கோவை வடகோவையை சேர்ந்தவர் பால்ராஜ். பிரின்டிங் பிரஸ் கூலித்தொழிலாளி. மனைவி ஷீபா. இவர்களது ஒரே மகள் தர்ஷினி(5). முதல் வகுப்பு படிக்கிறார்.
சிறுமிக்கு பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்தது. இருதய ஆபரேஷனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். கலைஞர் காப் பீடு திட்டத்தின் கீழ், இவருக்கு கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்த முதல்வர் கருணாநிதியை சந்திக்க தனது தாத்தா ஜார்ஜூடன் 31.03.2011 அன்று காலை ரெசிடென்சி ஓட்டலுக்கு சிறுமி சென் றார். ஈரோடு செல்ல கரு ணாநிதி ஓட்டலை விட்டு வெளியே வந்தபோது வரா ண்டாவில் சிறுமி முதல்வரை சந்தித்தார். கையில் சால்வை வழங்கி, ‘நன்றி ஐயா‘ எனக்கூறினார். இதைக்கேட்டு முதல்வர் நெகிழ்ச்சி அடைந் தார். சிறுமியின் கன்னத்தில் தட்டிக்கொடுத்து அருகில் அழைத்து பேச்சுக்கொடுத்தார். முதல்வர் அருகில் நின்று சிறுமி போட்டோ எடுத்துக்கொண்டார்.
சிறுமியின் தாத்தா ஜார்ஜ், இருதய ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்துகொடுத்த வக்கீல் மகுடபதி, கார் த்திக் செல்வராஜ் ஆகி யோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment