கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்க ஸ்டாலின் தலைமையில் குழு: கலைஞர் அறிவிப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி 14.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமகைளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் தி.மு.க. சார்பில் எம். எல்.ஏ.க்கள் குழு கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை (15.09.2011) செல்கின்றனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங் கிடவும் அறிவிக்கப்பட்டு உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார் :

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகள், மருமகன், பேரன்கள் சென்றனர்.


ஸ்டாலின் அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின்
14.09.2011 அன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார்.


சிறை அதிகாரிகளுடன் நெப்போலியன் வாக்குவாதம்


நில அபகரிப்பு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.


பின்னர் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக மதுரை சிறைக்கு 12.09.2011 அன்று மதியம் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, நெப்போலியன், தி.மு.க. நிர்வாகிகள் கும்பலாக சென்றபோது மத்திய மந்திரிகள் மற்றும் சிலரை மட்டுமே ஜெயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியும் என ஜெயில் அதிகாரிகள் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் ஜெயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயிலுக்கு வந்த மத்திய மந்திரிகள் இருவரும் ஜெயிலின் பிராதான கதவை திறந்து தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரினர். ஆனால் இறுதியில் அதிகாரிகள் சிறிய கதவு வழியாகத்தான் அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி நெப்போலியன் நாங்கள் மத்திய மந்திரிகள், எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஜெயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்க போவதாகவும், மத்திய மந்திரி நெப்போலியன் கூறிவிட்டு ஜெயிலுக்குள் இருக்கும் கருப்பசாமி பாண்டியனை பார்த்து விட்டு வெளியே திரும்பினர்.

பொய் வழக்கு போட்டால் உண்ணாவிரத அறப் போராட்டம்: திமுக தலைமை


ஜாமினில் வெளிவரும் திமுகவினர் மீது மீண்டும் பொய் வழக்குப் போட்டு சிறை வாசலிலேயே அதிமுக அரசு கைது செய்தால், திமுகவினர் உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை கூறியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக ஆட்சியினரால் பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்ட திமுகவினர் நீதிமன்றங்களில் முறையாக ஜாமின் பெறுகின்றனர். ஜாமின் மனு தாக்கல் செய்து பிணையில் வெளியே வரும்போது அவர்கள் மீண்டும் புதிய பொய் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்களை வீட்டிற்கு செல்லவிடாமல் சிறை வாசலிலேயே கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூரச் செயலை அதிமுக அரசு செய்து வருகிறது.

பிணையில் வெளியில் வரும் திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால், கட்சியினல் ஜனநாயக ரீதியாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இதனைக் கண்டித்து திமுகவினர் அடையாள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சி இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டி : அழகிரி


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 12.09.2011 அன்று திருச்சி சிறைக்கு சென்றார். அவருடன் கே.பி.ராமலிங்கம், அமைச்சர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோரும் சென்றனர்.

சிறையில் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், குடமுருட்டி சேகர், சவுந்தரபாண்டியன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரை சந்தித்தார்.

பின்னர் வெளியே வந்தவரிடன் செய்தியாளர்கள்,
‘’ திருச்சி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அழகிரி, ‘’யார் சொன்னது..... திருச்சி இடைத்தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுகிறோம்’’ என்று கூறினார்.

சட்டசபையில் திமுகவினர் 4-வது நாளாக வெளிநடப்பு





தி.மு.க. உறுப்பினர்கள் 12.09.2011 அன்று சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கியதும் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். 4வது நாளாக தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்த பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் வெளி நடப்பு செய்தார்.

கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது : கலைஞர்


பரமக்குடி கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாய மடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். உயிரிழந்தோரின் குடும் பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கலைஞர்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தம்முடைய ஆசைகளில் ஒன்றாக இருந்த போதிலும் அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

டெல்லியிலேயே ராஜீவ்காந்தியை தாமும், முரசொலி மாறனும் சந்தித்தப்போது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதாக ராஜீவ் கூறினார்.

நளினிக்கு தூக்குத் தண்டனையை திமுக அரசு ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளை திமுக அரசு செய்தது மன ஆறுதலை தருகிறது.

நளினிக்கு கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுப்படுத்தப்பட்டு இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவர்கள் மீதான குற்றம் மிகப் பெரியது என்றபோதிலும், அவர்கள் அனுபவித்த தண்டனை காலத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்தோடு இரக்கம் காட்ட முன்வர வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போதும் அதையே கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளேன்.

தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் மரண தண்டனை திமுக ஆட்சியின்போது திமுக
ஆட்சியின் போது மாற்றியமைக்கப்பட்டது.

இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, கடமைமுடிந்துவிட்டதாக கருதக்கூடாது. திமுக ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைப்படி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நம்மை நோக்கி வருகின்ற காவல்துறை அஞ்சி நடுங்க வேண்டும்: கலைஞர் பேச்சு




தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதின் மூலம் நம்மை நோக்கி வருகின்ற காவல் துறையாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அரசின் அத்து மீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் (10.09.2011) நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.


தி.மு.க. தலைவர் கலைஞர் பேசுகையில்,


தி.மு.கழகத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எத்தகையது என்பதை நாங்கள் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறோம். இங்கே வந்திருக்கின்ற நீங்களும் அனுபவ ரீதியாக அவற்றை உணர்ந்திருக்கிறீர்கள்.

இந்திராகாந்தி காலத்தில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்த அதிகாரிகள், காவல் துறையினர், சிறைத் துறையினர் இவர்கள் எல்லாம் நம்முடைய கழகக் கண்மணிகளை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினார்கள் என்பதை நான் இப்பொழுது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.


அந்தக் காலக் கட்டத்திலேயே தி.மு.கழகத்தை யாரும் அடியோடு வீழ்த்தி விட முடியவில்லை. தி.மு.கழகம் அன்றைக்கும் வளர்ந்தது, வலிமையோடு வளர்ந்தது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற சோதனைகள் அது வீரத்தோடு, நெஞ்சுரத்தோடு நடைபெற்ற காரியங்கள் நெருக்கடி காலத்திலே என்றால் இன்றைக்கு வஞ்சகத்தோடு நம்மை எப்படியும் அழித்து ஒழித்து நாம் இருக்கின்ற இடத்திலே அவர்கள் வந்து அமர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு நடைபெற்ற தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரியம் தான் இன்றைக்கு நடைபெறுகிறது.

இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளை யெல்லாம் சந்திப்போம் அதிலிருந்து மீண்டு வருவோம் நாம் மாத்திரமல்ல, நம்முடைய கழகத்தையும் மீட்போம் என்ற அந்த உணர்வோடு தான் வழக்கறிஞர்களாகிய நீங்கள் எல்லாம் இங்கே குழுமியிருக்கிறீர்கள்.


இந்த அரசு மாத்திரம் இவ்வளவு கொடுமைகளை இழைக்காமல் இருக்குமேயானால், இவ்வளவு பேர் சிறையிலே தள்ளப்படாமல் இருந்திருப்பார்களேயானால் இவ்வளவு வழக்கறிஞர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாமலே போயிருக்கும்.


அந்த வகையிலே நீங்கள் இன்று வரையிலே நம்முடைய கழகத் தோழர்களை மீட்பதற்காக கழகக் கண்மணிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது படிந்திருக்கின்ற புழுதிகளைத் துடைப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளையெல்லாம் நான் பாராட்டுகிறேன். தொடர்ந்து அந்த முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே நான் கேட்டுக் கொண்டு தம்பி பாரதி படித்த அந்தக் கேள்விகளை மனதிலே வைத்துக் கொண்டு அந்தக் கேள்விகளைக் கேட்டாலே நம்மை நோக்கி வருகின்ற காவல் துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே அவர்கள் பயப்பட வேண்டும்.


அதற்கேற்ப இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் மனதிலே வைத்துக் கொண்டு "ரைட்டு இன்பர்மேஷன்'' என்ற அந்தத் தலைப்பில் "இன்பர்மேஷன்'' என்று எண்ணினாலே எதற்காக இந்த இன்பர்மேஷனை கோருகிறார்கள் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்படும். அந்தப் பயமே கூட நம்மைப் பாதுகாக்கின்ற ஒரு எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே அதையும் பயன்படுத்துங்கள்.


நம்முடைய கழகக் காவலர்களுக்கு இது போன்ற தொல்லைகள் ஏற்படும்போது அவர்களை கைது செய்திருக்கிறோம், சிறையிலே வைத்திருக்கிறோம், அவர்களுக்கு ஜாமீன் தர மாட்டோம்

என்றெல்லாம் சொல்லுகிற போது அவர்களுக்கு அரணாக இருந்து, அவர்களுக்கு துணையாக இருந்து, அவர்களை மீட்டுக் கொண்டு வருகின்ற அந்தப் பணியினையும் நீங்கள் தான் ஆற்ற வேண்டும்.


அப்படி ஆற்றுகின்ற அந்தப் பணி அரும்பணியாக, அறிவுப்பணியாக, கழகத்தைக் காப்பாற்றுகின்ற பணியாக அமைந்திட வேண்டும், அதற்காக செலவழிக்க வேண்டாமா என்று நீங்கள் கேட்பது உங்கள் உள்ளங்களிலே ஒலிப்பது என்னுடைய காதுகளிலே வீழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.கழகம், பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்து விட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி என்பதை மறந்து விடாமல் வழக்கறிஞர்கள் தங்கள் வாக்குச்சாதுர்யத்தையே தங்களுடைய வாத வல்லமையையே தங்களுடைய நா திறமையையே நம்பி வழக்காடி அந்த வழக்கிலே வெற்றி பெற்றோம் என்ற நல்ல செய்தியை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

செலவு செய்வதற்கு உங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கழகம் இருக்கிறது. கழகம் என்பது தலைமைக் கழகம் மாத்திரமல்ல ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கழகத்திற்கு எத்தனை கிளைகள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே மகாப் பெரிய இந்த பேரியக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மனதிலே பதிய வைத்துக் கொண்டு இதற்கெல்லாம் போய் நாம் தலைமைக் கழகத்தை எதிர்பார்க்கக் கூடாது, தலைமைக் கழகத்தை எதிர்பார்க்கக் கூடிய காலம் வேறு உண்டு, அந்த நேரத்தில் எதிர்பார்ப்போம், அப்படி எதிர்பார்க்கின்ற நேரத்தில் அவர்கள் நம்மை ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் பணியினை ஆற்றுங்கள்.

நீங்கள் பெருந்திரளாக இன்றைக்கு வந்திருப்பதை இந்தச் சர்க்காரை இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாக நான் கருதுகிறேன்.

என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.



கருப்பசாமி பாண்டியன் கைது












நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் தென்காசி திமுக எம்.எல்.ஏவும், தற்போதைய நெல்லை புறநகர் மாவட்ட திமுக செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் 10.09.2011 அன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

தனது சொந்த கிராமமான திருத்து கிராமத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரது சகோதரர் சங்கரசுப்புவையும் கைது செய்தனர்.

அவரை பாளையங்கோட்டை ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பால்பாண்டி, கருப்பசாமி பாண்டியனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் மதுரை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மனிதத்தன்மைக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் டில்லி மேலவையில் தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்


மனித தன்மைக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் என்று டெல்லி மேலவையில் பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3பேரும் 20 ஆண்டு களுக்கும் மேலாக தண்டனை நிறை வேற்றப்படாமல் சிறைவாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் குடியரசுத் தலை வருக்கு அனுப்பிய கருணை மனு மீது 11 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படா மல் ஊறப்போட்டு விட்டு இப்போது அதை குடியரசுத் தலைவர் மாளிகை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் அவர்களுடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் கள். தமிழக சட்டசபையும் மரண தண் டனை மீது மறுபரிசீலனை செய்யக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. டில்லி மேலவையில் இந்தப் பிரச் சினையை தி.மு.க. எம்.பி.சிவா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- கவன ஈர்ப்பு தீர்மானம்
மரணதண்டனை மனிதத்தன்மைக்கு எதிரானது. கொடூரமானது. இது தண் டனை என்ற பெயரில் இன்னும் இந்திய சமூகத்தில் நீடித்து வருகிறது. இந்தியா சமூக மதிப்பீடுகளுக்கும், அமைதிக்கும் தார்மீக நடத்தைக்கும் பெயர் பெற்ற நாடு ஆகும். மரண தண்டனையை பல நாடுகள் ரத்து செய்து விட்ட நிலையில் அந்தத் தண்ட னையை நாம் இன்னும் ரத்து செய்யாமல் பாதுகாத்து வருகிறோம். மரணதண்ட னையை ரத்து செய்வதற்கு இதுவே தக்க தருணம். இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்
மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் நீண்ட காலமாக அவை நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்தத் தண்டனை பெற்ற கைதிகள் நீண்ட காலமாக மரணத்தின் எல்லையில் தவிப் போடு காத்து இருந்தனர். இது அவர்களின் மனநிலையையும் உடல் நிலையையும் பாதித்து இருக்கும். எனவே அவர்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். - இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

கோபாலபுரம், அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட வில்லை: மேயர் மா.சுப்பிரமணியன்




சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்08.09.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞர் வீட்டிலும், அண்ணா அறிவாலயத்திலும் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுவது பற்றி கேட்டனர். அதற்கு மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் வசிக்கும் கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்த பிறகும் தொடர்ந்து பொய் புகார்களை கூறுவது வேதனை அளிக்கிறது. சென்னையில் பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு தூய்மைப்பணியை செய்வதற்காக தெருக்களில் வீடுகளுக்கிடையே சந்துக்கள் இருந்தன. பாதாள சாக்கடை திட்டம் வந்ததும் அந்தந்த வீட்டு உரிமையாளர்களே சந்துக்களை உபயோகித்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் 1968ம் ஆண்டே வீட்டுப்பகுதியில் உள்ள சந்தை உபயோகப்படுத்த ரூ. 3650 அரசுக்கு செலுத்தி உள்ளார். தீவிர பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அவருக்கு பாதுகாவல் பணியில் இருக்கும் போலீசாருக்காக இப்போது அந்த இடத்தில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை அவரே தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். அப்படி இருந்தும் தொடர்ந்து வீசப்படும் பழி தி.மு.க.வை களங்கப்படுத்துவதற்குத்தான். கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சியில் ரூ. 4 ஆயிரம் கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு கிரவுண்டு கூட மீட்கப்படவில்லை. அண்ணா அறிவாலயத்துக்கு முன்புள்ள பூங்காவை அறிவாலயமே பராமரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆக்கிரமிப்பு இருப்பதாக சொல்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் அண்ணா அறிவாலய பூங்காவுக்கு செல்லலாம், அமரலாம் என்றார்.