About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Thursday, April 21, 2011
‘‘யாரை வீழ்த்தவேண்டும் என்று ம.தி.மு.க.வினருக்கு தெரியும்!’’ - நடக்கப்போவதை சொல்லும் நாஞ்சில் சம்பத்
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. கழட்டி விடப்பட்டதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள். ‘‘இந்த முறை மட்டும் ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கிறது...’’ என்று சொல்லிவிட்டு வைகோ ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும், கொந்தளித்து எழும் ம.தி.மு.க. தொண்டர்கள், அ.தி.மு.க.வுக்கு எதிராக வார்த்தை வீச்சுக்களை ஆங்காங்கே நடத்திக் கொண்டி-ருக்-கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்-படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டி தொட்டியெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்துதான், உச்ச-பட்ச கொந்த-ளிப்பில் இருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்... அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி வருவதற்கு தொகுதி பங்கீடு பிரச்னைதான் பிரதான காரணமா? நாங்கள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டி-ருக்கி-றோம். இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்கு கடல் கடந்து தீட்டப்பட்ட திட்டம் தான் பிரதான காரணம். அந்த திட்டத்தின் பலனாக பல ஆயிரம் கோடிகள் கைமாறி இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்-திருக்கிறது. கேட்கவே பயங்கரமா இருக்கே... அப்படி என்னதான் திட்டம் தீட்டப்பட்டது? இந்தத் திட்டத்துக்குள் போவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கூடவே, விடுதலைப்புலிகள் இயக்கத்-துக்காக எங்கள் பொதுச் செயலாளர் வைகோ எப்படி-யெல்லாம் பாடுபட்டு வந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தான் முதல்வராக இருந்த போது கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ரௌலட் சட்டம் பெற்றுப் போட்ட குழந்தையான பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்தார். 8-க்கு4 அளவுள்ள கொட்டடியில் அடைத்து, தன்னு-டைய இலங்கை விசுவாசத்தை உலகுக்குக் காட்டி-யவர். அதன்பிறகும் காலத்தின் கட்டாயம், கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டதன் விளைவு-ஜெயலலிதாவோடு கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தன்னுடைய ஆணவப் போக்கை ஜெயலலிதா மாற்றிக் கொண்டுவிட்டார் என்று நம்பினோம். ஆனால், நான் என்றைக்கும் மாற மாட்டேன் என்று மீண்டும் ஒருமுறை அவர் உணர்த்தி விட்டார். ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்-தாலும் நாங்கள் எங்கள் கொள்கைகளில் இருந்து துளியும் மாறவில்லை. விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சொல்லி, நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தோம். அதெல்லாம் இலங்கை ஆதிக்க சக்திகளின் கையாளான ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. எங்களை எப்படி வெளியேற்றலாம் என்று காத்திருந்திருக்கிறார். தேர்தல் நேரம் பார்த்து, கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி வெளியேற்றி விட்டார். விடுதலைப்புலிகள் விஷயத்தில் யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத வைகோவின் குரல், சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக ‘ரத்தக் காட்டேறி’ ராஜபக்ஷே முடிவெடுக்கிறான். அதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டத்தின் படி தேவைப்படுவோருக்கு எலும்புத் துண்டுகளை தூக்கிப் போடுகிறான். பெற வேண்டியவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டு, எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்-பட்டதற்கு இது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் ஸ்டெர்லைட் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி, ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரையில் நடைபயணம் சென்றவர் வைகோ. நீதிமன்றம் வரை சென்றும் நியாயம் கேட்டவர். இதனால் வைகோவை பழிதீர்க்க அந்நிறுவனத்தின் சார்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவர்களும் இந்த வெளியேற்றத்துக்கு பின்னணியாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல். இதெல்லாம் வைகோவுக்கும் தெரியுமா? அவருக்கு இருக்கும் மனச் சோர்வுக்கிடையே இதனையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்-பில்லை. தெரிந்தாலும், இதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். ஏனென்றால், இப்படிப்பட்ட சதிகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் அவர். ‘ஜெயலலிதா நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே... அதிலென்ன தவறு. நடந்திருப்பது அதுதானே. ஏற்கனவே கருணாநிதி இப்படித்தான் செய்தார். அவரைவிட மோசமாக ஜெயலலிதா செய்திருக்கிறார். துரோகத்தில், நயவஞ்சகத்தில், நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் இருவரும் குறைந்தவர்கள் அல்ல. அதனால்தான் அந்த இரண்டு சக்திகளுமே வீழ்த்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட முடிவெடுத்திருக்கிறோம். தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டு, அவர்களை எப்படி வீழ்த்த முடியும்? இந்தத் தேர்தலில் அழிய வேண்டிய இரண்டு சக்திகள் மோதிக் கொண்டால், ஏதாவது ஒரு சக்தி இன்னொரு சக்தியால் வீழ்த்தப்பட்டுவிடும். அப்ப, இயற்கையாகவே அரசியலில் ஒரு காலியிடம் உருவாகும். அந்த இடத்தை இட்டு நிரப்பும் சக்தி வைகோவுக்குத்தான் உண்டு. அந்த இடத்தில் இருந்து கொண்டு விசுவரூபமெடுத்து, தேர்தலுக்குப் பிறகு மீத-மிருக்கும் சக்தியை நாங்கள் வீழ்த்திக் காட்டுவோம். விசுவரூபமெடுப்பதற்கு முன்னால் இருக்கும் தற்காலிக அமைதிதான் தேர்தல் புறக்கணிப்பு. அ.தி.மு.க. மீதான கோபத்தில் நீங்கள் தேர்தலை புறக்கணிப்பதால், உங்கள் தொண்டர்களெல்லாம் தி.மு.க.வுக்கு ஓட்டளித்து விட மாட்டார்களா? அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அழிக்கப்பட வேண்டிய இரண்டு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் இலக்கு. அதற்காகத்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். எங்கள் தொண்டர்கள் புத்திசாலிகள். இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்துவிட்டார்கள். அதன்படியே வீழ்த்திக் காட்டுவார்கள்...’’ தேர்தல் புறக்கணிப்பால் ம.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படாதா? தேர்தலுக்குப் பிறகு நாங்கள் வீறுகொண்டு எழுந்து வருவோம். எங்களுக்கு ஏற்பட்ட காயங்களையெல்லாம் வீதிக்கு வீதி மக்களிடத்தில் கொண்டு செல்வோம். மறுமலர்ச்சி பயணத்தில் இப்போதுதான் புதிய வாசல் திறந்திருக்கிறது. இதை இனி சரியாகப் பயன்படுத்துவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment