கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

உதயசூரியனைப் போல் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - முதல்வர் கருணாநிதி


திமுகவின் வெற்றி வாய்ப்பு உதயசூரியனைப்போல் பிரகாசமாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை கோபாலபுரம் சாரதா மேல்நிலைப் பள்ளியில் 13.04.2011 அன்று வாக்களித்து விட்டு, வெளியே வந்த முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
தேர்தல் அறிவிக்கப்பட்டு, மிகவும் சொற்ப நாட்களே பிரசாரத்துக்கு வாய்ப்பு தரப்பட்டு, வாக்களிப்பும் 13.04.2011 அன்று நடைபெறுகிறது. தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மக்கள் மன்றத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு உதயசூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது.
எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வெற்றி பெறுவோம்.
தனியாக ஆட்சி அமைப்பீர்களா? கூட்டணி ஆட்சியா?
தனியாகவும் வரலாம்; கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறதோ, அதை பரவலாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை எங்கேயும் அவர்கள் பிரசாரம் செய்யவில்லையே?
அதுதான் பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. அவர்கள் என்னைப் பற்றித் தான் தாக்கிப் பேசினார்களே தவிர, அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பற்றி எங்கும் பேசியதாக தெரியவில்லை.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தேர்தல் ஆணையம் எங்களைப் பொறுத்தவரையில் கடுமையாக நடந்து கொண்டதே தவிர, பாரபட்சமாக நடந்து கொண்டதாகச் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றிச் சொன்னால் அதிலே தவறு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும்.
தேர்தல் அதிகாரிகளைப் பயமுறுத்தியாக ஒரு புகார் வந்திருக்கிறதே, அதைப் பற்றி?
ஜெயலலிதா பயமுறுத்தியதாகவா... அதைப் பற்றி அவரையே கேளுங்கள்.
வன்முறைக்கு தி.மு.க. முயற்சி செய்வதாகவும் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களே?
அதைப்பற்றி நான் விளக்கம் அளித்திருக்கிறேன். நேற்றைக்குக் கூட விக்கிரவாண்டி தொகுதியிலே தி.மு.க. பஞ்சாயத்து தலைவரை அ.தி.மு.க. வினர் கொலை செய்திருக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது. யார் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள லாம்.
வாக்காளர்கள் எதை மனதிலே கொண்டு வாக்களிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழகத்தின் நன்மையை ஏழையெளிய மக்களின் முன்னேற்றத்தை மனதிலே கொண்டு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment