கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது - நடிகர் வடிவேலு பேட்டி



திமுகவுக்கு சாதகமாக ஆதரவு அலை வீசுவதாக நடிகர் வடிவேலு கூறினார்.
மதுரையில் வடிவேலு அளித்த பேட்டி:
தேர்தல் பிரசாரத்தின் மூலம் மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறீர்கள். இந்த அலை தி.மு.க. அணி ஆதரவு அலையாக மாறுமா?
திரையில் தோன்றி மக்களை சிரிக்க வைத்த நான், தரையில் வந்து மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தி சிந்திக்கவும் வைத்துள்ளேன். இது எனக்கு கிடைத்த பெருமை. இந்த சிரிப்பலை கலைஞர் அவர்களை மீண்டும் முதல்வராக்கும் ஆதரவு அலையாக வீசுகிறது. மனிதனுக்கு அடிப்படை தேவை உண்ண உணவு, குடியிருக்க வீடு, உடுத்த உடை. இந்த மூன்றையும் கலைஞர் ஒரு சேர தருகிறார். இதை ஐ.நா. சபையே பாராட்டுகிறது. இதை நான் மக்களை சிரிக்க வைத்து சொல்லும்போது சிந்திக்கின்றனர். கலைஞர் சொன்னா வரும், மத்தவங்க வரும்னு சொன்னா....“ என்று நான் சொன்னதும் “வராதுனு” மக்களே திருப்பி சொல்றாங்க. எனவே கலைஞர் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கு.
விஜய்காந்த், நான் ஆட்சிக்கு வந்தால் பலசரக்கு வீடு தேடி வரும்னு சொன்னாரு. இன்றைக்கு பிரசாரத்திற்கு பல சரக்குகளை அடிச்சிட்டு வர்றாரு..... அவர் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பேசினால் அவர்களுக்குள் பிரச்சினை தான் வரும்.
உங்கள் பிரசாரத்தில் கல்வீசி இருக்கிறார்களே?
எனது பிரசாரத்தில் திருவிழா மாதிரி கூட்டம் கூடுது. இதில் எனக்கு மாலை, பொன்னாடைகள் குவியுது. ஒன்றிரண்டு கல்லும் விழுது. அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி கோட்டையில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை திசைதிருப்பும் நோக்குடன் சிலர் இப்படி செய்றாங்க. எத்தனை கல்லடி வீசினாலும் என் சொல்லடியை தடுக்க முடியாது.
வடிவேலுவிடம் ஒரு நிருபர், நடிகர் சிங்கமுத்து குறித்து கேள்வி கேட்டதற்கு “பேட்டி நல்லா தானே போய்கிட்டு இருந்தது. திடீர்னு நரகலை ஏன் இழுக்கிறீங்க...” என்றார்.

No comments:

Post a Comment