கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

தி.மு.க கூட்டணியினர் அனல் பறக்கும் பிரச்சாரம்


விஜயகாந்த் கூட்டணி கதை சொல்லி பாக்யராஜ் கிண்டல் :
விஜயகாந்த் கூட்டணி குறித்து பாக்யராஜ் கிண்டல் செய்து பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஒய்.பிரகாசை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் அனுசோனை, கெலமங்கலம், கௌதாளம், தேன்கனிக்கோட்டை, கக்கதாசம், தளி ஆகிய பகுதிகளில் பாக்யராஜ் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
ஒரு ஊரில் ஒரு மீனவன் இருந்தான். அவனுக்கு மட்டும் நிறைய மீன் கிடைத்தது. எப்படி உனக்கு மட்டும் நிறைய மீன் கிடைக்கிறது என்று மற்றவர்கள் கேட்டனர். நான் இரவு தூங்கும்போது தெற்கு பக்கம் படுத்திருந்தால் அதே திசையில் போவேன். அதேபோல் 4 பக்கங்களையும் சொல்லி அங்கு சென்றால் அதிக மீன் கிடைக்கும் என்றார். வானத்தை நோக்கி படுத்திருந்தால் எந்த பக்கம் போவாய் என்று மீனவர்கள் கேட்டனர். அன்றைக்கு மீன் பிடிக்க போவதில்லை என்றார். இதுபோல விஜயகாந்த் முதலில் மக்கள் கூட்டணி என்றார். பின் ஆண்டவனுடன் கூட்டணி என்றார் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி என்றார்.
ஒரு கப்பல் வழிதவறி கடலில் மாட்டிக்கொண்டது. ஒருவரை ஒருவர் அடித்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது. அப்போது கேப்டன் நான் தப்பு செய்து விட்டேன் என்று கூறி துப்பாக்கியை நெற்றியில் வைத்து சுட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது ஒரு அம்மா தடுத்து நிறுத்தி எனக்கு, மூளைக் கறி ரொம்ப பிடிக்கும். எனவே நெஞ்சில் சுட்டு கொள்ளுமாறு கேட்டார். மூளைக்கறி ஜெயலலிதா கேட்க ரொம்பநாள் இல்லை, தேர்தல் முடிந்ததும் கேட்பார்.
இவ்வாறு நடிகர் பாக்யராஜ் பேசினார்.
அதிமுகவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - டாக்டர் ராமதாஸ் :

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஊடகங்கள் எழுதுகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னை சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து, திருவல்லிக்கேணியில் உள்ள சிஎன்கே சாலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று பேசியதாவது:
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக, இதே இடத்தில் நான் வாக்கு கேட்டேன். தற்போது அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருவாரூரில் நடந்த பொது கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக நானும் கூட்டணி கட்சி தலைவர்களும் கடந்த மாதம் வாக்கு கேட்டோம். முதல்வர் கருணாநிதி நின்ற இந்த தொகுதியில் ஜெ.அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகவிட்டது.
கிராமங்களில் மாடு கட்டுவதற்கு சிலர் கயிறு திரிப்பார்கள். இதனால் கதை விடுபவர்களை பார்த்து சிலர் கயிறு திரிக்கிறான் என்பார்கள் கிராமத்து மக்கள். அதுபோல் சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டு கயிறு திரிக்கின்றன. படித்த ஒரு நூறு பேரிடம் கருத்து கேட்டு, அதை கருத்து கணிப்பு என்று செய்தியை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக மக்கள் இதுபோன்ற கருத்து கணிப்பை கண்டு ஏமாற மாட்டார்கள். மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் உறுதி என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1967ம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது. 1967 பிறகு 1977 வரையில் தொடர்ந்து திமுக ஆட்சி நடந்தது. 1977ம் ஆண்டிலிருந்து 1988 வரை அதிமுக ஆட்சி தொடர்ந்தது. 1989ம் ஆண்டுக்கு பிறகு தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் வரும் என்று ஊடகங்கள் எழுதுவதற்கு காரணம் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதுதான்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் மக்கள் இதயத்தில் முதல்வருக்கு நிரந்தர இடம் - ஜி.கே.வாசன் :

‘கடந்த ஐந்தாண்டில் ஏராளமான நல திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் இதயங்களில் முதல்வர் கருணாநிதி நிரந்தர இடம் பிடித்துள்ளார்’ என்று ஜி.கே.வாசன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, மத்திய அமைச்சர் வாசன் 05.04.2011 அன்று , சாயல்குடி சுற்றுப்பகுதிகளில் பிரசாரம் செய்தார். கன்னி ராஜபுரம், நரிப்பையூர், சத்திரம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், கொத்தங்குடி, ஆய்குடி, சிக்கல், இதம்பாடல் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். சிக்கல் கிராமத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:
மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம், தமிழகத்தில் நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.
ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் தமிழகத்தில் மக்களின் இதயங்களில் முதல்வர் கருணாநிதி நிரந்தர இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் இப்பகுதிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பல புதிய நலத்திட்டங்களை செயல்படுத்த அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
பிரசாரத்தின் போது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தார். முன்னதாக சாயல்குடியில் வாசனுக்கு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை திமுக கூட்டணியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் - அப்துல் ரகுமான் எம்.பி :

இஸ்லாமியரின் கோரிக்கைகளை திமுக& காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று அப்துல் ரகுமான் எம்.பி தெரிவித்தார்.
காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவருமான நாஜிமை ஆதரித்து காரைக்கால் மஸ்தான் பள்ளிவாசல், கீதர் பள்ளிவாசல் பகுதிகளில் 05.04.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் ஆலோசனை குழு செயலாளரும், எம்.பியுமான அப்துல் ரகுமான் பிசாரம் செய்தார்.
அப்போது, அப்துல் ரகுமான் பேசியதாவது:
திமுக&காங்கிரஸ் கூட்டணி மதசார்பற்ற கூட்டணியென்றாலும் இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறது. மத்தியில் காங்கிரஸ்&திமுக கூட்டணி அரசு இருக்கும்போது, மாநிலங்களில் அதே கட்சிகளின் கூட்டணி வந்தால்தான் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக அமையும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாபர் மசூதியை இடித்த கரசேவையை ஆதரித்தவர். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் இஸ்லாமியர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தன. கூடுதல் இடஒதுக்கீடு தர திமுக& காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும். அதற்கு ஜெயலலிதா எப்போதும் முன்னாளாகவே இருப்பதுதான் நல்லது என்றார்.

சிறுபான்மையினர் நலனில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை - முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் :

“தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்காதவர் ஜெயலலிதா. சிறுபான்மையினர் நலன் பற்றி கவலைபடாதவர் அவர்,“ என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் தெரிவித்தார்.
முஸ்லிம் லீக் கட்சியின் செயலாளர் முகமது அபுபக்கர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டிணம் தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
தி.மு.க. அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உலமாக்கள் பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு
^77.51 லட்சம் அரசு மானியம் வழங்கியது என இஸ்லாமியர்களின் நலனுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கேவலப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு முகமது அபுபக்கர் தெரிவித்தார்.





No comments:

Post a Comment