கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

தேர்தல் முடிந்து 3 மாதத்திற்குள் சாய ஆலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உறுதி


விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்காத வகையில் திருப்பூர் சாய ஆலை பிரச்னைக்கு தேர்தல் முடிந்து மூன்று மாதத்துக்குள் நிரந்த தீர்வு ஏற்படுத்தப்படும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் பேசினார்.
திருப்பூர் மாவட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், 06.04.2011 அன்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பல்லடம் சட்டமன்ற தொகுதி கொ.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமார், திருப்பூர் வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, அவிநாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நடராஜ் ஆகியோரை ஆதரித்து தயாநிதிமாறன் பேசியதாவது:
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சி தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்தியுள்ளது. இதை நான் சொல்லவில்லை. பிரபல ஆங்கில தொலைக்காட்சியான சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சி இதனை அறிவித்து, தமிழகத்துக்கு வைரமாநில விருதினை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிஅனைத்தையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஒரு ரூபாய்க்கு அவர் வழங்கும் ஒரு கிலோ அரிசியை வாங்கி சாப்பிடாத ஆளே கிடையாது. கலைஞர் காப்பீடு திட்டத்தால் பயனடைந்தோர் ஒவ்வொரு தெருவிலும் இருக்கின்றனர். 95 சதவீதம் பேருக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் பேருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் மீதமுள்ளவர்களுக்கு டி.வி. வழங்கப்படும். ஆனால் ஜெயலலிதா வந்தால் தரமாட்டார். இருப்பதையும் பிடுங்கி கொள்வார். முதல்வர் கருணாநிதி சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தார்.
இப்போது, அவர் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு அந்த இரண்டையுமே சேர்த்து தரலாம். அதோடு மட்டுமல்ல, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் கூட தரலாம். 58 வயதானவர்களுக்கு இலவச பஸ்பாஸ் தருகிறார். ஏழை பெண்கள் திருமண உதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்தப்படும். மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் யார் என்பதை எண்ணிப்பாருங்கள். வீட்டு வேலைக்கு ஒருவரை வேலைக்கு வைத்தாலே அவரது கடந்த காலத்தை விசாரித்துதான் எடுக்கிறோம். நாட்டை ஐந்தாண்டு காலம் ஆள வேண்டியவர் யார் என்பதை முடிவு செய்யும்போது அவரை எடைபோட்டு பார்க்க வேண்டாமா?
ஜெயலலிதா ஆட்சியின் போது, ஏதாவது நலத்திட்டம் செய்தார் என கூற முடியுமா?. இலவசமாக ஏதாவது வழங்கினாரா?. எஸ்மாவையும், டெஸ்மாவையும் இலவசமாக வழங்கினார். தனது 45வது வயதில், 35 வயதுள்ள ஒருவரை மகனாக தத்தெடுத்து, அவருக்கு ரூ.100 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தவர் தான் ஜெயலலிதா. பின்னர் மகன் வேண்டாம் என தத்தை ரத்து செய்து விட்டு, அவரை கஞ்சா வழக்கில் கைது செய்தவர்.
அதேபோன்று சசிகலாவை திருப்திப்படுத்த, ஷெரினா என்கிற பெண்ணை மதுரையில் இரவில் கைது செய்து, கஞ்சா வழக்கு போட்டவர் தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவை ஆதரித்த சங்கராச்சரியாரை கைது செய்ததும் ஜெயலலிதா தான்.
தேர்தல் கமிஷனராக இருந்த டி.என்.சேஷன், நேர்மையாக தேர்தல் நடத்தியதால் அவரது வீட்டை அடித்து நொறுக்கியவர் ஜெயலலிதா. வாஜ்பாய் அரசை 13 மாதத்தில் கலைத்தவர் ஜெயலலிதா. ஏன், விஜயகாந்தை தன்னுடன் சேர்த்துக்கொண்டு இவருடன் சகோதரராக பழகி வந்த வைகோவை, கழற்றி விட்டவர் தான் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே முதல்முறையாக பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் சாய ஆலை பிரச்னை உள்ளது. ரூ.320 கோடி மானியம் வழங்கினோம். இப்பிரச்னைக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம். ஆனால், பிரச்னை எப்படி ஏற்பட்டது. சாய ஆலை பிரச்னைக்கு மூல காரணமே அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. நிதியமைச்சர் பொன்னையன் பேச்சை கேட்டு, அவர் அளித்த நிர்பந்தத்தால் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைக்கு சாய ஆலை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதால் தான் பிரச்னையே ஏற்பட்டது.
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண கழிவுநீரை கடலில் கொண்டு சேர்ப்பதா அல்லது விஞ்ஞான ரீதியில் தீர்வு காண்பதா என்பது தொடர்பாக முடிவு செய்து நிரந்தர தீர்வு காணப்படும். தொழில் பிரச்னையை தீர்ப்பதோடு, விவசாயத்தை காப்பது அரசின் கடமை. நொய்யல் ஆறு காப்பாற்ற படும். நொய்யல் ஆற்றை மாசுபடுத்துவது பெற்ற தாயை அவமதிப்பதற்கு சமம். எனவே திருப்பூர் சாய ஆலை பிரச்னை மட்டுமல்லாது, விவசாய பிரச்னைக்கும் தீர்வு காணப்படும். விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்காத வகையில் திருப்பூர் சாய ஆலை பிரச்னைக்கு தேர்தல் முடிந்து 3 மாதத்திற்குள் நிரந்த தீர்வு ஏற்படுத்தப்படும் என நான் உறுதி கூறுகிறேன்.
ஒரு வீட்டில் மாமியாரும், மருமகளும் இணக்கமாக இருந்தால் தான் வீடு சிறப் பாக இருக்கும். அதேபோன்று மத்திய அரசுடன் இணக்கமான அரசு மாநிலத்தில் அமைந்தால் தான் தீர்வு ஏற்படும். தி.மு.க. அரசு அமைந்தால் சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். ஜெயலலிதா வந்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டு தான் இருப்பார். பிரச்னை தீராது. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது கூறியுள்ள வாக்குறுதிகளையும் 6வது முறையாக முதல்வராக கருணாநிதி அமர்ந்து செய்து தருவார்.

இவ்வாறு அமைச்சர் தயாநிதி மாறன் பேசினார்.
நம்பிக்கையுடன் வாக்களியுங்கள்
தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் பேசுகையில், “சாய ஆலை பிரச்னையில் தி.மு.க. எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. மூன்றே மாதத்தில் சாய ஆலைகளுக்கு ரூ.320 கோடி மானியமாக வழங்கியது தி.மு.க. அரசு. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. தி.மு.க.வால் மட்டுமே இப்பிரச்னை தீர்க்கப்படும். மூன்றே மாதத்திற்குள் ரூ.320 கோடி ஒதுக்கியது தி.மு.க. அரசு. சாய ஆலை பிரச்னையையும் தி.மு.க அரசு தான் தீர்க்கும். பலர் வருவார்கள், வாக்குறுதிகளை வீசுவார்கள். ஆனால் தீர்வு காண்பது தி.மு.க.வாகத்தான் இருக்கும்,” என்றார்.
யார் வந்தால் நல்லது?
பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் தயாநிதிமாறன், “கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கிய போது, அதிகாலையில் எழுந்து பிரச்னை குறித்து கேட்டறிந்தவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா எழுந்திருக்கவே இல்லை. அவரை எழுப்பவும் யாருக்கும் தைரியமில்லை. காரணம் கேட்டால் அன்று ஞாயிற்றுக்கிழமையாம். ஆனால் முதல்வர் கருணாநிதி அப்படியில்லை. அதிகாலை முதல் முதல்வரை யாரும் எளிதாக சந்திக்கலாம். ஜெயலலிதாவை சந்திக்கவும் முடியாது. பிரச்னைக்கு தீர்வும் காண முடியாது. எனவே, யார் வந்தால் நல்லது செய்வார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். தமிழகத்தை பொற்காலம் நோக்கி செல்ல திமுக கூட்டணியை ஆதரியுங்கள். மீண்டும் கருணாநிதியை முதல்வராக்குங்கள்,” என்றார்.

No comments:

Post a Comment