கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 5, 2011

தி.மு.க கூட்டணிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அதன் தலைவர் மயிலை பெரியசாமி தலைமையில் சென்று சென்னையில் முதல்வர் கருணாநிதியை 04.04.2011 அன்று சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

திமுக கூட்டணிக்கு
வீரவன்னியர் பேரவை ஆதரவு :
வீரவன்னியர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் வேங்கை கே. அய்யனார் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ் மக்களின் தேவைகளுக்கேற்ப நாள்தோறும் புதிய திட்டங்களை தீட்டி, தமிழ் மக்கள் பயன்பெற வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு வீர வன்னியர் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்காகவே செயல்படுத்தி காட்டியுள்ளார்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு செய்தது, ராமசாமி படையாச்சியாருக்கு சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, வன்னியர்களுக்கென தனிநல வாரியம் அமைத்துக்கொடுத்த கருணாநிதியை 6வது முறையாக முதலமைச்சராக்குவது வன்னியர்களின் கடமையாகும். அனைவரும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம். இவ்வாறு வேங்கை அய்யனார் கூறியுள்ளார்.
திமுக கூட்டணிக்கு புதிய பாரதம் ஆதரவு :
முடிதிருத்துவோர் முன்னேற்ற சங்கம், புதிய பாரதம் அமைப்பு ஆகியவை திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலன் விடுத்துள்ள அறிக்கையில், ‘மருத்துவ சமுதாய காவலனாக இருந்து வருபவர் முதல்வர் கருணாநிதி. கிராமங்களில் வசிக்கும் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை கொடுத்துள்ளார். எனவே, தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்ககேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
புதிய பாரதம் நிறுவன தலைவர் ரூபராஜ் வெளியிட்ட அறிக்கை:
திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற புதிய பாரதம் பாடுபடும். இவ்வாறு ரூபராஜ் கூறியுள்ளார்.
முன்னாள் கிராம அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவு :
வேலை இழந்த முன்னாள் கிராம அதிகாரிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
14.11.1980 அன்று இரவோடு இரவாக அதிமுக ஆட்சியில் கிராம முன்சீப்கள் 35,000 பேர், கர்ணங்கள் (கணக்குப்பிள்ளை) ஒழிக்கப்பட்டார்கள். நமக்கு பென்ஷன் வழங்குவதை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. முதல்வர் கருணாநிதி 1996ல் அரியணை ஏறியபோது உச்ச நீதிமன்ற அப்பீலை வாபஸ் பெற்று, அரசாணை பிறப்பித்து விதவை தாய்மார்களும், நாமும் பென்ஷன் பெற்று வருகிறோம். நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய நமக்கு மறுவாழ்வு அளித்த தமிழக முதல்வர் 6வது முறையாக அரியணை ஏற நாமும், நமது குடும்பமும் நன்றியுடன் வாக்களித்து ஆதரவு நல்க வேண்டும்.




No comments:

Post a Comment