‘சீர்காழியில் கட்டப்பட்டு வரும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை, 6வது முறையாக ஆட்சியமைத்து முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்’ என்று செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் முதல்வர் கருணாநிதி ரூ.1.51 கோடியில் சீர்காழி தாலுகா அலுவலகம் அருகில் மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 8 மாதமாக நடந்து வருகிறது. இப்பணியை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 20.04.2011 அன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகி றது. மணிமண்டபம் கட்டு மான பணியில் சுதை வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான 2 கல் யானைகளும், அதன் மேல் பண்ணும், பரத மும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தின் உட்புரத்தில் ரூ.30 லட்சத்தில் தயார் செய்யப்பட்ட தமிழிசை மூவர் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. விரை வில் பணிகள் முடிந்து, முதல்வராக கருணாநிதி 6வது முறையாக பதவியேற்ற பின் மணிமண்டபத்தை திறந்து வைப்பார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment