முதல்வர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, ஜெயலலிதா மீது முதல்வர் சார்பில் 2 செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 14ம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல் பாதுகாப்பு பணியில் ஏராளமான துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் எந்த ஒரு வேலையும் இன்றி வெறுமனே நின்று கொண்டிருப்பதால், அவர்களுக்கு தேர்தல் பணிக்கான தினப்படி
ஸீ300
கொடுப்பது வீண். எனவே, அதை அரசு கொடுக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வந்துள்ளது. தேர்தல் பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபடவில்லை என்றால் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று பதிலளித்துள்ளார். இதிலிருந்து முதல்வர் மீது ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணமாகியுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கை உண்மைக்கு மாறானது. முதல்வர் கருணாநிதி 5வது முறையாக தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்து வருகிறார். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி நற்பெயரைப் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக மக்களிடம் முதல்வர் மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் முதல்வரின் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு பொய்யான ஆதாரமற்ற அறிக்கையை ஜெயலலிதா கொடுத்துள்ளார். எனவே, இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு மனுவும் முதல்வர் கருணாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘கடந்த 13ம் தேதி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையத்தை மிரட்டி வந்ததுடன் வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடும் முயற்சியில் இறங்கி இருப்பதாக வும் அதிமுகவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் தேர்தல் நாளன்று வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பொறுப்பை மத்திய உளவுத்துறை அதிகாரியிடமும், தமிழக காவல்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதில், ‘கடந்த 13ம் தேதி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையத்தை மிரட்டி வந்ததுடன் வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடும் முயற்சியில் இறங்கி இருப்பதாக வும் அதிமுகவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் தேர்தல் நாளன்று வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பொறுப்பை மத்திய உளவுத்துறை அதிகாரியிடமும், தமிழக காவல்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகள் ஆதாரமற்றது. அரசியல் உள்நோக்கத்துடன் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை உள்ளது. எனவே ஜெயலலிதா மீது அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் விரைவில் முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளன.
No comments:
Post a Comment