடர்பான விஷயங்கள் பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ்&திமுக கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை என்று இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
கூட்டணி பற்றி சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் எடுக்கும் முடிவே இறுதியானது. எங்கள் கூட்டணி தொடர்கிறது. இதை குலாம்நபி ஆசாத் தெளிவுபடுத்தி விட்டார். வேறு யாரும் இதில் குறுக்கே பேச முடியாது. பேச மாட்டார்கள்.
நீங்கள் முதல்வருடன் இதைப்பற்றி பேசினீர்களா?
இதைப் பற்றி நாங்கள் பேசவில்லை.
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கும்?
இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்ய முடியும். அமைதி நிலவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த பிரச்னையை வைத்து பாரதிய ஜனதா பிழைப்பு நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Monday, September 27, 2010

போலீசாரின் தேவைகளை நிறைவேற்ற தயார் - முதல்வர் கருணாநிதி




சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வெள்ளை மாளிகை போன்ற இந்த கட்டிடம், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு வசதிகளுடன் அங்கு புதிய கட்டிடம் கட்டவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஸி24.5 கோடி செலவில் 1,61,702 சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் கூட்ட அரங்கு, பண்டக சாலை, பணியாளர் பிரிவு, ஆலோசனை கூடம், டிரைவர்கள் தங்கும் இடம், மருந்தகம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கட்டிடம் 2 மாடிகள் கொண்டது.
இந்த புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இப்போது, இனிய கட்டிட திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த அருமையான டிஜிபி அலுவலக கட்டிடம், ஏற்கனவே வேறு இடத்துக்கு மாற்றப்பட இருந்தது. இந்த அரசு அமைந்ததும் புராதன சின்னமாக திகழும் காவல் துறையின் தலைமை அலுவலகம், அதே இடத்தில் இயங்கும் என்று அறிவித்தோம். மேலும், கூடுதல் கட்டிடம் கட்டவும் உத்தரவிடப்பட்டது.
பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உயரமான கட்டிடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சட்டம்& ஒழுங்கு, கட்டுப்பாட்டை காப்பாற்ற ஆற்றும் பணி முக்கியமானது. நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தும் அதிகாரிகள், இந்த அரசில் செயல்பட்டு வருகின்றனர். இது பாராட்டத்தக்க ஒன்றாகும். சட்டம்& ஒழுங்கு மற்றும் அமைதி காப்பதில் தலைமை அதிகாரி முதல் காவலர்கள் வரை திறம்பட பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் சரியாக பேச முடியவில்லை. கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான மக்களை சந்தித்த மகிழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போலீசாருக்காக பாடுபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் காவலர்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
டிஜிபி லத்திகா சரண் பேசுகையில், ‘’காவலர் குடியிருப்பு 550 சதுர அடியில் இருந்து 650 சதுர அடியாக உயர்த்தி ஆணையிட்டார், முதல்வர் கருணாநிதி. ராணுவத்தில் இருப்பதுபோல் போலீஸ்காரர்களுக்கும் கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் காவலர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெற மத்திய காவல் பயிற்சி பள்ளி தொடங்க முதல்வர் ஆணையிட்டார். 3 போலீஸ் கமிஷன்களை அமைத்துள்ளார். இப்போது ஸி24.5 கோடியில் கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காவலராக முதல்வர் விளங்குகிறார்’’ என்றார்.
தலைமையிடத்து ஐஜி காந்திராஜன் நன்றி தெரிவித்து பேசுகையில், ‘’உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காவலராக முதல்வர் இருக்கிறார். பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மாலதி, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், சட்டம்& ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் டிஜிபிக்கள் சேகர், டி.கே.ராஜேந்திரன், அனூப் ஜெய்ஸ்வால், புறநகர் கமிஷனர் ஜாங்கிட், உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘மருதம்’ வளாகத்தில் ஸி88.44 லட்சம் செலவில் 7,698 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விஐபி செக்யூரிட்டி பிரிவுக்கான கட்டிடத்தையும், முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அப்போது, அதிரடிப் படை போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண் டார்.