தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை :
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி 05.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவிலேயே குறைந்த சம்பளம் பெற்று வந்த கேவலத்தை நீக்கி, தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகைகளை முதல்வர் கருணாநிதி தந்துள்ளார். மத்திய அரசில் இல்லாத சலுகைகளான தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம், பணியில் இறந்துவிட்டால் குடும்ப நிதி அளித்து வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த அநியாயங்கள் அத்தனையும் நீக்கி நன்மைகள் செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் முழுவதும் நிறைவேற்றி, மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றியுள்ளார். மீண்டும் கருணாநிதி முதல்வராக வர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் எல்லா தரப்பு மக்களும் நன்றியுடன் வாக்களிப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் :
முடிதிருத்தும் தொழிலாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் :
தமிழ்நாடு மருத்துவர், முடிதிருத்துவோர் சங்கங்கள் நல கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, நாமக்கல், குமரி, நெல்லை. திருவண்ணாமலை, கோவை, தூத்துக்குடி, கடலூர், திருவாரூர் மற்றும் மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
சங்கத் தலைவர் மயிலை குமார், நிர்வாகி நடேசன் தலைமையில் சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் உள்ள தொகுதிகளில் 8, 9, 10 தேதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிக்க உள்ளனர்.
திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவர் முன்னேற்ற கழகம் ஆதரவு :
திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவர் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவர் முன்னேற்றக் கழகப் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தங்கதுரை தலைமையில் ஈரோட்டில் நடந்தது. பொதுச்செயலர் இளங்கோ, பொருளாளர் ஞானசந்திரசேகரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதில் திமுக அரசின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களால், மக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வுபெற்ற அலுவலர்கள் திமுகவுக்கு ஆதரவு :
திமுக கூட்டணிக்கு பரவர் சங்கம் ஆதரவு :
ஓய்வுபெற்ற அலுவலர்கள் திமுகவுக்கு ஆதரவு :
தமிழ்நாடு அரசு பணி நிறைவுபெற்ற பல்துறை அலுவலர் கூட்டமைப்பின் தலைவர் பாண்டுரங்கன் வெளியிட்ட அறிக்கை:
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல சலுகைகளை திமுக அரசு வழங்கியுள்ளது. அதில் பல சலுகைகளை 2006ல் அமைந்த அதிமுக அரசு ரத்து செய்தது. அதிமுக அரசு ரத்து செய்த அலுகைகள் அனைத்தையும், மீண்டும் நடைமுறைப்படுத்தியது திமுக அரசு. 2006 தேர்தலில் எந்த உத்வேகத்தை காட்டினோமோ, அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை திமுகவுக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக்கு பரவர் சங்கம் ஆதரவு :
அகில இந்திய பரவர் சங்கக் கூட்டம் ராதாபுரத்தில் தலைவர் ரெக்ஸ்டன் பர்னாண்டோ தலைமையில் நேற்று நடந்தது. இதில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தவர் முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காக 1984ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கிறிஸ்தவ மீனவர்களை 1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் அவர் தான்.
மேலும் 1971ல் ஜி.ஆர். எட்மண்ட்டை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக நியமித்ததும், மறைந்த தமிழறிஞர் வலம்புரிஜானை 1972ல் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதும் திமுக தான். 1996ல் திமுக ஆட்சியில் ஜெனிபர்சந்திரனை மீன்வளத்துறை அமைச்சராக்கியதும் கருணாநிதி தான். மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ததும் திமுக ஆட்சியில் தான்.
மீனவர்களுக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் கருணாநிதி தான். எனவே திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment