கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

‘ஆஃப்’ அடிக்க சொன்னவருக்கு ‘ஆப்பு’ அடிப்போம் - ராமதாஸ் பேச்சு


‘ஆஃப்’ அடிக்க சொன்னவருக்கு ‘ஆப்பு’ அடிப்போம், என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் செஞ்சியில் 11.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது, ராமதாஸ் பேசியதாவது:
செஞ்சி கோட்டையில் ரோப்கார் திட்டம் நிறைவேற்ற கருணாநிதியை சந்தித்து நிதி ஒதுக்க கோரிக்கை வைப்பேன். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஒழுங்கு இல்லாமல் உள்ளது. இதனை கண்டித்து தேர்தல் முடிந்த பிறகு போராட்டம் நடத்துவேன். எனக்கு போராட்டம் என்பது அல்வா சாப்பிடுவதுபோல. நத்தன் கால்வாய் திட்டம், பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் கலை கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.
இங்கு அமைந்துள்ள கூட்டணி, செஞ்சி கோட்டையை விட வலுவானது. இதைவிட தமிழகத்தில் கூட்டணி உண்டா? சாதனை தொடர வேண்டுமானால் கருணாநிதி ஆட்சிக்கு வரவேண்டும் என சோனியாவும், கருணாநிதியின் சாதனை தொடர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் பேசினர். ‘ஆஃப்’ அடிக்க சொன்னவருக்கு, ‘ஆஃப்’ அடிக்காமலேயே ‘ஆப்பு’ அடிப்போம்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - ராமதாஸ் அறிக்கை:

எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பணம் படைத்தவர்களுக்கு தங்கள் உரிமையை நிலை நாட்ட எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இல்லாதவர்களுக்கு தங்களது உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவும், விரும்புகின்றவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்பு தேர்தல்தான். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.
இந்தத் தேர்தலில் இரண்டு அரசியல் அணிகள் மோதுகின்றன. ஒன்று மாநில மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்குகின்ற அணி. அதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போன்று விளங்குகின்ற ஒற்றுமையில்லாத கூட்டணி.
மூட்டையை அவிழ்த்துவிட்டால் சிதறி ஓடும் நெல்லிக்காய்களை போன்று பதவி என்கிற முடிச்சு அவிழ்ந்தால் சிதறிப்போய்விடுவார்கள். தேர்தல் காலத்தில் கூட ஒற்றுமையில்லாத இவர்கள் தேர்தலுக்குப் பிறகு எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக் காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி.
கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன்கள் வரை சிந்தித்து அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்து சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய சாதனைக்காக வாக்களியுங்கள். புதிய சரித்திரம் படைத்து காட்டுகிறோம் என்ற வாக்குறுதியுடன் மக்களை சந்திக்கும் கூட்டணி. சாதனைகளை நிகழ்த்தும் இந்தக் கூட்டணியா? அல்லது மீண்டும் கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் எதிர்க்கட்சிக் கூட்டணியா? எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வர வண்டும் என்று சீர்தூக்கிப் பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளையும், சாதித்த சாதனைகளையும் எடுத்துச் சொல்லும் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மீது நம்பிக்கை வையுங்கள். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றுகின்ற அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை புறக்கணியுங்கள். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். தமிழர்கள் வாழ்வில் உயர்வார்கள். இல்லையென்றால், அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, 50 ஆண்டுகளுக்கு தமிழகம் இருண்டு விடக்கூடிய நிலை உருவாகும்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment