தேர்தல் நாளான 13.04.2011 அன்று வன்முறையை தூண்டிவிடும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி 12.04.2011 அன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதுமே தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பி, பிறர் மீது சுமத்தி, தன்னை ஒரு பாவமும் அறியாத உத்தமியாகக் காட்டிக் கொள்வதில் ஜெயலலிதாவுக்கு ஈடு ஜெயலலிதாதான்.
எப்போதுமே தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பி, பிறர் மீது சுமத்தி, தன்னை ஒரு பாவமும் அறியாத உத்தமியாகக் காட்டிக் கொள்வதில் ஜெயலலிதாவுக்கு ஈடு ஜெயலலிதாதான்.
அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அறிக்கையில், அதிமுக என்பது அகிம்சையின் அவதாரம் என்பதுபோல, பம்மாத்து செய்திருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதியில் விக்கிரவாண்டி பெரிய காலனியைச் சேர்ந்த தி.மு.க பேரூராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனனை நேற்று கொலை செய்ததைக் கூட மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கிறார் ஜெயலலிதா.
மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி சங்கர் நாராயணன் தலைமையில் தமிழகக் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட், காவல்துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் அடங்கிய ஒரு குழுவிடம், தேர்தல் நாளன்று வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு மீது ஒரு அபாண்டமான பழியைச் சுமத்தியுள்ளார்.
தோல்வி பயத்தால் துவண்டு நிற்கும் கட்சிக்காரர்களைத் தூண்டி விடும் வன்முறைப்போக்கு, உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிகிறதே அல்லாமல் தமிழகத்தில் இந்த சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கடுகளவாவது அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
வேண்டுமென்றே உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, பொய்க்குதிரையில் சவாரி செய்து புழுதி வாரித் தூற்றுகிறார். அவர் தூற்றும் புழுதி அவர் கண்களைத்தான் மறைக்கும்.
எனவே தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருந்து ஜனநாயகத்திற்கு தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment