முதல்வர் கருணாநிதி உத்தரவின்பேரில், காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகளுக்கான வீடு கட்டும் பணி துவங்கியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990ல் இருந்து செயல்படுகிறது. இங்கு 72 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களின் நலன் கருதி அகதிகளாக வசிக்கும் இவர்களுக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம், இலவச காஸ் இணைப்பு, கலர் டிவி, கர்ப்பிணி பெண்களுக்கான உதவி தொகை என தமிழக மக்கள் பெற்ற அனைத்து சலுகைகளையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அகதிகள் முகாமில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன்படி, காட்டுமன்னார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் 75 குடும்பங்களை சேர்ந்தோருக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வீடும் தலா
ஸீ1
லட்சம் நிதியில் பாண்டிச்சேரி மல்டி பர்ப்பஸ் சோசியல் வெல்பேர் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டுவதற்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு பணி துவங்கியது.
வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகத்திடம் இடத்தை வாங்கி 42 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை தொண்டு நிறுவன அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment