கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 30, 2011

வெற்றி தோல்வி சகஜம்: திருச்சி சிவா


தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என கோத்தகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.


மேலும் பேசிய திருச்சி சிவா,


தி.மு.க தேர்தல் கட்சியல்ல. இது சமுதாய சீர்திருத்த இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம்தான் திமுக. அதேநேரம் வெற்றி பெற்ற கட்சி கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தூக்கி வீசாமல் அதனை செம்மைப் படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் செய்த நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தற்போது முக்கிய பிரச்னையாக இருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை மாணவர்கள் பயன்பெற அமல்படுத்த வேண்டும். கொடநாடு அருகில் உள்ள அண்ணாநகர், காமராஜர்நகர் பொதுமக்களுக்கு நடை பாதை திறந்து கொடுக்கவேண்டும் என்றார்.

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் ஜெயலலிதாவின் சாதனையா? - கே.என்.நேரு :

லால்குடியில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்யூமான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:


தி.மு.க ஆட்சி காலத்தில்தான் லால்குடி தொகுதியில் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தற்போது அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையா?

இவ்வாறு அவர் பேசினார்.

சமச்சீர் கல்வி அவசியம் - முல்லைவேந்தன் :

எதிர்கால சந்ததியினருக்கு சமச்சீர் கல்வி அவசியம் அதை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் பேசினார்.


தி.மு.க உயர்மட்ட செயல்குழு கூட்ட தீர்மானங்களை விளக்கியும், நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஆண்டிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.


கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:


தி.மு.க. பகுத்தறிவால் உதயமான கட்சி. பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி. நடந்த முடிந்த தேர்தல் தோல்வி என்பது ஒரு விபத்து தான். நிரந்தரம் அல்ல. பெரியார், அண்ணா கண்ட கனவுகளை நனவாக்கி ஓய்வறியா உழைப்பாளியாக 88 வயதிலும் மக்கள் பணியாற்றும் கருணாநிதியின் மூளையில் உதித்தது தான் சமச்சீர் கல்வி திட்டம்.


ஏழை, பணக்காரர், ஜாதி மத பேதங்களை தவிர்த்து அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், படித்த நிபுணர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு அமலுக்கு வந்ததுதான் சமச்சீர் கல்வி.

இதை கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக நீக்க முயற்சிக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முடிவு வருத் தத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், மேல் முறையீடு செய்வது தவறு. மாணவர்களின் நலன் கருதி உடன் சமச்சீர் கல்வித்திடத்தை கொண்டு எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. ஆட்சி மீது மாணவ, மாணவிகள் அதிருப்தி - முன்னாள் எம்.எல்.ஏ. பி.மூர்த்தி :

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மாணவ, மாணவிகளிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ. பி.மூர்த்தி தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் நகர் தி.மு.க. சார்பில் உயர்நிலை செயல்திட்ட தீர்மான விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது,

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை சந்தித்த போது பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களால் பயன்பெறாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கினோம். 6வது முறையாக கருணாநிதி முதல் அமைச்சராக வர வேண்டும் என்று கட்சியினரிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நிறைவேறாமல் போனது.


தி.மு.க. ஆட்சியில் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பயனடையாமல் இருந்து இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பயனமடையவில்லை என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். அரசு துறையில் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து இருக்கிறது. அதற்காக ஒரு ரூபாய் கூட லஞ்சமாக பணம் வாங்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் சமச்சீர் கல்வி விவகாரத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இன்னும் போக போக அ.தி.மு.க. ஆட்சி மீது பொது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கும் என்றார்.


மக்கள் இழித்துரையிலிருந்து தப்பிக்கவே புதிய தலைமைச் செயலக கட்டிட விசாரணை கமிஷன் - கலைஞர்


மக்கள் இழித்துரையிலிருந்து தப்பிக்கவே புதிய தலைமைச் செயலக கட்டிடம் குறித்து ஜெயலலிதா விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 29.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து, இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை.
தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாக கூறிக்கொண்டு, அந்த புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால், தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா, அந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் திட்டமிட்டு வேண்டுமென்றே இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.
இதற்காகவே ஒரு புகார் பட்டியலை இவர்களாகவே தயாரித்துக் கொண்டு, அதன் மீது இந்த விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் கட்டுமானப் பணியை முடிக்க தேவையில்லாத காலதாமதம் கட்டுமானத்தின்போது பல முறைகேடுகள் தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்.
விசாரணை வைத்திருப்பவர்கள் யார் தெரியுமா? முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல் அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது, இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து, மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதலமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?
விசாரணை ஆணையத்திற்கு தலைமையேற்கப் போகிறவர் யார்? நீதிபதி தங்கராஜ். இவரைப் பற்றிய வரலாற்றை தமிழ்நாடு மறந்திருக்கக் கூடும். எனவே, அதை மீண்டும் நினைவூட்டுகிறேன். தமிழக அரசின் தொழில்துறைக்குச் சொந்தமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்திற்கு, அதாவது டான்சி நிறுவனத்திற்கு உரிய வார்ப்படத் தொழிற்சாலை 1985ம் ஆண்டு மூடப்பட்டது.
1991ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா, தொழில் துறையையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார். 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவாச் சகோதரி சசிகலாவும் ஜெயா பதிப்பகத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில், கிண்டியில் உள்ள டான்சிக்குச் சொந்தமான அந்த மதிப்புமிக்க நிலத்தை வாங்குவதற்காக டான்சியின் நிர்வாக இயக்குனருக்கு விண்ணப்பித்தனர்.
அந்த நிலம் 3.0786 ஏக்கர் அல்லது 12.462 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கு கட்டப்பட்ட கட்டிடத்தின் அளவு 30,196 சதுர அடி. அரசு மதிப்பின்படி அந்த நிலம்
ஸீ4.43
கோடி. பொதுப்பணித்துறை மதிப்பீட்டின்படி அந்தக் கட்டிடம் மற்றும் இயந்திரங்களுடன் சேர்ந்து அதன் மொத்த மதிப்பு
ஸீ4.93
கோடி.
ஜெயா பதிப்பகம் அதை
ஸீ1.82
கோடிக்கு ஏலம் கேட்டு, பின்னர் வாங்கிக் கொண்டது. தொழில் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற முறையில் ஜெயலலிதாவே அந்த நிலத்தை விற்பவர், ஜெயா பதிப்பகத்தின் பங்குதாரர் என்ற முறையில் ஜெயலலிதாவே அந்த நிலத்தை வாங்குபவர். இது, இந்தியத் தண்டனைச் சட்டம் 169ம் பிரிவின்படி குற்றமாகும். வெகு சில விளக்கங்களுடன் மிகக் குறைந்த அளவே வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் ஒரே ஒரு முறை விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான விற்பனை முடிவானது.
அரசின் கணக்குப்படி அந்த நிலத்திற்கு
ஸீ57.58
லட்சம் பத்திரப் பதிவிற்காக வாங்கியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய காரணத்தால்,
ஸீ24.36
லட்சம் தான் பத்திரப் பதிவுக்கான கட்டணமாக வாங்கப்பட்டது. இந்த வழக்கிற்கான ஆதாரங்களைப் பரிசீலித்த தனி நீதிமன்றம் இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட் டது. இந்த வழக்கிற்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். அந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அந்த வழக்கை தனி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த தகுந்த அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
அவ்வாறு தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிதான் எஸ்.தங்கராஜ். அப்போதே அந்தத் தீர்ப்பு பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. பெரும்பாலான ஏடுகளும், சட்ட நிபுணர்களும் அந்தத் தீர்ப்பு சரியல்ல என்று கருத்து வெளியிட்டார்கள். வார இதழ் கல்கி ஏடு, ஜெயலலிதா நீங்கலான அனைத்து இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்த தீர்ப்பு இது என்று கூறியது. அவரைத்தான் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கான விசாரணை ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு தேடிப்பிடித்து நியமித்துள்ளது.
பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றதும், அங்கே இந்த நிலத்தை ஜெயலலிதா, அரசுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியதும் அனைவரும் அறிந்த உண்மை என்பதால், அதுபற்றியெல்லாம் நான் விவரித்திட விரும்பவில்லை.
மற்றொரு நிகழ்ச்சி. சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் வேலுச்சாமி. இவரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டை
ஸீ10
லட்சத்துக்கு அடமானம் வைத்தார். பிறகு அந்த வீட்டை கிருஷ்ணமூர்த்தி, மலேசியாவில் உள்ள தொழிலதிபர் ஜெயபால் என்பவருக்கு விற்றுவிட்டார்.
இதனால் வேலுச்சாமி பணத்தைத் திருப்பிக் கேட்டார். கிருஷ்ணமூர்த்தி பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அடமானம் வைத்த வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வர வேலுச்சாமி ஏற்பாடு செய்தார்.
இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி நேராக வேலுச்சாமி அலுவலகத்துக்குச் சென்று வீட்டு அடமான பத்திரத்தைக் கேட்டு தகராறு செய்தார். அப்போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். உடனே வேலுச்சாமி சத்தம் போட்டார். இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கிருஷ்ணமூர்த்தி ஆட்டோவில் தப்பி ஓடி விட்டார்.
இதைப்பற்றி வேலுச்சாமி திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவர் வீடியோ கடையில் சோதனை போட்டனர். அங்கிருந்த ஆபாச சி.டி.க்கள், கேசட்டுகளை கைப்பற்றினர். அவரது வீட்டில் சோதனை போட்டபோது போலி துப்பாக்கி, முக்கியமான தஸ்தாவேஜ்கள் சிக்கியது. இதனால் கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள்.
கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் கூறிய விவரம், நான் ரியல் எஸ்டேட் வீடியோ கடை வைத்து நடத்தி வருகிறேன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால் அரசியல் கட்சி பிரமுகர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரிடம் பழக்கம் ஏற்பட்டது. மலேசியாவில்கூட நண்பர் உண்டு.
கடந்த 16&10&1999ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நான், உயர் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ், வழக்கறிஞர் செல்வராஜ், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரெண்ட் செல்வரத்தினம் ஆகியோர் மலேசியாவுக்குச் சென்றோம். அங்கு தொழிலதிபர் ஜெயபால் ஏற்பாடு செய்த நட்சத்திர ஓட்டலில் 10 நாட்கள் தங்கியிருந்து விட்டு, 26&10&99ம் தேதி திரும்பி வந்தோம். இவ்வாறு அவர் கூறியதாக அப்போது ஏடுகளிலே பரபரப்பாகச் செய்தி வந்தது.
அப்படிப்பட்ட குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியுடன் 10 நாட்கள் மலேசியா சென்று தங்கியிருந்து விட்டு வந்ததாக சொல்லப்பட்டவர்தான் நீதிபதி தங்கராஜ். அவர்தான் தற்போது தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நீதியரசர் மலேசியாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம்கூட அப்போதே வெளிவந்தன. எந்த அளவுக்குப் பொருத்தமானவரை விசாரணை ஆணையத்தின் தலைவராக அதிமுக அரசு தேடிப்பிடித்து நியமித்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொது கணக்கு குழுவில் விவாதம் நடந்தது என்ன? - திமுக எம்பி விளக்கம்


பொது கணக்கு குழு விவாதம் குறித்து, திமுக எம்பி ஆதிசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் பொது கணக்கு குழு கூட்டம், நேற்று முன்தினம் (28ம் தேதி) நடந்தது. அதில் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, 2ஜி அலைவரிசை சம்பந்தப்பட்ட மாதிரி வரைவு அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய முயற்சி செய்தார். அதை, திமுக&காங்கிரஸ் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆட்சேபணை செய்தோம். ஏற்கனவே, பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட அறிக்கையை, புதிய குழுவில் தாக்கல் செய்யக்கூடாதென கூறினோம். நான், அது சம்பந்தமான விவாதத்தில் பேசும் போது, “புதிய உறுப்பினர்களால் இந்த மாதிரி அறிக்கை இறுதி செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே இந்த மாதிரி அறிக்கை முந்தையக் குழுவில் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றும், என்னை போன்று வேறு சிலர் புதிய உறுப்பினர்களாக உள்ளதால், மாதிரி வரைவு அறிக்கையின் நகல்களை எங்களுக்கு தர வேண்டும்” என்று கூறினேன்.
அதே கருத்தை குழுவில் புதியதாக உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களும் தெரிவித்தனர். எவ்வித முடிவும் எடுக்காமல் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சில ஊடகங்களில் திமுக, காங்கிரஸ் இரண்டும் மாறுபட்ட கருத்தோடு செயல்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. 2ஜி அலைவரிசை சம்பந்தப்பட்ட மத்திய பொது கணக்கு குழு விவாதங்களில், காங்கிரசுடன் திமுக இணைந்து ஒத்த கருத்துடன் செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, June 29, 2011

ஜெ. ஆட்சி முதல் 30 நாட்கள் - சுப.வீரபாண்டியன்


புதிய ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்குள் அதனை மதிப்பிடுவது சற்றுப்பொருந்தாத ஒன்றுதான். எனினும், பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்தும், விரைவாகவும் அரங்கேறிக் கொண்டிருப்பதால் அவற்றை எடை போட வேண்டிய கட்டாயத் தேவை நமக்கு எழுகின்றது.

நல்லவை சிலவும், அல்லவை பலவுமாக அரசிடமிருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மிகக் குறிப்பாக ஈழம் தொடர்பான சட்டமன்றத் தீர்மானமும், சமச்சீர்க்கல்வி தொடர்பான நீதிமன்றப் போராட்டமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தமிழீழ உறவுகளை இரண்டாண்டுகளுக்கு முன் கொன்று குவித்த இராஜபக்சே எனும் கொடூரனைச் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கும் விதம், அனைவராலும் பாராட்டப்படத்தக்கது என்பதை யாரும் மறுக்க வேண்டியதில்லை. அத்தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் காட்டாமல் வரவேற்று வழிமொழிந்திருக்கும் அனைத்துக் கட்சிகளும் பாராட்டிற்குரியவை. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே கூட அதனை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும், இன்னொரு விதத்தில் வேடிக்கை முரணாகவும் உள்ளது. சி.பி.எம் கட்சித் தோழர்கள் சார்பில் மட்டுமே, பொருளாதாரத் தடைக்கு ஒரு தயக்கம் காட்டப்பட்டு, பின்பு அவர்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கியிருக்கும் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும் என்று கோரியிருப்பதும் சரியானதாகவே உள்ளது.

இத்தகைய நல்ல தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அத்தீர்மானத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும் சிலவற்றைச் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த முயற்சியில் ஈடுபட்ட மிகப்பலர் பரிதாபமாகத் தோற்றுப்போன நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் ஜெயலலிதாவோ தன் சட்டமன்ற உரையில், வழக்கம் போல புலிகளை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அவர்கள் பயங்கரவாதிகள் என்பது போலவும், அவர்களின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யத் தூண்டுதலாக இருந்தது தானே என்றும் அவர் பேசியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் ஈழத்தில் நடப்பது சகோதர யுத்தம் என்று குறிப்பிட்ட போது, தாவிக் குதித்துத் தாண்டவமாடியவர்கள், இப்போது இந்த அம்மையார் புலிகள் பற்றிய அவதூறுகளை அள்ளி வீசும்போது அமைதியாக இருந்தனர். அதுமட்டுமின்றி இப்போது பாராட்டு விழாக்கள் நடத்திப் பரவசப்படுகின்றனர்.

கலைஞர் அறிக்கை விட்டபோதும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய போதும், தீர்மானங்கள் நிறைவேற்றிய போதும், இது வெறும் அறிக்கைதானே, இது வெறும் தீர்மானம்தானே என்று எள்ளலாய்ப் பேசியவர்கள், இப்போது ஜெயலலிதா அறிக்கை விட்டுவிட்டார், தீர்மானமே நிறைவேற்றிவிட்டார் என்று புகழ் மழையைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் இந்த இரட்டை வேடத்திற்கான பின்புலம் என்ன என்பதை அறியாதவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான எதிர்ப்பாளரான சோ போன்றவர்களின் ஆதரவையும், புலிகள் ஆதரவாளர்களின் ஆதரவையும் ஒரே நேரத்தில் பெற்றிருப்பவர் ஜெயலலிதா. இரண்டு அணியினரையும் தன்வயப்படுத்திக் கொள்வதே இந்த இரட்டை வேடத்தின் நோக்கம். அவருடைய நோக்கம் இயல்பாக நிறைவேறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளர்கள் தீர்மானத்தை மட்டும் ஆதரித்துப் பாராட்டுகின்றனர். புலிகளை ஏன் கொச்சைப்படுத்திப் பேசுகிறீர்கள் என்று ஒரு சொல்லும் சொல்லவில்லை. ஈழத்தில் நடந்தது யுத்தமே அன்று, இராஜபக்சேயின் செயல்களில் எந்தப் பிழையும் இல்லை என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் சோ போன்றவர்களோ, இத்தீர்மானத்தை எதிர்த்து ஒரு எழுத்தும் எழுதவில்லை. இரண்டு அணியினருக்கும், ஈழ மக்களைக் காப்பாற்றுவதை விட, ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதுதான் முதன்மை நோக்கம்.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்னும் ஜெயலலிதாவின் உரை குறித்தும் நிதானமாய் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் இப்படிப் பேசுவதும், அதற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும் முதன்முறையன்று. இரண்டையும் அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 1991ஆவது ஆண்டு ஆகஸ்ட்டு பதினைந்தில் விடுதலைக் கொடியை ஏற்றி முடித்த கையோடு, கச்சத் தீவை மீட்காமல் ஓய மாட்டேன் என்று முழக்கமிட்டார். நாடே வியந்து பார்த்தது. புதிய வீராங்கனை கிடைத்து விட்டார் என்னும் புளகாங்கிதம் எங்கும் நிறைந்தது. அதன்பின் அதனைத் தீர்மானமாகச் சட்டமன்றத்திலும் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால் அதற்குப் பிறகு அது குறித்த எந்த முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. 2001-06 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தபோதும், கச்சத் தீவு பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இப்போது திடீரென்று கச்சத்தீவின் மீது அவருக்குக் கருணை பிறந்திருப்பது, மீனவர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதற்கும், சமச்சீர்க்கல்வி போன்றவைகளில் அவர் செய்து வரும் குழப்பங்களைத் திசை திருப்புவதற்கும்தான் என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

கச்சத் தீவைக் கலைஞர்தான் தாரை வார்த்தார் என்பது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒன்று. அது குறித்து நீண்ட கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. 1974ஆம் ஆண்டு அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்த போது, தமிழக அரசின் சார்பில் அதற்குக் கடுமையான மறுப்பு எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை ஆவணங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். நெருக்கடி காலத்தில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த வேளையில்தான், கச்சத் தீவு தொடர்பான கூடுதல் உரிமைகள் சிறீலங்கா அரசுக்கு வழங்கப்பட்டன என்பதற்கும் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன. உண்மைகளைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் தன் போக்கில் ஒரு முதலமைச்சர் பேசுவது நியாயமானதன்று.

1952-54 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். காலை நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் என்பதும், மாலை நேரங்களில் அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அக்கல்வித்திட்டத்தின் சாரம். எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்துவிடக் கூடாது என்பதில் அன்றைக்கு ராஜாஜி காட்டிய உறுதியை, சமச்சீர்க்கல்வியை விலக்கி வைத்ததன் மூலம் இன்று ஜெயலலிதாவும் காட்டியிருக்கிறார். சமூக நீதிக்கு எதிரான இக்கொள்கையை எதிர்ப்பதில் போதுமான முனைப்பை ஊடகங்கள் காட்டவில்லை.

சில ஆண்டுகளாகவே தி.மு.க. அரசை அகற்றிவிட வேண்டும் என்பதிலும், கலைஞரை முதலமைச்சராக நீடிக்கவிடக் கூடாது என்பதிலும் பார்ப்பனப் பத்திரிகைகள் பல ஒரு வெறியோடு செயல்பட்டன. வெறி என்றால் கொலை வெறி என்று சொல்லவேண்டும். அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய ஆற்றல் உடையவராகவும் கலைஞர் இருப்பதால்தான் அவர் மீது அத்தனை கோபத்தை இந்தப் பத்திரிகைகள் காட்டுகின்றன. தினமணி போன்ற ஏடுகள் சிலவேளைகளில் நடுநிலை வேடத்தையும் மறந்து தங்களின் உண்மை நிலைகளை எழுதிவிடுவதுண்டு. அப்படித்தான் 09.06.2011 ஆம் நாளிட்ட தினமணி தலையங்கத்தில், “பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப் பட்டு வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதை விட, பிஞ்சு மனங்களில் விஷ‌­ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி “என்று எழுதப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறதே என்று கூட கவலைப்பட வேண்டாமாம், திராவிட இயக்கக் கொள்கைகள் பரவாமல் இருந்தால் போதுமாம். தினமணி உபதேசம் செய்கிறது. இந்த அடிப்படையில்தான் சமச்சீர்க் கல்வியே மறுக்கப்படுகிறது என்பதை நம் பிள்ளைகள் உணரவேண்டும். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களின் அட்டைகளில் இருந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முத்திரை, தாள் ஒட்டி மறைக்கப்படும் பணியும் நடந்து வருகிறது. அந்த முத்திரையில் வள்ளுவர் படம் உள்ளது. கலைஞர் மீதுதான் இந்த அரசுக்குக் கோபம். வள்ளுவர் மீது என்ன கோபம் என்றால், அவர்தானே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர். இந்த வரியல்லவா வர்ணாசிரமத்தின் மீதும், மனு நீதியின் மீதும் சாட்டை கொண்டு அடித்த வரி. அதனால்தான் அவாளுக்கு அவ்வளவு கோபம்.

சமச்சீர்க் கல்வி மட்டுமன்றி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், இலவச வண்ணத் தொலைக் காட்சிகள் வழங்கும் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள், புதிய அரசினால் கைவிடப் பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயந்த திட்டங்கள். எந்தக் காரணமும் இன்றி இவை கைவிடப்பட்டுள்ளன. ஆனால் இந்நிலையைக் கண்டித்தோ, குறைந்த பட்சம் அறிவுறுத்தியோ எழுதுவதற்குக் கூட நம் நாட்டில் ஏடுகள் இல்லாமல் போய்விட்டனவே என்பதுதான் தாளமுடியாத வேதனையாக உள்ளது.

கலைஞர் முதலமைச்சராக இருந்த வேளையில் ஒவ்வொரு அசைவையும் விமர்சித்தவர்கள், இப்போது எவ்வளவு கவனமாய்க் கண்மூடி இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கலைஞர் அரசு மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அந்த இலவசத் திட்டங்களை தா.பாண்டியன் போன்றவர்கள் எவ்வளவு கடுமையாக விமர்சித்தார்கள்! இலவசங்கள் என்ற பெயரால் தமிழக மக்களை ஏமாற்றி, 91 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை அவர்கள் தலையில் வைத்துள்ளது தமிழக அரசு என்று சொன்ன தா.பாண்டியன், இன்றைய அரசின் இலவசத் திட்டங்கள் பற்றிய கேள்விக்கு, அது மக்களை ஊக்குவிக்கும் செயல் என்று விடை சொல்கிறார். இரட்டை இலைச் சின்னத்தைப் போல, எதிர்காலத்தில் இவர்களெல்லாம் இரட்டை நாக்கைச் சின்னமாகக் கேட்டுப் பெறலாம்.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துக் கட்டப்பட்ட அழகிய தலைமைச் செயலகம், ஆதரிக்க ஆளின்றி அநாதையாய் நிற்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட செம்மொழி ஆய்வு நூலகம், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. அங்கே இருந்த அரிய நூல்களும், பழமையான ஓலைச் சுவடிகளும் என்ன ஆயின என்று அறிவாளிகள் கூட உரத்துக் கேட்கவில்லை.

ஆட்சியின் தொடக்கமே இப்படி என்றால், போகப்போக நிலை என்னாகுமோ என்னும் அச்சம் ஜனநாயகச் சிந்தனையாளர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

பேராசிரியருக்கு " பெரியார் ஒளி " விருது



விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 6 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெரியார் திடலில் 28.06.2011 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு பெரியார் ஒளி விருதும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு காயிதே மில்லத் பிறை, எழுத்தாளர் சோலைக்கு காமராசர் கதிர், பாவலர் தணிக்கை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார். மறைந்த மு.சுந்தரராசனுக்கான அயோத்தி தாசர் ஆதவன் விருது அவரது சகோதரர் சின்னப் பனிடம் வழங்கப் பட்டது.
தனக்கு கிடைத்த ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தாய்மண் அறக்கட்டளைக்காக அன்பழகன் வழங்கினார். கூட்டத்தின் இறுதியில், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும், மின் தடைக்கு தீர்வு காண வேண்டும், சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
2007ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கபட்டு வருகிறது. அம்பேத்கர் சுடர் விருதை 2007ம் ஆண்டே ராமதாசுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக இப்போதுதான் வழங்க முடிந்தது. தற்போது இலவச திட்டங்களை சொல்லி, மீண்டும் நம்மை ஆடு, மாடு மேய்க்க அனுப்புவதற்கு திட்டமிடுகிறார்கள். இன்றைய எதிர்க்கட்சி தலைவரால் அம்பேத்கரை பற்றி 3 நிமிடம் பேச முடியுமா? திமுக ஆட்சியில் 1 மணி நேரம்தான் மின் வெட்டு இருந்தது. ஆனால் இப்போது 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. தமிழக அரசியலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழக அரசிடம் நாங்கள் கேட்பது, எங்களுக்கு இலவச பொருட்கள் வேண்டாம். கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள். சமச்சீர் கல்வியை திரும்ப தாருங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை


திமுக தலைமைக்கழகம் 28.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
குவிந்திடும் கட்சி பணிகளை சிறப்பாக ஆற்றிடவும், அவற்றிற்கேற்ப கட்சி சட்ட திட்டங்களில் உரிய தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்களை பொதுக்குழுவின் அனுமதி பெற்று செய்திடவும் தலைமைக் கழகத்தின் சார்பில் சில கருத்துகளுக்கான சட்ட திட்டங்களை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை மனதில் கொண்டு, கருத்துரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தங்கள் கருத்துக்களை பொதுக் குழு உறுப்பினர்கள், ஜூலை 15ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழகத்தின் கருத்து: தற்போதுள்ள மாவட்ட கழகத்திற்கு பதிலாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும், நாடாளுமன்ற தொகுதி குழுக்கள் தனித்தனியாக இயங்கும். அவற்றின் கீழ் சட்டமன்ற தொகுதிக் குழுக்கள் பணியாற்றும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலைஞரிடம் கல்லூரி மாணவர் வாழ்த்து


தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் வாசுதேவன் முதல் பரிசு பெற்றார். அவர் தனது ஓவியத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் 28.06.2011 அன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.

கனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு


தி.மு.க.வை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த வாரம் டெல்லி சென்று திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கு முன்பும் ஒருமுறை சந்தித்து இருக்கிறார்.

இதுபோல் தி.மு.க. பொருளாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினும் ஏற்கனவே டெல்லி சென்று கனிமொழியை சந்தித்து இருக்கிறார். மீண்டும் அவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்து 27.06.2011 அன்று காலை 8.40 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவரை தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாலையில் திகார் ஜெயிலுக்குச் சென்று கனிமொழியை சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் எம்.பி.க்கள் ஏ.கே.எஸ்.விஜயன், ஜெயதுரை ஆகியோரும் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

ஏறத்தாழ 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அதே ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.




குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி


ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறுபவன் நல்ல அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், நல்ல மனிதனாகவும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இந்த இதழ், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியை பாருங்கள்.

தமிழ்த்தேசியம், தலித் விடுதலை, ஈழ விடுதலை என எல்லாத் தளங்களிலும் வேலை செய்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.சட்டமன்றத் தேர்தல் தோல்வியை உதறிவிட்டு தொடர்ந்து தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் திருமாவளவன். அவருடன் பேசியதிலிருந்து....

தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் உங்கள் கட்சி தோற்றுப் போயிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

‘‘கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதும், கூட்டணிக்கான ஆதரவு குறைந்ததும் முக்கியக் காரணம். இந்தத் தேர்தல் தோல்வியில் சினிமா நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள், வெளியில் இருந்து ஆதரவளித்த விஜய், அஜீத், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அவர்கள் கண்மூடித்தனமாக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார்கள்.’’

தி.மு.க.வின் தோல்விக்கு அவர்களது குடும்ப அரசியலும், வாரிசுகளின் ஆதிக்கமும் முக்கிய காரணம் என்று நினைக்கிறீர்களா?

‘‘தி.மு.க.வில் குடும்ப அரசியல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டார்கள். ஆனாலும், இந்தத் தேர்தல் தோல்விக்கு குடும்ப ஆதிக்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதைவிட முக்கியமான காரணம் ஊடகங்கள்தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு முன்னதாகவே தி.மு.க.விற்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள். வரலாற்றில் எந்த மாநிலத்திலும், எந்தத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொண்டதில்லை.’’

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதற்கு காரணம் சொல்லியதே ?

‘‘புதுச்சேரியில் காலங்காலமாக எல்லாத் தேர்தல்களிலும், எல்லா வேட்பாளர்களும் ஓட்டுக்குப் பணம், மது கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது. அங்கே இந்தக் கெடுபிடிகள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலிலும் விளம்பரம் எழுதுவதிலோ, பிரசாரம் செய்வதிலோ அங்கே எந்தக் கடுமையும் காட்டப்படவில்லை.’’

தமிழகத்தில் மட்டும் இந்தக் கெடுபிடிகளுக்கு என்ன காரணம்?

‘‘தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிஸம் பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற ஒரே கட்சி தி.மு.க.தான்.

இதெல்லாம் பிடிக்காதவர்கள் தி.மு.க.ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நீண்ட காலமாகவே ஊடகத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள். ஊடகங்கள் மூலமாக, தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சி, ஊழல் கட்சி என அம்பலப்படுத்தினார்கள். தி.மு.க.வினர் ஊழலே செய்யாதவர்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், நாட்டில் இதற்கு முன்னரும் எத்தனையோ பெரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தி.மு.க.வை மட்டும் எதிர்ப்பதற்கு பெரிய தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது.

இதையெல்லாம் மீறி இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் முதல் 30 ஆயிரம் வாக்குகள் ரசிகர்களின் வாக்குகள்தான். தி.மு.க. கூட்டணி தோற்றுப் போனதற்கு ரஜினிகாந்தும் ஒரு காரணம். ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதும், அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் அதிகரித்துவிட்டது.’’

உங்கள் கூட்டணியும் பிரசாரத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும்தானே நம்பியிருந்தது? சினிமா நடிகர்களை நம்பி தேர்தல் முடிவு இருப்பது ஆபத்தான போக்குதான் இல்லையா?

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என சினிமா நடிகர்கள்தானே இங்கே வெற்றி பெறுகிறார்கள். இங்கே உழைப்புக்கோ, திறமைக்கோ, தியாகத்துக்கோ, அறிவுக்கோ, ஆற்றலுக்கோ மரியாதை இல்லை. ஒரு சினிமாக்காரன் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்கிற நிலைமை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.’’

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

‘‘2006 தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைத்தோம். அந்தத் தேர்தலில் எங்களை ஓரங்கட்டுவதற்கான அத்தனை வேலைகளையும் அ.தி.மு.க. செய்தது. அதிலிருந்து வெளியேறி நாங்கள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது ஒரு பத்திரிகையில், ‘விடுதலைச் சிறுத்தைகளை உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா?’ என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு செல்வி. ஜெயலலிதா, ‘சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை’ என்று சொன்னார்.

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட பெரிய கட்சிகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. 2006 தேர்தலில் நாங்கள் தி.மு.க.வில் சேர நினைத்தபோது ‘விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கூட்டணியில் இடமில்லை’ என கலைஞர் சொன்னார். 2009-ல் நாங்கள் பா.ம.க., ம.தி.மு.க., தமிழ்த்தேசிய அமைப்புகளோடு தனி அணி அமைக்க முயற்சி செய்தோம். யாரும் ஒத்துழைக்காததால், தி.மு.க.வில் நாங்கள் தொடர வேண்டியதாயிற்று.

மறுபடியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு எழவில்லை. அதிகாரபூர்வமான அழைப்பும் அ.தி.மு.க.விடமிருந்து வரவில்லை. கிடைத்துள்ள தோல்வியை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.’’

பா.ம.க., சிறுத்தைகள் கூட்டணி மூலம் வடமாவட்டங்களில் பெரிய வெற்றி கிடைக்கும் என சொல்லி வந்தீர்கள். ஆனால் முடிவு எதிர்மறையாக இருந்ததே ?

‘‘தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ம.க. நிறுவனரோடு அமர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஓட்டு விழாத இடங்களில் நூற்றுக்கணக்கிலும், தலித் வாக்குச் சாவடிகளில் பா.ம.க.விற்கு அதிக அளவிலும் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இரு சமூகத்தையும் சாராதவர்கள் இதைத் தவறாகப் பார்த்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு இரு தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் தெரிந்தது. இரு கொடிகளும் சேர்ந்து இருந்ததே ஒரு பெரிய மாற்றம்.’’

ஈழத்தையும் ஆதரித்துவிட்டு, காங்கிரஸோடு கூட்டணி என்பது உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்.’’

தேர்தல் தோல்வி, கனிமொழி கைது விவகாரங்களுக்குப் பிறகு தி.மு.க.வோடு காங்கிரஸுக்கு நல்லுறவு இல்லை. டெல்லி செல்லும் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது கூட இல்லை. ஆனாலும் கூட்டணி தொடர்வதாக கருணாநிதி அறிவிக்கிறார். இது முரண்பாடாக இல்லையா?

‘‘நாங்கள் தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் அணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கலைஞரிடம் சொல்லி வருகிறோம். ஆனால், தி.மு.க. ஒரு சூழ்நிலைக் கைதி போல் இருக்கிறது.’’

தேசியக் கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிகளை மாநிலக் கட்சிகள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் என்ன ?

‘‘மத்தியில் கூட்டணியில் இருந்தால்தான் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்கிற நோக்கில் அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியது அவசியமாகிறது. மற்றபடி மாநிலங்களில் தேசியக் கட்சிகள் பெரும் தேய்வைத்தான் சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என பயப்படத் தேவையில்லை.’’

சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது? இதனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்ன பயன் இருக்கும் என நினைக்கிறீர்கள்?

‘‘இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே ஒரு பெரிய மாறுதல்தான். ஆனால், இதைப்போல் பல தீர்மானங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு அது அவைக் குறிப்பில்தான் இடம் பெற்றுள்ளது. இந்திய அரசு அந்தத் தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.’’

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

‘புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, செம்மொழிப் புத்தகங்களைத் தூக்கிப் போட்டது போன்றவை தி.மு.க.மீதான வெறுப்பை வெளிப்படுத்துவது போல்தான் செயல்பட்டு வருகிறார். சமச்சீர் கல்வி என்கிற சமூக மாற்றத்துக்கான அருமையான திட்டத்தை பெருந்தன்மையோடு நடைமுறைப் படுத்தாமல் முடக்குவது பெருந்தவறு.’’

தலைமைச் செயலகம் பற்றி பேசுவதால் இந்தக் கேள்வி. தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நீங்கள்தானே கேள்வி கேட்டிருக்க வேண்டும்?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிதி செலவிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத் திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில் வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க. தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்க முடியாது’’ நிதானமாக முடிக்கிறார் திருமா

Monday, June 27, 2011

கோவையில் ஜூலை 23, 24 தேதிகளில் திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்


திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், கோவையில் ஜூலை 23, 24 தேதிகளில் திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 27.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தலைமை செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் கோவை மாநகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோவை மாநகர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அறிஞர் அண்ணா வளாகத்தில், ஜூலை 23ம்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டமும் மறுநாள் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுக்குழுகூட்டமும் நடைபெற இருக்கிறது.
எனவே இந்த கூட்டங்களில் தலைமை செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, June 26, 2011

திமுக ஆட்சியில் செய்தது போல டீசல் வரி குறைப்பு - சிலிண்டருக்கு மானியம் : தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 26.06.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை 50 ரூபாய் உயர்த்தியும், டீசல் விலையினை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியும், மண்ணெண்ணெய் விலை யினை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியும் அறிவித் துள்ளதன் காரணமாக ஏழை-எளிய, மத்திய தர வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

விலைவாசி உயர்வினால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ப தற்காகத்தான் தி. மு.க. 2005-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் பொறுப்பேற்ற அன்றே, அரிசியின் விற்பனை விலையை கிலோ ரூ.3.50-லிருந்து கிலோ இரண்டு ரூபாயாக குறைத்தும், 2008-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் விலையை மேலும் குறைத்து ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று விலை நிர்ணயித்தும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியது.

விலைவாசியின் கொடுமை ஏழை-எளிய மக்களை பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் 2007-ம் ஆண்டு முதல் தி.மு.க. ஆட்சியில் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, பாமாயில் போன்ற பொருள்களை வழங்கியதோடு, அதைத் தொடர்ந்து பத்து மளிகை பொருள்கள் 50 ரூபாய் என மானிய விலையிலேயே வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வந்தது.

காய்கறிகளின் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு கடைகளில் நியாயமான விலையில் விற்பதற்கான ஏற்பாடுகளை கழக ஆட்சியிலே செய்தோம். இவைகள் எல்லாம் ஒரேயடியாக விலைவாசி உயர்விலிருந்து சாதாரண மக்களைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், விலைவாசி என்னும் வெள்ளம் மக்களை ஒரேயடியாக இழுத்துச் சென்று விடாமல் தடுத்துக் காப்பாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

மத்திய அரசு டீசல் விலை, கியாஸ் விலையை உயர்த்துவதின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தி.மு.கழகம் தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது இரண்டு முறை டீசல் மீதான விற்பனை வரியை குறைத்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினைக் குறைக்கும் வகையில் மானியமளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது கூட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு 50 ரூபாய் என்பதை 34 ரூபாயாக குறைத்து, அதன்மூலம் சிலிண்டர் ஒன்றுக்கு 16 ரூபாய் மானியம் அளிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பு மற்ற மாநில அரசுகளுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய ஒன்றாகும். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையிலே மேற்கு வங்க அரசை பின்பற்றி தற்போது மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வில் இருந்து மக்களை மீட்க மாநில அரசுக்கு கிடைக்கும் விற்பனை வரியை முன்பு தி.மு.க. அரசு குறைத்துக் கொண்டது போல இப்போதும் குறைத்து அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசும், ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினை வரும்போது ஏதோ சமாதானம் சொல்லி, பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வினை நியாயப் படுத்துவதோடு விட்டு விடாமல் நாட்டு மக்களை- குறிப்பாக நடுத்தர வகுப்பினர், வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள ஏழை- எளியோரை பெரிதும் பாதிக்கக்கூடிய இந்த பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு முன் வருவதுதான் அதன் தலையாயக் கடமையாக இருக்க முடியும் என்பதையும் வலியுறுத்திட விரும்புகிறேன்’’

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம்


தி.மு.க.,வின்பொதுக்குழு கூட்டம் கோவையில் வரும் ஜூலை மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கூட்டம் நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தலைமை கழகம் 24.06.2011 அன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் விரைவில் நடைபெற உள்ளாட்சிதேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய முறைஉட்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க.,வெளியிட்டுள் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


விஜயகாந்த் மகனுக்கு சீட்டு கிடையாதா? லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள்!


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.


பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.


கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்விக்காக தமிழக அரசு நியமித்துள்ள குழு மீது நம்பிக்கையில்லை: வைகோ


சமச்சீர் கல்விக்காக தமிழக அரசு நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளால் அந்த குழுவின் மீது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
சமச்சீர் கல்வி பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆரோக்கியமாக இல்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல். 200 கோடி ரூபாய் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.
சமச்சீர் கல்வி குறித்த தமிழக அரசு அமைத்துள்ள ஆய்வுக் குழுவில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் இடம்பெற்றிருப்பது அக்கல்வி குறித்த நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் சிதைக்கும் செயல் என்றார்.

இலங்கை மீது பொருளாதார தடை: தமிழக அரசின் தீர்மானம் கண்துடைப்பு - வைகோ :

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தாமல், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வெறும் கண்துடைப்பு என்று வைகோ கூறினார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,


பொருளாதார தடை கொண்டுவரவேண்டுமானால் இந்திய அரசு பத்து நாட்களுக்கு முன்னால் இலங்கையோடு போட்ட பொருளாதர ஒப்பந்தங்கள், வர்த்த ஒப்பந்தங்களையும் இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இந்திய அரசு பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டதை கண்டித்து, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போறீர்களா இல்லையா என்று தமிழக அரசு கேட்க வேண்டும். இதையெல்லாம் கேட்காமல் பொத்தாம் பொதுவாக பொருளாதா தடை என்றால் அது உண்மையாகவே சிங்கள அரசுக்கு ஒரு பொருளதார நெருக்கடியை உண்டாக்குகின்ற அனுகுமுறையாக இருக்காது என்றார்.


கல்விக்கண் கட்டப்பட்டுள்ளது: கீதாஜீவன்


தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமைக் கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், டூவிபுரம் 3வது தெரு சந்திப்பில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கீதாஜீவன் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது கல்விக்கண் கட்டப்பட்டுள்ளது. தலைசிறந்த கல்வியாளர்களால் 2 ஆண்டு கால ஆய்வுக்கு பின் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். பள்ளிகளில் பாடம் நடத்த தடை செய்துள்ளார்கள். ரூ.200 கோடியில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை எளிதாக தூக்கி எரிந்து விட்டார்கள். தற்போது ரூ.400 கோடியில் புதிதாக புத்தகம் அச்சடிக்கிறார்கள். மக்கள் இதை கேள்வி கேட்க வேண்டும். கடந்த 2006 ம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிட்டபோது தொகுதி முழுவதும் சாலை என்பது பள்ளம் மேடுகளாக இருந்தது. பல இடங்களில் படகில் செல்வது போல் தண்ணீரும், கழிவு நீரும் தேங்கி கிடந்தது.
ஆனால் இன்று தொகுதி முழுவதும் தரமான சாலைகளை அமைத்து கொடுத்துள்ளேன். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றியுள்ளேன். பக்கிள் ஓடையை சீரமைத்துள்ளேன். மாநகர பகுதிகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன்.
இதுபோல் நூற்றுக்கணக்கான திட்டங்களையும் நிறைவேற்றியும், மாநில அரசின் திட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனாலும் மக்கள் முழுமையாக வாக்களிக்க தவறிவிட்டனர். அதே நேரத்தில் தொகுதியில் 63 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளவர்கள் இருக்கிறீர்கள் என்பதையும், மாநில அளவில் தி.மு.க.வுக்கு 1 கோடியே 45 லட்சம் பேர் வாக்களித்தவர்கள் இருக்கிறீர்கள் என்பதையும் நினைத்து மகிழ்கிறோம். எனவே எப்போதும் போல் மக்கள் பணி ஆற்றுவோம். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முயன்று போராடுவோம். எனவே தொகுதிக்கு தி.மு.க. செய்த சாதனைகளை மறக்காமல் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : அரசு வக்கீலுக்கு தெரியாமல் மனு - டி.எஸ்.பி.க்கு நீதிபதி கண்டனம்


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டித்து, விசாரணையை ஜூலை 8க்கு ஒத்திவைத்தது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.


அதில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு சார்பில் கோரப்பட்டது. அதன் பேரில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் திருத்தப்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்த நிலையில், சாட்சியாளர்களில் ஒருவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்தரப்பு சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து எதிர்தரப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரித்த குழுவில் இடம் பெற்றுள்ள டி.எஸ்.பி. சம்பந்தம் கடந்த 15ம் தேதி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்கும்படி மனுவில் கோரினார்.
அரசு வழக்கறிஞரிடம் கூட சொல்லாமல், நேரடியாக அவரே இந்த மனுவை தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றி ஜூன் 23ம் தேதி கூறுவதாக நீதிபதி மல்லிகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
அதன்படி, 23.06.2011 அன்று மனுவை விசாரித்த நீதிபதி, நேரடியாக மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கோரிய சம்பந்தத்தை கண்டித்தார். மனுவையும் நிராகரித்தார். ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், �இந்த வழக்கில் இதுவரை ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டதால் நான் ஆஜராகிறேன். எனவே, இந்த வழக்கின் நிலை குறித்து தெரிந்து கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்� என்று கோரினார். அதற்கு அரசு வழக்கறிஞர் சந்தேஷ் கவுடா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Thursday, June 23, 2011

தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பது இல்லை: பரிதிஇளம்வழுதி


தேர்தலில் வேண்டுமானால் தி.மு.க. தோற்றிருக்கலாமே தவிர தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பதில்லை என்று முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான பரிதிஇளம்வழுதி கூறினார்.

நாகை அபிராமி அம்மன் கோவில் வாசலில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதிஇளம்பழுதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் நமது கட்சி தோற்றிருக்கலாம். ஆனால் தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பது இல்லை. பொதுவாக தேர்தலில் தோற்றவர்களுக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியை தந்துள்ளது.

காரணம் அவர்கள் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்ததுதான். இந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டு தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் தான்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் சமச்சீர் கல்வியைத்தான் நிறுத்தினார்கள். இதுமட்டுமின்றி மக்களுக்கு பயன்தரும் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாக்களித்த கல்லூரி மாணவர்களுக்கு 1991 1996, 2001 2006 வரை ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார் என்பது தெரியாது.

ஒரு அரசு கொண்டு வரும் திட்டத்தை அடுத்து வரும் அரசு தொடர வேண்டும். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை திமுக தலைவர் கலைஞர் நிறுத்தவில்லை. அந்த சத்துணவுடன் வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கினார்.

2001 2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் வருங்கால மின் தேவையையும், மின்பற்றாக்குறையையும் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும் போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆந்திரா ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில கொலை, கொள்ளை, வழிப்பறி என்று தான் செய்தி வருகிறது என்றார்.

லோக்பால் மசோதா திமுக நிலை என்ன? - கலைஞர்


திமுக ஆட்சியில் லோக்பால் போன்ற ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இதுதான் லோக்பால் மசோதா குறித்த திமுகவின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி 22.06.2011 அன்று தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்பியை சந்திக்க டெல்லி சென்றிருந்தார். கனிமொழியை சந்தித்து விட்டு, 22.06.2011 அன்று இரவு சென்னை திரும்பினார்.
அவருடன் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ராட்சன், கருணாநிதியின் துணைவி ராசாத்தியம்மாள், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோர் வந்தனர். கலைஞரை விமான நிலையத்தில் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
டெல்லியில் கனிமொழியைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்?
திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், அவர்களுடைய பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான்.
அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார் மற்றும் ராஜா போன் றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச் சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.
கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?
அதைப் பற்றித்தான் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து கொண்டிருக்கிறேன்.
கனிமொழியின் நிலையைப் பார்க்கும்போது, ஊடகங்களைத் தவிர்த்து அதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கேட்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம்.
“லோக்பால்” மசோதா பற்றி திமுகவின் நிலைப்பாடு என்ன?
ஏற்கனவே திமுக ஆட்சியில் இதுபோன்ற ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம். அதுதான் திமுகவின் நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதலமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உங்களுடைய கருத்தா?
உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதலமைச்சரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?
பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன். தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறு கின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பாக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது பற்றி?
எந்த அடிப்படையில் விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த பிறகு சொல்கிறேன்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் எப்போது?
ஜூலையில் நடக்கும். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்குமா?
எனக்குத் தெரியாது.
காங்கிரசுக்கும் & திமுகவுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் உள்ள உறவு நாங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் உள்ளது என்று சொன்னீர்கள். அப்படியென்றால் பிரச்னை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
எந்தப் பிரச்னையும் இல்லை.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?
யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி தான் நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகார பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.