கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 23, 2011

6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி: ராமதாஸ்


6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் 23.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

இலங்கை தமிழர்களுக்காக குரல் தருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, “இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் ஏற்கனவே குரல் தந்து கொண்டுதான் இருக்கிறோம். தொடர்ந்து குரல் தருவோம்” என்றார் ராமதாஸ்.
முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் 23.04.2011 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு (பாமக), வி.சி. கட்சி நிர்வாகி செல்லபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஞானசேகரன் எம்எல்ஏ கூறியதாவது:
இந்த தேர்தலில் நாங்கள் அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டோம். எதிர்க்கட்சிகளைப் போல மாயாஜாலம் செய்யவில்லை. எனவே, திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளையும் இந்த கூட்டணி கைப்பற்றும். 6வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராவார்.
இவ்வாறு ஞானசேகரன் எம்எல்ஏ கூறி னார்.

மீண்டும் ஆட்சி அமைக்க வாழ்த்து - ஓய்வூதியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு :

முதல்வர் கருணாநிதியை தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் கருணாநிதி மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மு.காதர் மீரான் 23.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மு.காதர் மீரான் 23.04.2011 அன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றி முத்திரை பதித்துள்ள முதல்வர் கருணாநிதி, மீண்டும் 6வது முறையாக முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றும், அவருடைய ஆட்சிக் காலத்தில் பெற்ற சலுகைகள், தமிழக அரசு அலுவலர்கள்& ஆசிரியர்கள், ஓய்வூதியர்களும் தங்களுடைய நன்றி விசுவாசத்தை, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரதிபலித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் எம்.பி.கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் கோ.சீதாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment