கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

ஊழலால் ஓரம்கட்டப்பட்ட ஜெ., வைகோவால் விமோசனம் பெற்றார்


‘ஊழல், ஊதாரித்தனத்தால் ஓரங்கட்டப்பட்ட ஜெயலலிதா, வை கோவால் சாப விமோசனம் பெற்றார். ஜெயலலிதாவின் தலைமை, அதிமுகவுக்கு சாபக்கேடு’ என திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் ஆவேசமாகப் பேசினார்.
மதிமுக சார்பில் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. நகர செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பிச்சை முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்வராகவன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், நகர துணைச்செயலாளர் செல்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
சட்டசபைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை என்ற காரணத்தால் நாங்கள் கவலைப்படவோ, இளைத்து விடவோ, தளர்ந்து விடவோ இல்லை. அதிமுக ஒரு கும்பல். மதிமுக ஒரு இயக்கம். இந்த இயக்கத்தின் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிமுக தொண்டர்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. ஜெயலலிதா மீதுதான் கோபம். அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் தலைமை ஒரு சாபக்கேடு. ஊழல் செய்து, ஊதாரித்தனம் செய்து ஓரங்கப்பட்ட ஜெயலலிதா, வைகோவால் சாப விமோசனம் பெற்றார்.
கறுப்புத் துண்டு போட்டவர்கள் வேண்டாம் என கூறினீர்கள். ஈஸ்வரன் கோயில் எண்ணெய் சட்டி போல் உள்ள தலைவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். கள்ளிப்பாலும் கண் நோயை தீர்க்கலாம், ஓலமிடும் கடலும் அமைதியாகி விடலாம், ஆனால், ஜெயலலிதா மட்டும் திருந்தவே மாட்டார். சட்டசபை கூட்டத்தொடரில் காரணமே இல்லாமல் அதிமுகவுடன் வெளிநடப்பு செய்தோம். அந்த அளவுக்கு அதிமுகவுடன் முகம் கோணாமல் நடந்தோம்.
விஜயகாந்த் நிதானமில்லாமல் வருகிறார். வேட்பாளரை காரணமில்லாமல் அடிக்கிறார். அவருக்கு 41 இடம் கொடுத்தீர்கள். ஆனால், எங்களை காரணமே இல்லாமல் வெளியேற்றினீர்கள். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நாங்கள் தனியாக தேர்தலில் நிற்கவில்லை. ஏனென்றால் கோடிக்கணக் கில் பணம் வாங்கிக் கொண் டோம் என்று பேசுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment