கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு - நாஞ்சில் சம்பத் சூசகம்


நமக்கு உரிய அங்கீகாரம் தராமல் புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணித்தார்கள், தண்டித்தார்கள் என்ற செய்தி வரவேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோட்டில் மதிமுக சார்பில் ‘இன்றைய சூழலில் தமிழ் சமுதாயம் ஆண்மை பெற்றிருக்கிறதா? அடங்கியிருக்கிறதா?‘ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நடுவராக பங்கேற்று பேசியதாவது:
கடந்த தேர்தலில் 35 இடங்களை மதிமுகவுக்கு கொடுத்தோம். அதில் 6 தான் ஜெயித்தீர்கள். அதனால்தான் குறைந்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்கியதாக அதிமுகவினர் கூறினர். 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக எல்லா இடத்திலும் படுதோல்வி அடைந்தது. எனவே அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவே கூடாது. வரும் தேர்தலுக்கு பிறகு அரசியலில் ஒரு வெற்றிடம் வரும். அந்த இடத்தை நிரப்ப குடிகாரர்களால் முடியாது. நமக்கு உரிய அங்கீகாரம் தராமல் புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணித்தார்கள், தண்டித்தார்கள் என்ற செய்தி வரவேண்டும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதற்கேற்ப ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து நல்ல செய்தி வரவேண்டும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

இலை கருகட்டும்... சூரியன் உதிக்கட்டும் - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு :

‘இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்’ என்று தென்காசியில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
தென்காசியில் மதிமுக சார்பில் ‘இன்றைய சூழலில் தமிழ்சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா அல்லது அடங்கியிருக்கிறதா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக பங்கேற்று நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என்று பாராட்டப்பட்டவர் வைகோ. ஒரு ஆலையின் உரிமையாளரிடம் ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார். எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென் மாவட்டங்களில் அதிமுகவை தூக்கி நிறுத்தியவர்களுமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், சாத்தூர் ராமச்சந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னச்சாமி, எம்.ஜி.ஆரின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட தாமரைக்கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தவர் ஜெயலலிதா.
இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரன் என ஒரு கூட்டம் உள்ளது. அவர்களுக்கே இடம் காணவில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார்கள். ஜெயலலிதாவும், ராஜபக்ஷேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள். வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக்கூடாது. கனி இருக்க காயை விரும்பக்கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும். இலை கருகட்டும். சூரியன் உதிக்கட்டும்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

ம.தி.மு.க. வை ஒதுக்கியவர்கள் உரிய பலனை அனுபவிப்பார்கள் - நாஞ்சில் சம்பத் பேச்சு :

பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: ம.தி.மு.க. இன்று ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்லில் போட்டியிடுவது என்று எடுக்கப்பட்ட முடிவை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். இத்தனை ஆண்டுகள் எங்கள் வியர்வையையும், உழைப்பையும் வீணடித்துவிட்டோம். இனி எங்கள் வியர்வையும், உழைப்பும் ம.தி.மு.க. வின் வளர்ச்சிக்கானதாக அமையும்.
இந்த தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்பதை ம.தி.மு.க. தொண்டர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். எங்களை ஒதுக்கியவர்கள் இந்த தேர்தலில் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள். ஏப்ரல் 13க்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் மூவர் ம.தி.மு.க. வில் இணைய உள்ளார்கள். அவர்கள் யார் என்பது ரகசியம்.
விஜயகாந்த் கட்சியையும், மக்களையும் வழிநடத்த தகுதியற்றவர். கருப்பு துண்டு அணிந்திருப்பதாலேயே வை.கோ. வை கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலக்கினார் என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் விஜயகாந்த் என்ன வெள்ளையாகவா இருக்கிறார்? அவர் ‘புல்‘ அடித்தால்தான் ‘ஆப்‘ ஆவது பேச முடியும் என்று கூறினார்.



No comments:

Post a Comment