அதிமுக கூட்டணி என்பது பிடிக்காத மாப்பிள்ளை பெண்ணுக்கு நடக்கும் திருமணம் போன்றது என்று திண்டுக்கல் லியோனி கூறினார்.
சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ்குமாரை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, சித்ரா நகர், நேரு நகர், வெங்கட்டாபுரம், கோதாமேடு, கொத்தலால் சாவடி தெரு உட்பட சைதை பகுதிகளில் 11.04.2011 அன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசு மக்களுக்கு நன்மை செய்துள்ளது என்ற உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளது.
ஆனால் எதிர்கட்சியினர் எதையுமே செய்யாமல் வாக்கு கேட்கின்றனர். பொது வாழ்க்கைக்கு வந்தபின் டென்ஷன் இருக்க கூடாது. ஆனால் விஜயகாந்த் எப்போதுமே டென்ஷனாக உள்ளார்.
பெண்ணை பிடிக்காத மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையை பிடிக்காத பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதை போல¢ ஜெயலலிதா & விஜயகாந்த் கூட்டணி உள்ளது.
விஜயகாந்தை கேப்டன் என்று சொல்வதற்கு ஜெயலலிதாவால் முடியவில்லை. இதுவரை சொன்னதும் இல்லை. அதைப்போல¢ ஜெயலலிதாவை முதல்வர் என்று சொல்வதற்கு விஜயகாந்த் தயாராக இல்லை. மே மாதம் கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்பார்.
அதன் பின்னர் தனி அறையில் இருந்து கொண்டு நான்தான் முதல்வர் என்று ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கூறுவார்கள்.
இவ்வாறு லியோனி பேசினார்.
No comments:
Post a Comment