கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 30, 2010


லைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் தி.மு.க. தென் மண்டல செய லாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வெளிப்படையாக பேச... அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கீரனிடம் சொன்ன கருத்தும் உன்னிப்பாக கவனிக் கப்படுகிறது. இந்த சூழலில் கலைஞர் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராகவும், தி.மு.க.வின் டெல்லி முகமாகவும் இருக் கின்ற எம்.பி.கனிமொழியின் நிலை என்ன என்பதை அறிய அவரிடம் பேசி னோம். கேள்விகளை முழுமையாக உள் வாங்கி பிறகு தன் பதிலை பதிவு செய்த கனிமொழியின் பேட்டியிலிருந்து...

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான முட்டுக் கட்டைகள் தொடர்கின்றனவே? மசோதா நிறைவேற தி.மு.க. எடுக்கும் முயற்சி என்ன?
கனிமொழி எம்.பி. : பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா லோக்சபாவில் நிறைவேறுவதற்கு முன் நிறைய சவால் களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ப தாகத்தான் தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறை வேற்றப்பட்ட போது காண் பித்த முனைப் பை இப்போதும் காட்டவேண்டி யது அவசிய மாகிறது. இந்த மசோதா நிறை வேற வேண்டும் என்று தொ டர்ந்து குரல் கொடுத்துவருகிறார் தலைவர் கலைஞர். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று தன்னை அணுகி பேசுபவர் களிடம் பெண்கள் இடஒதுக்கீடு என்பது எங்களின் கொள்கை ரீதியான முடிவு. இதில் இருந்து நாங்கள் விலக முடியாது என்பதோடு அவர் களிடமும் மசோதா நிறைவேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். மசோதா தொடர்பான கூட் டத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு தலைவரின் கருத்துக்களை வலியுறுத்தி பேசியதோடு மற்ற தலைவர்களிடமும் ஒத்த கருத்தினை உரு வாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தொடர் முயற்சிகளின் மூலம் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்தானே பெண்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. அரசியலுக்கு வரும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்வது?
கனிமொழி எம்.பி. : இந்த பிரச்சனை அரசியலுக்கு வரும் பெண் களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. வீட்டு வாசலை விட்டு வெளியே வேலைக்கு போகின்ற அத்தனை பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. பொதுவெளியில் செயல்படக்கூடிய அத்தனை பெண்களுக்கு எதிராகவும் இந்த சமூகம் அல்லது ஆணாதிக்கம் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் இந்த தனிமனித தாக்குதல்தான். இதை ஒதுக்கித் தள்ளிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர இதற்கு பதில் கூறிக்கொண்டோ அல்லது இதற்காக பயந்து முடங்கிப்போவதோ கூடாது. எல்லா பெரிய அரசியல் தலைவிகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் இது. அதனால் பெண்கள் குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்கள் இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதலைத்தான் முதல் ஆயுதமாகவும், முடிவான ஆயுதமாகவும், முழுமையான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஏசுநாதர் சொன்னது போலத்தான்... கல்லெறியும் தகுதி இருப்பவர்கள் எறியலாம். பெண்களுக்கு எதிராக இந்த கல்லை எறியும் யாருக்கும் அந்த கல்லை எறியும் தகுதி இல்லை. எனவே பெண்கள் இதை எல்லாம் புறம் தள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டிற்கு உலகத்தமிழறிஞர்களின் ஆதரவு... குறிப்பாக ஈழத்தமிழ் அறிஞர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?
கனிமொழி எம்.பி. : ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தம்பிதான் ஆய் வரங்கத்தின் தலைவராக செயல்படுகிறார். அவரை விட ஈழத்தமிழர்கள் மீது அக்கறையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றித்தான் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கமே நடைபெற இருக்கிறது. கிட்டதட்ட 85 தமிழறிஞர்களுக்கு மேல் சிறப்பு விருந்தினர்களாக தலைவர் அழைப்பை ஏற்று வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். 6 ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் வந்திருக்கிறது. எந்த மாநாட்டுக்கும் வராத அளவிற்கு கட்டுரைகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதில் இருந்தே கோவை செம்மொழி மாநாட்டிற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் உறுதியான கட்சியாக இருக்கின்றது தி.மு.க. ஆனால் சமீபகாலமாக நடக்கின்ற நிகழ்வுகள் இந்த உறுதித் தன்மையை குலைத்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள் தொண்டர்கள். அவர்களின் கவலையைத் தலைவர்கள் புரிந்துகொண்டிருக் கிறார்களா? கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிப்படையாகவே அறிவித் திருக்கிறாரே?
கனிமொழி எம்.பி. : சொல் லப்படக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக் கும் நாம் ஒரு அர்த்தம், பரபரப்பு எல்லாம் உருவாக்கிக் கொண்டோம் என்றால் எல்லாமே குழப்பமாகவே நம் கண்களுக்குத் தெரியும். சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்களை சாதா ரணமாகவே புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து, சொல்லப்பட்ட வார்த் தையை, சூழலை விட்டு தனியே எடுத்து அர்த்தம் கற்பித்தால் அது பத்திரிகை களுக்கு பரபரப்பு தீனியாக அமையுமே தவிர... உண்மையின் பிரதிபலிப்பாக இருக்காது.

அழகிரி - ஸ்டாலின் இரு வருக்கும் இடையிலான உரசல்கள் பற்றி கலைஞரே வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?
கனிமொழி எம்.பி.: கட்சிக்கு எது முக்கியம், நான் எதை முக்கியமாக நினைப்பேன் என்பதை இரண்டு பேருமே புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அதனால் அதன்படி செயல்படுவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையைத்தான் தெரிவித்திருக்கிறார்.

அழகிரியும், ஸ்டாலினும் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்று நக்கீரனில் சொன்னார் கலைஞர். அவரின் வலியை இரண்டு அண்ணன்களும் உணர்ந்திருக்கிறார்கள் என நம்புகிறீர்களா? கனிமொழி எம்.பி.: எனக்கான வலியை அறியாதவர்கள் அல்ல என்றுதான் தலைவர் சொல்லியிருக்கிறார். அறிந்துகொள்ள வேண்டும் என்ற சொல்லவில்லை. அறிந்தவர்கள் என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். தலைவருக்கு இருக்கின்ற நம்பிக்கை தி.மு.க.வில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் உங்க ளிடம் பாசத்தை வெளிப்படுத்துவதில் முதன்மையானவர் யார் என்று நினைக் கிறீர்கள்?
கனிமொழி எம்.பி.: வெளிப்படுத்து வது என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். இதில் முதன்மையானது, இரண்டாவது என்றெல்லாம் எப்படி வரிசைப் படுத்த முடியும்.

சரி...நீங்கள் விரும்புவது அதிரடி அரசியலையா? அமைதி அரசியலையா?
கனிமொழி எம்.பி.: தலைவர் பல நேரங்களில் அமைதியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். பல நேரங்களில் அதிரடியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். நான் இரண்டையுமே ரசிக்கிறேன். அவரைப் போலவே இரண்டுவித மாகவும் இருக்கவே விரும்புகிறேன்.

தி.மு.க.வின் டெல்லி முகமாக நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டீர்கள். உங்களுடைய பணி யை நீங்கள் எந்த அளவு சரியாக செய்திருப்ப தாக நினைக்கி றீர்கள்? நீங்கள் பரபரப்பாக செயல்படுவ தில்லை என் கிற கருத்து உள்ளதே?
கனிமொழி எம்.பி.: எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை, ஒவ்வொரு முறையும் நான் சரியாகவே செய்திருக்கிறேன். இக்கட்டான சூழல்களிலும், தலைவரின் கருத்துக்களை சரியாக செய்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதேநேரத்தில் தலைவருக்கும் அது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பதை மீடியாவில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொள்ள விரும்பியது இல்லை. ஏனென்றால் பல காரியங்கள் மிகுந்த சென்சிட்டிவானதாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் பெட்ரோல் உயர்வாகட்டும், பெண்கள் இடஒதுக்கீடு ஆகட்டும் எல்லாவற்றிலும் நான் என் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். கட்சிக் கான சந்திப்புகளையும், கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் வெளிச்சம்போட்டு நான்தான் செய்தேன் என்று ஒவ்வொரு முறையும் பறை சாற்றிக்கொள்வது அவசியம் அல்ல என்பது என்னுடைய எண்ணம்.
குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தனக்கு லாபமாக நினைப்பார் முதல்வர் என்கிறாரே சோ?
கனிமொழி எம்.பி. : குழப்பம் தலைவருக்கு லாபமாக போவது என்பது தமிழ்நாட்டிற்கு லாபம்தான். அது சோ போன்றவர்களுக்கு லாபமாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் இவரைப் போன்றவர்கள், கலைஞர் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் வராதா? தி.மு.க.வில் குழப்பம் வராதா? அந்தக் குழப்பத்தை வைத்து குளிர் காயலாமா என்று காத் திருப்பவர்கள். இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த குழப்பத்தை வைத்து தனக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்காதா என நினைப்பவர்கள் சரியான நேரத் தில் மக்களால் ஒதுக்கப்படுவார்கள். தலைவருக்கும், கட்சிக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்பதை புரிந்தவர் களாகவே மக்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர், அழகிரிக்கு மத்திய அமைச்சர், தயாநிதிக்கு கேபினட் என பதவிகள் கொடுத்த கலைஞர் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் கொடுக்காதது பற்றி வருத்தப்படு கிறீர்களா? விரைவில் ஓய்வு பெறப்போகிறேன் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் உங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டிருக்கிறதா?
கனிமொழி எம்.பி.: தலைவர் கலைஞர்தான் முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என என்னை அழைத்து வந்தார். ராஜ்யசபா எம்.பி. ஆக்கியதும் அவர்தான். எத்தனையோ பேரின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய தலைவரே என்னுடைய எதிர் காலத்தையும் முடிவு செய்வார். அதனால் என் அரசியல் எதிர்காலம் பற்றி நான் எந்தக் கவலையும் படவில்லை.
சந்திப்பு: ச.கார்த்திகைச்செல்வன்

Wednesday, April 28, 2010

பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியது எப்படி? - டி. ஆர். பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி

முதலமைச்சரைச் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேரா. சுப.வீ. வேண்டுகோள்


சென்னை, ஏப். 27_ நேற்றிரவு (26.4.2010) 8 மணியளவில் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவர்தம் இல்லத்தில், பக்கவாத நோயால் அவதிப்படும் 81 வயது மூதாட்டியான அன்னை பார்வதி அம்மாள் அவர்களை மீண்டும் மலேசியாவிலிருந்து இங்கே வந்து உரிய சிகிச்சை பெற, அவர்களிடமிருந்து கடிதம் வரும் நிலையில், மத்திய அரசுக்கு எழுதி அனுமதித்து ஆவன செய்யவேண்டும் என்பதை ஒரு மனுமூலம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து வேண்டுகோள் மனு ஒன்றை அளித்து, சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய கருத்துகள் அடிப்படையில் ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்!

முதல்வர் அவர்கள் மனுவைப் பெற்றுக்கொண்டு, பார்வதி அம்மா அவர்களிடமிருந்து கடிதம் வந்தால், அதற்குரிய அனுமதி ஏற்பாடுகளை மத்திய அரசுடன் பேசி செய்வதாக இணக்கமாகக் கூறினார்கள்.

மூவரும் நன்றி தெரிவித்து, சிறிது நேரம் உரையாடி விடை பெற்றனர்!

அம்மனுவின் வாசகங்கள் வருமாறு:

பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு,

கனிவான அன்பு வணக்கம்.

சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மையார் 16.4.2010 அன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தபோது, சென்னையில் இறங்குவதற்கு குடியுரிமை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து தாங்கள் 19.4.2010 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தீர்கள்.

நான் மீண்டும் தமிழகத்தில் வைத்தியம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதி அம்மையார் விரும்புவார்களேயானால், கடிதம் எழுதுவார்களேயானால், அதுபற்றி மத்திய அரசுக்கு எழுதி, அனுமதி பெற தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துள்ளதற்கு எங்களின் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் கூறும் நல்லுலகம் இதனை நன்றி உணர்வோடு வரவேற்றுப் பாராட்டும் என்பது உறுதி.

இந்தப் பிரச்சினையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை_ - மூல ஆணை பிறப்பிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களை மறைத்துத் திசை திருப்பும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர். இந்த உண்மையும் அம்பலமாகிவிட்ட நிலையில், தாங்கள் கருணை கூர்ந்து, இதுபற்றி திருமதி பார்வதி அம்மாவிடமிருந்து வேண்டுகோள் வருமானால், அதுபற்றி தாங்கள் பெரு உள்ளத்துடன், உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, சட்டப் பேரவையில் அறிவித்தபடி ஆவன செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார்கள்.

பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்! - கி. வீரமணி


ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை_பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:

மிகுந்த வேதனையான கூட்டம்

மிகுந்த வேதனையோடு நடைபெறக்கூடிய கூட்டம் இது. எனக்கு முன்னாலே பேசிய எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்-செயலாளர் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்-களும் விளக்கமாகப் பல செய்திகளைச் சொன்-னார்கள்.

நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. என்னு-டைய உரை ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் இருக்க-லாம், அவ்வளவுதான்.

பிரபாகரனின் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்

பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்று சொல்லு-வார்கள். பாவத்தில், புண்ணியத்தில் நாங்கள் நம்-பிக்கை இல்லாதவர்கள்.

பிரபாகரனின் தாயார் செய்த குற்றமென்ன? ஒரு தமிழச்சியாகப் பிறந்ததுதான் குற்றமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறவர். பாதி நினைவோடு இருப்-பார்கள்; மீதி பாதி நினைவில்லாமல் இருப்பார்கள். அத்தகைய சங்கடமான சூழ்நிலையிலே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகூட...

இலங்கை அரசுகூட அவருக்குக் கருணை காட்டி மலேசியாவிற்கு அனுப்பியிருக்கிறது. மலேசிய அரசும் உதவியிருக்கிறது. இந்திய அரசு தூதரகத்தில் விசா பெற்று சிகிச்சைக்காக பார்வதி அம்மையார் சென்னை வந்திருக்கிறார்.

நான் செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்

அவர்கள் வருகின்ற செய்தி மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கு அவர்கள் யாரும் சொல்ல-வில்லை. பார்வதி அம்மையார் திருப்பி அனுப்-பப்பட்டார் என்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் நான் செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்து-கொண்டேன்.

நம்முடைய கோபதாபங்களை வெளிப்படுத்திட ஒரு நீண்ட கண்டன அறிக்கையை மனிதநேயத்துடன் எழுதினேன். மற்ற ஏடுகளுக்கும் உடனடியாக அனுப்பி வைத்தோம்.

கலைஞர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திட

இது முழுக்க முழுக்க ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகும். மனிதாபிமானமற்ற முறையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவர்-களை மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்-கள். அவர்களை திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?

கலைஞர் அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்கிற பின்னணி இருந்திருக்-கலாம்.

பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி இவர்கள் திருச்சியிலிருந்தார்கள். பிறகு, யாழ்ப்-பாணத்திற்குச் சென்றார்கள்.

இங்கே இருந்த ஜெயலலிதா அன்றைக்கு வாஜ்-பேயி அரசுக்கு ஒரு கடிதமே எழுதினார் தமிழக அரசின் சார்பில்!

பூனைக்குட்டி வெளியே வந்தது!

இந்த செய்திதான் பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதைக் காட்டியது. இந்தச் செய்தி இந்து ஏட்டில் வெளிவந்தது.

ஜெயலலிதா வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம்

2003 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களையும், அவருடைய தாயார் பார்வதி அம்மையாரையும் இந்தியா வர _ தமிழகத்-திற்கு வர அனுமதிக்கப்படக் கூடாதவர்கள் என்று அன்றைய வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினார்.

பாலசிங்கத்தையும் தடுத்தார்

இதே அம்மையார் ஆண்டன் பாலசிங்கம் நீரிழிவு நோயினால் வெளிநாட்டில் லண்டனில் அவதிப்-பட்டு சென்னைக்கு வந்து சிகிச்சை பெற முயன்ற-போது பாலசிங்கம் இங்கு வரவே கூடாது என்று தடுத்தவர் இதே ஜெயலலிதா அம்மையார்தான்.

ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய-வுடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டை வைத்து விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கணினி-மூலம் பார்ப்பார்கள். இவர்கள் வரக்கூடாதவர்கள் பட்டியலில் (ஙிறீணீநீளீ லிவீ) இருக்கிறார்களா? என்பதை சரி பார்ப்பார்கள். அது அவர்களுடைய கடமை. அப்படி இருந்தால் திருப்பி அனுப்புவார்கள். அது மத்திய அரசு அதிகாரிகளுடைய கடமை. இது ஒரு நடைமுறை.

பார்வதி அம்மையார் வருவது முதல்வர் கலைஞர் அவர்களுக்குத் தெரியாது. சொல்லப்படவில்லை.

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

அருமைச் சகோதரர் வைகோ அவர்களும், நெடு-மாறன் அவர்களும் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்களே.

2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெய-லலிதா, வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்-மையார் அவர்களையும் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியவராயிற்றே.

சட்ட ரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ...

அதுமட்டுமல்ல, இந்து பத்திரிகையில் இவர் எழுதிய செய்தி அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.

Legally or illegally சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்திற்கு விரோதமாகவோ எப்படியோ இவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியவர் ஜெயலலிதா அவர்கள்-தானே.

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே!

சகோதரர் வைகோ அவர்களுக்கும், நெடுமாறன் அவர்களுக்கும் உண்மையிலேயே அந்த உணர்வு இருந்திருந்தால், ஜெயலலிதா வீட்டு போயஸ் தோட்-டத்-திற்கு முன் அல்லவா உண்ணாவிரதம் இருந்-திருக்கவேண்டும்?

இதில் கலைஞரை சாடுவதற்கு என்ன இருக்கிறது?

இவ்வளவு மோசமான பின்னணி இருக்கிறது. இதை அவர்கள் மறைக்கலாமா? இந்த லட்சணத்தில் தமிழக முதல்வர் கலைஞரை சாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்லவா? இதில் போய் அரசியல் நடத்தலாமா?

நம்முடைய நோக்கம் எப்படியும் பார்வதி அம்மையாரை சிகிச்சைக்காக மீண்டும் அவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதில் போய் மலிவான அரசியலை புகுத்தக்கூடாது.

பிரச்சினையே இவர்களால்தான்!

வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்ற பிறகுதான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது.

உடனடியாக முதலமைச்சரைத் தொடர்பு-கொண்டு இதுபற்றித் தெரிவித்தார்களா?

யாரும் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் ஆயிற்றே!

பார்வதி அம்மையார் வருகை தடுக்கப்பட்டால், இதன்மூலம் உலகத் தமிழர்கள் மீது கலைஞர் அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த பழி சுமத்தக்-கூடிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்?

அதற்கு இதை ஒரு வாய்ப்பாக அல்லவா வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்?

சட்டமன்றத்தில்
முதல்வர் பேச்சைக் கேட்காத அ.தி.மு.க.

சட்டமன்றத்திலே இந்த சம்பவம்பற்றி பேசி-யிருக்கிறார்கள். இடதுசாரிகள், பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எல்லாம் பேசினார்கள். அதற்குப் பதில் சொல்ல முதல்வர் கலைஞர் எழுந்தவுடன் ஒவ்வொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக வெளியேறுவதா? இந்து பத்திரிகை-யில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி கலைஞர் அவர்கள் பேச முற்பட்டார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களையும் அவையில் அமர்ந்து அவர் சொல்-லப் போகின்ற கருத்துகளைக் கேட்குமாறு கேட்டுக்-கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பி-னர்கள் ஒவ்வொருவராக நழுவி வெளியேறிவிட்-டார்களே. கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கிறார். இதில் நாம் அனைவரும் ஒரே குரல் எழுப்பி செயல்படவேண்டிய செயலாயிற்றே.

இவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டாமா? போர்க் களத்தில் முதலில் கள பலியாவது வீரர்கள் அல்ல. உண்மைதான். அதைத்தான் நாங்கள் இங்கே எடுத்துச் சொல்கின்றோம்.

பார்வதி அம்மையார் சிகிச்சை பெறவேண்டிய மனிதாபிமான செயலில் இருந்து நழுவிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா?

சகோதரர் வைகோ போன்றவர்கள் ஏப். 27 ஆம்தேதி கடை அடைப்புக்காக ஜெயலலிதா அம்மை-யாரை சந்தித்திருக்கின்றன. படமெல்லாம் பத்திரி-கையில் வந்திருக்கிறது.

பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகுதான் அந்த அம்மையார் மற்றவர்களை உட்கார வைத்தே பேசுகிறார் (சிரிப்பு, கைதட்டல்).

பார்வதி அம்மையார் பிரச்சினைபற்றி உண்மை-யிலேயே உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால், இதைப்பற்றி அந்த அம்மையாரிடம் பேசினீர்களா?

நெடுமாறன்- சுப.வீக்கு வாய்ப்பூட்டு

சகோதரர் நெடுமாறன் அவர்களுக்கும், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் எங்கும் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தின்மூலம் உத்தரவு பெற்று பழிவாங்கியவர்தானே இந்த அம்மையார்.

நாங்கள்தான் பேசினோம்; கோயில் பூட்டையே அகற்றியவர் நமது முதல்வர் கலைஞர். எனவே, இவர்களுடைய வாய்ப்பூட்டையும் அகற்ற வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தோம்.

விடுதலையைப் படித்தார் கலைஞர். மறுநாள் அவரை நான் சந்தித்தேன். இப்படி நீங்கள் பேசி-யிருப்பது விடுதலையில் வந்திருக்கிறது. இதில்நாம் என்ன செய்ய முடியும் என்று கலைஞர் கேட்டார். ஒன்றுமில்லிங்க, நாம் அரசு வழக்கறிஞர் மூலமாக அந்த வாய்ப்பூட்டுத் தடையை நீக்கலாம் என்று சொன்னேன்.

முதலமைச்சர் உடனே பேசினார்

உடனே அவரே தொலைபேசியை எடுத்துச் சுழற்றி அரசு வழக்கறிஞரிடம் பேசினார்.

என்ன இப்படிச் சொல்லுகிறார்களே! அதற்கு உடனே ஏற்பாடு செய்து அந்தத் தடையை நீதிமன்றத்தின் மூலம் நீக்கிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று சொன்னார்.

அப்பொழுது சகோதரர் நெடுமாறன் அவர்களுடைய நிலையும், சுப. வீரபாண்டியன் அவர்களுடைய நிலையும் என்ன?

பொம்மலாட்ட சைகைதான்!

எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேச மாட்டார்கள். பொம்மலாட்ட சைகைமூலம் காட்டிவிட்டு, நீதி-மன்றத் தடை இருக்கிறது. எங்களால் பேச முடியாது என்று உட்கார்ந்து விடுவார்கள். இதுதானே ஜெயலலிதா செய்தது. அந்த வாய்ப்பூட்டை அகற்றியதற்காகத்தான் சுப.வீ. அவர்கள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வைகோவுக்கு ஜெ. கொடுத்த 13 மாத சிறை

வைகோ அவர்கள் 13 மாதம் இந்த அம்மையாரால் சிறையில் இருந்ததை மறந்துவிட்டாரா? நாடாளுமன்றத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீதிபதியிடம் வைகோ அவர்கள் அனுமதி பெற்றது தெரிந்தவுடன் இரவில் தலைமை நீதிபதியிடம் இந்த அம்மையார் ஆட்சியில் உத்தரவு பெற்று இவரை ஒரு நாள் டில்லி செல்ல அனுமதிக்காதவர்தானே இந்த அம்மையார்.

பார்வதி அம்மையாருக்கு வேண்டுகோள்

பார்வதி அம்மையாருக்கு தமிழர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தமிழகத்தில் சிகிச்சை பெற தமிழக முதல்வருக்குக் கடிதம் எழு-துங்கள். இதுதான் அரசியல் ரீதியான அலுவலக முறை.

ஏற்கெனவே கலைஞர் அவர்களும், சட்டமன்றத்-தில் சிகிச்சை பெற மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

டி.ஆர். பாலு கேட்டாரே!

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலே டி.ஆர். பாலு அவர்களை கேள்வி கேட்க வைத்தார் கலைஞர். தமிழக அரசுக்குத் தெரியாமல் எப்படி மத்திய அரசு பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது என்று கேள்வி கேட்க வைத்திருக்-கின்றார்.

எனவே, பார்வதி அம்மையாரை தமிழகத்தில் சிகிச்சை பெற வைத்து, அவரைக் காப்பாற்ற-வேண்டியது நம்முடைய கடமையாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் இதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்வார்.

சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கின்றார். முதல் கட்டமாக இதை சட்டப்படி நாம் செய்தாக-வேண்டும்.

பலத்த கரவொலி எழுப்பி ஆதரியுங்கள்!

எனவே, இங்குக் கூடியிருக்கின்ற அனைத்துக் கட்சித் தோழர்களும் பலத்த கரவொலி எழுப்பி இதை ஆதரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்-கின்றேன்.

_ இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தி.க பொறுப்பிலேயே பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்கட்டும் -தொல்.திருமாவளவன்


ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை_பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.-திருமாவளவன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழர் தலைவர் விடுத்த முதல் அறிக்கை

மேதகு பிரபாகரனின் தாயார் அன்னை பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதை முதலில் நம்முடைய தமிழர் தலைவர்தான். கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய-வர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வன்மை-யாகக் கண்டிக்கின்றோம்.

இந்திய தூதரகம் எப்படி அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு ஏன் அவரை கருப்புப் பட்டியலில் வைத்துத் திருப்பி அனுப்புவானேன்.

கையறு நிலை

நள்ளிரவு 12 மணிக்கு எனக்கு தொலைபேசி வந்தது. கையறு நிலையிலே இருந்தோம். வன்னிபெரும்பகுதியிலே ஈழத்தமிழர்கள் குடியேற்ற வாய்ப்பில்லாமல் முற்றாக இராணுவப் பிடியில் இருக்கிறது. அவர்கள் எங்கு செல்வது என்று அறியாமல் திகைக்கிறார்கள்.

படகில் தப்பிச்சென்ற ஈழத்தமிழர்களை மலேசிய அரசு சிறைப் பிடித்து அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க இருந்த நிலை. எனக்குத் தொடர்ந்து தொலைபேசிகள். அண்ணா, எங்களைக் காப்-பாற்றுங்கள் இல்லையேல் தீயிட்டு மடிவோம் என்று கதறுகிறார்கள்.

கலைஞரும்-தமிழர் தலைவரும்

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் நம்முடைய தமிழக முதல்வர் கலைஞரும், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும்தான். 2003ஆம் ஆண்டு warning Circular யார்? ஜெய-லலிதா அவர்கள்தானே. பி.ஜே.பி. அரசுக்கு அனுப்பியவரும் இந்த அம்மையார்தானே.

பார்வதி அம்மையார் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை எப்படியாவது கலைஞர் அரசு மீது பழி சுமத்தலாம் என்று பார்த்தார்கள். வைகோவும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்று வந்திருப்பவர் இன்னார் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்திய காரணத்தால்-தான் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்டார். பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி கிடைப்பது அவர்களுக்கு முக்கியமல்ல. எப்படியாவது கலைஞர் அரசை சாடுவதுதான் முக்கியம். தி.க.வே பொறுப்பேற்கட்டும்!

பார்வதி அம்மையாரை திரும்ப சென்னைக்கு அழைத்து வந்து திராவிடர் கழகத்தின் பாதுகாப்பிலேயே வைத்து அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள். நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு சிகிச்சை தரவில்லை என்றால் தமிழ் சமூகம் நம்மை மன்னிக்காது.

நெடுமாறனும், வைகோவும் பார்வதி அம்மையார் விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் இவ்வாறு பேசினார் தொல்.திருமாவளவன்.

ஜெயலலிதாவைக் கண்டித்து வைகோ, நெடுமாறன் அறிக்கை விட்டார்களா? -சுப.வீரபாண்டியன்


ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அடுத்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மறுபடியும் நாம் இங்கே ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கூடவில்லை. ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைஎப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

பிரபாகரன் அவர்களின் தாயார் மருத்துவ உதவி பெற சென்னை வந்தபொழுது மீண்டும் மலேசியா-விற்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது உலக மக்கள் அத்தனை பேரும் வேதனை அடைந்த செய்தியாகும்.

இணையதள சதி...!

ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய அவலத்தை, பின்னடைவை ஏற்படுத்த இந்த இனத்திற்கு எதிரானவர்கள் அல்லது அரசியல் ரீதியாகவே சில செய்திகளை இணையதளத்தின் மூலம் இன்றைக்குப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

பார்வதி அம்மையார் வந்த செய்தி தோழர் தியாகு மூலம் நள்ளிரவு ஒரு மணிக்கு, அதுவும் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்ட பிறகுதான் தகவலே தெரிந்தது. முதல்வர் அவர்களுக்கும் இந்த செய்தி தெரியாது. இரவு ஒன்பதே முக்கால் மணிக்கு பார்வதி அம்மையார் வந்திருக்கிறார். இரவு பத்தே முக்கால் மணிக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அய்யா நெடுமாறன் அவர்களுக்கும், வைகோ அவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கிறது. கலைஞருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி இப்படி நடந்தால் எப்படியாவது போயஸ் தோட்டத்து அம்மையாரை ஆட்சியில் உட்கார வைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். மண் குதிரையை நம்பி அவர்கள் இருவரும் ஆற்றில் இறங்கி நிற்கிறார்கள்.

நானும் சரி, திராவிடர் கழகமும் சரி, விடுதலை சிறுத்தைகளும் சரி என்றைக்கும் கலைஞர் அரசுக்கு ஆதரவானவர்கள்தான். கலைஞரை விட்டு விட்டு வேறு யாரை ஆதரிப்பது?

நமது தமிழக முதல்வர் கலைஞர் மூலமாக எப்படியாவது பார்வதி அம்மா அவர்களை திரும்ப சென்னைக்கு அழைத்து வந்து நாம் சிகிச்சை கொடுத்தாக வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையாரைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினாரே. இதைப் பற்றி வைகோ அவர்களும், அய்யா நெடுமாறன் அவர்களும் ஒரு வார்த்தை சொன்னதுண்டா? ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விட்டதுண்டா?

போயஸ் தோட்டத்துப் பாவிகள்

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் போயஸ் தோட்டத்துப் பாவிகள்தான். அங்கே போய் இவர்கள் இருவரும் உண்ணா விரதம் இருக்க வேண்டியதுதானே.

ஜெயலலிதாவை ஆதரிக்க உங்களை விட துரோகிகள் வேறு யார் இருக்க முடியும்? தமிழ் ஈழத்தைப் பற்றி இதே பெரியார் திடலில்தான் இந்த மண்ணில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உணர்வைப் பெற்றோம். இன்றைக்கும் மாறவில்லை. புலி வேடம் போட்டு ஆடுகிறான்

புலியை விட புலி வேடம் போட்டு ஆடுகிறவர்களால்தான் ஆபத்து. புலி நெருப்பைக் கண்டால் ஓடிவிடும். புலிவேடம் போடுகிறவன் நெருப்பைக் கண்டால் ஓடமாட்டான். எனவே உங்கள் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது.

தமிழ் ஈழமக்கள் கலைஞரைத்தான் நம்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, April 27, 2010

கடைசி மூச்சு வரையில் பேசிக் கொண்டே இருப்பேன் - சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர்


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (25.04.2010)நடந்த மோதல் சம்பவம் குறித்து, சட்டசபையில் இருந்த கட்சிகள், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அவர்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் கலைஞர் பேசியதாவது:

அம்பேத்கருடைய சிலையை உயர்நீதிமன்ற வளாகத்திலே வைப்பதில் இந்த அரசோ அல்லது நானோ, யாராவது குறுக்கீடு செய்து, அந்த சிலையை அங்கு வைக்கக்கூடாது என்று அடம் பிடித்து இருந்-தாலோ அல்லது தடுத்து இருந்தாலோ, கறுப்புக்-கொடி காட்ட உணர்ச்சி உள்ளவர்கள் கூடினால், அது முறையானதும், நியாயமானதாகக் கூட இருக்கும்.

1972_76ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு கலைக்-கல்லூரிக்-கும், அதன் பிறகு தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்-கும் அம்பேத்கர் பெயரை வைத்தவன் என்ற முறையில், சட்டக்கல்லூரிக்கு பிறகு சட்டப்பல்-கலைக்கழகமே இங்கே உருவாக்க வேண்டும் என்று ஒரு முயற்சி எடுத்தபோது, அதற்கான இடவசதி இல்லாமல் இருந்தது.

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கிரீன்-வேஸ் சாலையில் முதலமைச்சர் என்ற முறையில் நான் வசிப்பதற்காக வீடு ஒன்றை, ஒரு பெரிய மாளிகையை ஏற்பாடு செய்திருந்தார். நாளைக்கு அங்கே குடிபோக வேண்டுமென்று நாள் குறித்-திருந்தார். அதை பார்வையிட என்னை அழைக்க வந்தபோது, நான் சொன்னேன், சட்டப்-பல்-கலைக்கழகம் அம்பேத்கர் பெயரில் உருவாக இடம் இல்லை என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிரீன்வேஸ் சாலையிலே உள்ள அந்த வீட்டை, அந்த பல்கலைக்-கழகத்தின் அலுவலகமாக ஆக்குங்கள் என்று சொன்னேன்.

அதன்பின்னர், மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதாக மராட்டிய சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்து பல ஆண்டுகளாகின்றன. ஆனால் தீர்மானம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்ற செய்தியை ஒரு பத்திரிகையிலே மூலையிலே வந்ததை படித்துவிட்டு, அப்படியா என்று மிகுந்த வருத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள தி.மு.க. கிளைகள் சார்பில் கிளைச்-செயலா-ளர்கள் லட்சக்கணக்கில், மராட்டிய மண்டலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்பதற்காக தந்திகள் கொடுக்க சொல்லி, அங்கிருந்த கவர்னர் அலெக்-சாண்டர் என்னோடு தொடர்பு கொண்டு, இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் தந்திக்கு பதிலாக இங்கே சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளித்து, அங்கே அம்பேத்கர் பல்கலைக்கழகம் உருவானது.

இவைகளுக்கு காரணமாக இருந்தது கருணாநிதி என்பது தவறு என்று என் மீது குற்றம்சாட்டி, ஆகவே உயர்நீதிமன்றத்திற்ககுள்ளே இவனை நுழைய விடக்கூடாது, அனுமதியோம் என்று சொல்லி இருந்தால் அது நியாயம். இதற்கெல்லாம் காரணமாக இருந்தது தவறு என்று என் மீது குற்றம்சாட்டி சில பேர் கறுப்புக்கொடியோடு வந்தார்கள் என்று சொல்ல மாட்டேன்.

வந்த பிறகு சட்டப்பையிலே இருந்த கறுப்புக்-கொடியை எடுத்து வீசினார்கள் என்றால், இங்கே இந்த சட்டமன்றத்திலே அதைப்பற்றிய பிரச்சினை வந்த பிறகு அது நாட்டிற்கே தெரிகிறது. யாருக்கும் அதுவரையில் தெரியவில்லை. அங்கே அந்த பந்தலில் கூடியிருந்த கூட்டம் ஆயிரம் பேர் இருக்கலாம். அந்த ஆயிரம் பேருக்கிடையே நான்கு, அய்ந்து பேர் இருந்து, வழக்கறிஞர்கள் சங்கமோ, அல்லது பால் கனகராஜ் போன்ற நண்பர்களுடைய தலைமையிலே உள்ள அங்கீகாரம் பெற்ற சங்கங்களோ, யாரும் ஈடுபடாத நிலையில், ஒரு சில கட்சிகளின் பெயர்களை சொல்லிக்கொண்டு, எந்தக்கட்சியின் பெயரை சொன்னால் பயப்படுவார்கள் என்று அந்த கட்சி-களின் பெயர்களை சொல்லிக்கொண்டு, அம்பேத்கர் பெயரையே அங்கே வீணாக களங்கப்-படுத்தி, இந்த கொடியை நாங்கள் பிடிக்கிறோம் என்று சொல்லி, அதனால் விளைவிக்கப்பட்ட கலகத்தை நான் ஏற்றுக்-கொள்ளவும் இல்லை, வரவேற்கவும் இல்லை. மற்ற உறுப்பினர்களைப்போல் அவர்களுடைய கவலையில் நானும் பங்கேற்கிறேன்.

அந்த கலவரத்தில் பத்திரிகையாளர்கள், செய்தி-யாளர்கள், செய்தி நிறுவனங்களின் கருவிகள் தாக்கப்-பட்டன என்ற செய்திக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பேன் என்ற உறுதியையும் அளிக்-கிறேன்.

ஆனால் ஏன், எதற்காக திடீரென்று அங்கே கறுப்புக்-கொடி? கறுப்புக்கொடிக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல தி.மு.க. ஏனென்றால் அது நடத்தாத கறுப்புக்-கொடி இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் இல்லை. அவ்வளவு கறுப்புக்கொடி இயக்கங்களை நாங்கள் நடத்தி இருக்கிறோம். ஜவஹர்லால் நேருவுக்கே கறுப்புக்கொடி காட்டி இருக்கிறோம்.

என்னுடைய தலைமையில் தஞ்சாவூரில் கறுப்புக்-கொடி காட்டப்பட்டது. ஆனால் எப்படி? அதற்கு ஒருமுறை கிடையாதா? முன்கூட்டியே போலீசாரிடத்-திலேயே அனுமதி கேட்டு, அவர்கள் எந்த இடத்திலேயிருந்து கறுப்புக்கொடி காட்டலாம் என்று வரையறுத்து சொல்கிறார்களோ, அந்த இடத்திலே-யிருந்து தான் தி.மு.க. சார்பாக எந்தத் தலைவர்-களுக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டிருக்கிறது.

இது நம்முடைய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் அவரும் எங்களோடு இருந்தவர்தானே? இங்கிருந்து போனவர்களுக்கெல்லாம் தெரியும். ஜனநாயக ரீதியிலேதான் கறுப்புக்கொடி இயக்கத்தை தி.மு.க., திராவிட இயக்கம் காட்டியிருக்கின்றது. ஆனால் திடீரென்று ஒரு தாக்குதல், ஒரு எதிர்ப்பு அதற்கு நாங்கள் பயப்பட வேண்டுமென்றால் அது இயலாது.

அன்று பெரியார்மீது செருப்பு வீச்சு

கடலூரில் ஒரு பாலம் உள்ளது. அதோடு கூடிய ஒரு சாலை இருக்கிறது. அந்த பாலத்தின் மூலையில் பெரியார் சிலை நான்தான் திறந்து வைத்தேன். பெரி-யா-ரின் தலைமையில் அதனை நான் திறந்து வைத்-தேன். அந்த சிலைக்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை அந்த இடத்திலே பெரியார் பேசும்போது அவர் மீது செருப்பு வீசினார்கள். அந்த செருப்பை பத்திரப்படுத்தி, அப்படி செருப்பு வீசியவனை கூப்பிட்டு, அவனுக்கு பரிசளித்தார் என்றெல்லாம் வரலாறு உண்டு.

அந்த செருப்பை எந்த இடத்தில் வீசினார்களோ, அந்த இடத்திலே தான் பெரியாருக்கு சிலை வைக்க வேண்டுமென்று பெரியாருக்கு செருப்பு வீசிய இடத்திலே தான் இன்றைக்கு அங்கே அவருடைய சிலையை வைத்திருக்கிறோம். அதையெல்லாம் என்னுடைய 72 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் நினைத்துப்பார்க்க மாட்டேனா? அவர்கள் எல்லாம் பட்டபாடு, அவர்கள் எல்லாம் சந்தித்த அந்த சோதனைகள் இந்த வன்முறைகள் இவைகள் எல்லாம் எனக்கு ஞாபகத்திற்கு வராதா? அப்படி வந்த காரணத்தால்தான் நீதிமன்றத்திலே, உச்ச திமன்ற தலைமை நீதிபதிக்கு முன்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பாக, எனக்கெதிரில் நான்கைந்து பேர் நான் பேச எழுந்ததும், கறுப்பு துணியைக்காட்டி அனுமதியோம், அனுமதியோம் என்று சொன்னார்கள்.

அதிலே வேடிக்கை என்னவென்றால், நான் உள்ளே போய் அமர்ந்து, பலரும் பேசி, நான் பேச ஆரம்பிக்கும் வரையில் நீதிமன்றத்திற்குள் அனுமதி-யோம் என்று அவர்கள் சொல்லவில்லை. நீதிமன்-றத்திற்குள் அனுமதிக்கப்பட்டுத்தான் உள்ளே போயிருக்கிறேன். மேடை வரை அனுமதிக்கப்-பட்டுத்-தானே உள்ளே போயிருக்கிறேன். இவ்வளவிற்கு பிறகும் அனுமதியோம், அனுமதியோம் என்றால் என்ன அர்த்தம் என்றே எனக்கு புரியவில்லை. ஆக எங்கிருந்தோ பின்னால் தூண்டப்பட்டு அனுப்பப்-பட்ட ஒரு கூட்டம் அது. அந்தக்கூட்டம் அய்ந்தாறு பேர் பஞ்ச பாண்டவர்களை போல அவர்கள் அங்கே வந்து இந்த கலாட்டாவை செய்தார்கள்.

நான் மிகுந்த அடக்கத்தோடு அப்படியொரு நிகழ்ச்சி நடைபெற்ற போது என்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அது என்ன என்று கூட பார்க்காமல் அதுபற்றியே கவலைப்படவில்லை. எல்லா பத்திரிகைகளிலும் அதை எழுதியிருக்கிறார்கள். சம்பவத்தை பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தார் என்று தொலைக்காட்சிகளிலே கூட சொன்னார்கள். ஜெயா தொலைக்காட்சியிலே கூட சொன்னார்களாம், கருணாநிதி அதைப்பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தார் என்று. அதுதான் கருணாநிதி.

இந்திராகாந்தியும், நானும் வ.உ.சி. சிலை திறப்பு விழா என்பதற்காக தூத்துக்குடிக்கு சென்றிருந்தோம். கோசல்ராம் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள். கல்வியாளர் ஏ.பி.சி. வீரபாகு என்பக்கத்தில் அமர்ந்திருந்தார். பெரிய கூட்டம். பத்தாயிரம் பேர் இருக்கும். அந்த கூட்டத்தில் இடையிடையே சில கூச்சல். இப்படித்தான் ஆனால் கூட்டம் நடந்து கொண்டே இருந்தது. திடீரென்று அந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் சொல்வார்கள்_சொட்டை விழுந்துப்-போன கூட்டம் என்று என் தலை மாதிரி, அந்த பெரிய கூட்டத்தில் வழுக்கை விழுந்து போச்சாம்.

தட் இஸ் கருணாநிதி

வழுக்கை இருந்தால் அந்த கூட்டத்தில் அடர்த்தி இருக்காது அல்லவா? அதை சொட்டை விழுந்து போச்சுன்னு சொல்வார்கள். இந்திராகாந்திக்கு பக்கத்திலே இருந்த கோசல்ராமிடம் இந்திராகாந்தி, தட் இஸ் கருணாநிதி, அதாவது, அதுதான் கருணாநிதி என்று சொன்னார். அந்த கூட்டம் கலைந்து போன பிறகு அடங்கிய பிறகு அமைதியான பிறகு இந்த வார்த்தைகளை இந்திராகாந்தி, கோசல்ராமிடம் சொன்னார். அந்த வீரவாக்கியத்தை அந்த பாராட்டை நான் இழந்து விட முடியுமா? அதனால்தான் உயர்நீதி-மன்றத்திலே நடைபெற்ற அந்த சம்பவத்திலும் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே-யிருந்தேன்.

நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேசு-கின்ற இடத்திலே பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும், கல் எறியப்பட்டாலும் பேசிக்-கொண்டு தான் இருக்கிறேன். பேசிக்கொண்டே இருப்-பேன். என்னுடைய கடைசி மூச்சு அடங்குகின்ற வரையிலே _ இதயத்திலே கடைசித்துடிப்பு இருக்கின்ற வரையிலே பேசிக்கொண்டே இருப்பேன். அந்த சம்பவம் நடைபெற்ற போதும் நான் பேசிக்-கொண்டுதான் இருந்தேன். நடைபெறுவதை நான் கவனிக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னை பாராட்டி விட்டுச்சென்றார்கள். நன்றாக சமாளித்தீர்கள் என்று சொல்லி விட்டு சென்றார்கள்.

நேற்று மாலை பத்திரிகைகளில் இதைப்பற்றிய செய்திகளையே போடவில்லை. இன்று காலை பத்திரிகைகளிலே அந்த செய்தி வெளிவந்திருக்கின்றது. எனக்கு இதிலே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த செய்தி வராமல் போய் விடுமோ என்பதற்கு பதிலாக, இந்த செய்தியை வெளியிட்டு விளம்பரம் கொடுத்த பத்திரிகைகளுக்கும் வானொலி, தொலைக்காட்சி போன்ற நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் தொலைக்காட்சி பெட்டிகள் சில நொறுக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் தாக்கப்-பட்டார்கள் என்ற சம்பவங்கள் எல்லாம் என் கவனத்-திற்கு நீங்கள் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்து உரிய நடவடிக்கைகள் அதற்காக எடுக்கப்படும் என்பதையும் எதிர்காலத்திலே அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்திரிகையாளர்களை பொறுத்தவரையில் அவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியைப்பற்றி என் மீது குற்றம் கூற முடியாது. நான் தவறாக பேசினேன், அதனால் கறுப்புக்கொடி காட்டினார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. செய்தி நிறுவனங்களும் சொல்ல முடியாது. நான் அம்பேத்காருக்காக பட்ட பாடுகளை நான் செய்த சிறப்புகளை உலகம் அறியும். என் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்கள் அறிவார்கள். இங்கே இருக்கின்றவர்கள் யாரும் என் கட்சியிலே உள்ளவர்கள் உட்பட யாரும் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. சாதியை ஒழிப்பதற்காக ஆதிதிராவிட குலத்துப்பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தவன் நான். ஒரு வேளை அதற்காக கறுப்பு கொடி பிடித்தார்களோ என்னவோ தெரியாது.

கறுப்புக்கொடி பிடித்துக்கொண்டே இருக்கட்டும். ஆனால் ஒரு காலத்தில் ஆயிரம் பேர், அய்நூறு பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அது மாறி இப்போது சுருங்கி அய்ந்து பேர், ஆறு பேர் என்ற அளவிற்கு வந்து விட்டது. அந்த நிகழ்ச்சியும் கூட என்னுடைய அருமை நண்பர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் அவர்களால் ஏற்றுக்-கொள்ளப்படவில்லை என்பதையும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதையும் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள்.

வேல்முருகன் போன்றவர்கள் அவர்களிடம் பேசி பார்த்திருக்கலாம் என்றார்கள். எல்லோரிடமும் பேசியிருக்கிறார்கள். அங்கேயுள்ள வழக்கறிஞர் சங்க தலைவர்கள் மாத்திரமல்ல, இன்னும் சொல்லப்-போனால், உயர்நீதிமன்ற நீதிபதியே அவர்களை-யெல்லாம் அழைத்து பேசியிருக்கிறார். எந்த தகராறும் வேண்டாம் என்று பேசி அதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டுதான் போயிருக்கிறார்கள். எந்த தகராறும் செய்ய மாட்டோம் என்று சொல்லி-யிருக்-கிறார்கள்.

என்ன காரணம் சொல்கிறார்கள்?-காவல்-துறை-யினர் மேல் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கூட, என்று சொல்-கிறார்களாம். நடவடிக்கை எடுத்தால், அவர்கள் சட்ட ரீதியாக அதனை அணுகும்போது எப்படி நட-வடிக்கை எடுக்க முடியும்? நடவடிக்கை எடுக்கப்-போகிறோம் என்பதற்காக அவர் கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி விடுவார்கள்.

இந்த நிலைமையிலே என்ன நடவடிக்கை எடுப்பது? இதையும் நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஆகவே உயர்நீதிமன்றத்தை இது போன்ற அமளி களமாக, கலவர பூமியாக ஆக்குகின்ற யாராக இருந்தாலும் பொதுமக்களால் அவர்கள் மன்னிக்-கப்பட மாட்டார்கள் என்பதையும், நேற்று நடந்த அந்த செய்தியை, நிகழ்ச்சியை நானும் மறந்து விடுகிறேன், நீங்களும் மறந்து விடுங்கள். வழக்-கறிஞர்களும் மறந்து விட்டு நல்ல வழியை மக்களுக்கு காட்டுங்கள் என்று தெரிவித்து அமைகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Monday, April 26, 2010

நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்:கலைஞர் உருக்கமான பேச்சு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சட்டமேதை அம்பேத்காரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடந்தது.

பிரமாண்டமான அம்பேத்கார் சிலையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.


’’தி.மு.க. அரசை பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கார் புகழை பாடுவதிலும் அவரது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக மக்கள் மத்தியில் பதிய வைத்து நிறைவேற்றுவதிலும் எந்த மாநில அரசுக்கும் தமிழ்நாடு பின் தங்கியதில்லை.

முன்னேறி வருகிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மேலும் முன்னேற்ற பாடுபடும் அரசுதான் தமிழக அரசு என்பதை இங்கு சுட்டிக்காட்டிட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்காரின் சிலை வடிவத்தை பார்க்கிறேன். ஒரே ஒரு கை விரலை உயர்த்திக் காட்டுவதை பார்க்கும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னதுதான் எனது நினைவுக்கு வருகிறது.

இங்கு இந்த சிலை திறக்கும்போது நான் அண்ணாவுக்கு பாடிய இரங்கல் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. இங்கு வக்கீல்கள் நிரம்ப குழுமி உள்ளீர்கள். அவர்களுக்கு வழி காட்டக்கூடிய நீதியரசர்களும் தலைமை நீதிபதியும் அமர்ந்திருக்கிறீர்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவமும், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் எடுத்துக்காட்டிய பல்வேறு கருத்துக்கள், உயர்ந்த வாசகங்கள், அனைத்தும் இந்த நாட்டில் அமைதியை, அன்பை காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.

ஜனநாயகத்தை யாரும் எத்தகைய வழியிலும் வீழ்த்த நினைப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வேன் ஜனநாயகத்தில் அநாகரீகத்தை புகுத்த நினைத்தால் எந்த காலத்திலும் அதற்கு தலைவணங்க முடியாது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இங்கு நீதியரசர்கள் இருக்கும் நிலையில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

எனக்கு 87 வயது நிறைவடைகிறது. 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வாழ்க்கையில் எதிர்ப்புகள், ஏளனங்கள், ஏச்சு-பேச்சு, கல்வீச்சு கண்டனங்கள் இவைகளையெல்லாம் கண்டிருக்கிறேன்.


நான் பெரியாரின் மாணவனாகவும், அண்ணாவின் தம்பியாகவும், அம்பேத்காரின் கொள்கைகளை நெஞ்சில் பதிய வைத்தும் நடந்து வருகிறேன். எனது 15-வது வயதிலேயே நான் தொடங்கிய பொது வாழ்க்கை ஆதி திராவிடர் காலனியில்தான் ஆரம்பமாகியது.

முதன் முதலாக நான் கொடி ஏற்றியதும் ஆதிதிராவிடர் காலனியில்தான். ஆதி திராவிடர்களுக்கு பாடுபட்டவன் என்ற முறையில் இன்றும் அந்த சமுதாய முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன். நான் இப்படி பேசுவதால் இங்கு அரசியல் பேசுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருதக்கூடாது. சமுதாய கருத்துதான். 1973- 1976-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சி நண்பர் சட்டசபையில் என்னை பார்த்து 3-ம் தர சர்க்கார் என்றார்.


இதை கேட்டு என் பின்னால் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு சொல்ல நான் அவர்களை கையை காட்டி அமைதியாக உட்கார வைத்துவிட்டு பேசினேன். அவர் சொல்வதில், தப்பில்லை. 3-ம் தர சர்க்கார் என்பது தவறு. 4-ம் தர சர்க்கார் என்று கூறி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த வரிசையில் இது 4-ம் தர மக்களுக்காக பாடுபடும் அரசு என்றேன்.

இதை கேள்விப்பட்டு அப்போது திருச்சியில் இருந்த பெரியார் தந்தி கொடுத்து பாராட்டினார். எனவே எவ்வளவு எதிர்ப்பு, ஏச்சு இருந்தாலும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன கொள்கையை நான் கடைபிடித்து வருகிறேன்.

நான் இங்கே வந்ததும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் ஒரு கோரிக்கை மனுவை தந்தார். எனக்கு எதிரான வாசகங்களை அதில் தந்திருப்பாரோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அவர் நாகரீகமான மனிதர். வக்கீல்களுக்காக சில கோரிக்கைகளைத்தான் அவர் வைத்துள்ளார். எல்லா வக்கீல்களும் சுகபோகத்தில் இல்லை. தற்போது வக்கீல்களுக்கு வழங்கப்படும் சேம நல நிதி இழப்பீட்டு தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.


ரூ.5 லட்சம் என்ன? அதற்கும் அதிகமாக தர தயாராக இருக்கிறேன். ஆனால் தற்போது சட்டமன்றம் நடக்கிறது. இந்த நேரத்தில் ஏதாவது நான் கோரிக்கையை நிறைவேற்றப் போகிறேன் என்று சொன்னால் சட்டமன்றம் நடக்கும்போது இதை எப்படி வெளியே அறிவிக்கலாம் என்று கேட்பார்கள். எனவே நீதிக்கு பயந்து அல்ல. சட்டத்துக்கு பயந்து சொல்கிறேன். வெளியிட வேண்டிய நேரத்தில் இதை அரசு சார்பில் வெளியிடுவேன்.

இன்னொரு கோரிக்கையையும் வைத்திருந்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்த நீங்கள் வக்கீல்களின் மருத்துவ அறக்கட்டளைக்கு 10 கிரவுண்டு இடம் ஒதுக்கி தந்தால் மருத்துவ சிகிச்சைகளை மேலும் பெற முடியும் என்று கூறி இருந்தார். இதுவும் செய்ய முடியாத கோரிக்கை அல்ல.


அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும். சட்டமன்ற நிகழ்ச்சி முடிந்து இவைகளை கொண்டு வர பாடுபடுவேன். வக்கீல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

பொது வாழ்க்கையில் யாரோடு தொடர்பு அதிகம் என்றால் போலீசாரோடு, வக்கீலோடுதான் அதிக தொடர்பு. ஏனென்றால் என்னை போலீசார் கைது செய்யும் போதெல்லாம் என்னை காப்பாற்றும் வேலையில் ஈடுபடுவது வக்கீல்கள்தான். எனக்காக வாதாடுவதும் வக்கீல்கள்தான். ஆனாலும் நான் இவர்கள் மீது என்றைக்கும் ஆத்திரப்படவில்லை.

போலீசார், போலீசாரின் குடும்பத்தினர் படும் துயரங்களை நாடகமாக போட்டு நடித்த காலத்தில் அந்த நாடகத்தையே தடை செய்தார்கள். ஆனால் சட்டசபையிலேயே அந்த நாடக பாட்டை பாடி அதை கேட்க செய்தேன். எப்போதும் என் மீது விழும் அம்புகளை மலர் கணைகளாகத்தான் எடுத்துக் கொள்வேன். என் மீது வீசும் மாலை, கணைகளை என்றைக்கும் தாங்கித்தான் பழக்கப்பட்டவன். என் இதயத்தை திறந்து பார்த்தால் காயங்கள் இருக்கும்.

நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான். உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது போல் சகாயத்தை விரும்புகிற காரணத்தால் தனிப்பட்ட ஒருவனுக்காக அல்ல சமூக நீதிக்காக போராடும் மக்களுக்காக நீங்கள் எல்லோரும் எதிர்காலத்தை வழிகாட்ட வேண்டும். இங்கு நீதிபதிகள் தமிழில் பேசியதற்காக கரவொலி எழுப்பினார்கள்.


அந்த தமிழ் உச்சநீதி மன்றத்திலும் ஒலிக்க வேண்டும். முதலில் உயர்நீதிமன்றத்திலாவது ஒலிக்க வழிகாட்ட வேண்டும். வீரப்ப மொய்லி என்னைப்பற்றி இங்கு பேசும்போது, நானும் அவரும் ஒரே ஜாதி என்று குரல் பட பேசினார். பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒன்று சேர்ந்து பாடுபடுகிறோம் என்று அர்த்தமாகும். அவரது பேச்சில் வேகம் இருந்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் இதயதாபமாகும்.

அம்பேத்காருக்கு பெருமை சேர்க்க இங்கு அவரது சிலையை திறந்து வைத்ததற்காக உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று பேசினார்.


Friday, April 23, 2010

ஜெயலலிதா கடிதம் குறித்து வைகோ - நெடுமாறன் மௌனம் காப்பது ஏன்? சுப.வீரபாண்டியன் கேள்வி


பிரபாகரன் தாயார் திருமதி பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்த ஜெயலலிதா கடிதம் குறித்து வைகோ - நெடுமாறன் ஆகியோர் மௌனம் காப்பது ஏன் என்று சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முரசொலி பத்திரிகையில் அவர் கூறியுள்ளதாவது,

கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப் பட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம். மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்துக் கலைஞரின் மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகின்றது.

விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் (அதிகாலை 1 மணி), தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்குச் செய்தி கிடைத்ததாக் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.

இந்த நேரத்தில் ஐயாவை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்? என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர். இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட இயலுமா? என்று கேட்டார்.


அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், கலைஞரையும், அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக்கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன். இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை என்று அவர் கூறினார். அப்படியானால், வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.


வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.


விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் கலைஞரைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


கருணாநிதியைத் தமிழ்ச் சமூலகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.


எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ஆம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.


பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் கலைஞரைத் தமிழ்ச் சமூகம் போற்றும்.


வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.


அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய பாவிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.


நீங்கள் தேடும் அந்தப் பாவி போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என்று சுப. வீரபாண்டியன் முரசொலி பத்திரிகையில் கூறியுள்ளார்.


Monday, April 19, 2010

பிரபாகரன் தாயார் விவகாரம்: கலைஞரின் முழுமையான சட்டமன்ற பேச்சு


பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதமே காரணம் என்றும் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, கடந்த கால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு முதலில் திருமதி பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளே நுழைந்து “தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று கூறி எங்கே மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள்.

இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 23 8 1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக “டெசோ'' அமைப்பின் சார்பாக அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது. நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23 ஆம் தேதி முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது. அந்த "டெசோ" அமைப்பின் சார்பாக 25 8 1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம். தொடர்ந்து 30 8 1985 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி 5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 7 10 1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், “டெசோ'' அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும் தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் “அந்தோ தமிழர்களே!'' என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிட மிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. மறுநாள் காலையிலே வந்த “இந்து'' பத்திரிகையிலே கூட “ஞயசஎயவாண், அடிவாநச டிக வாந ளடயண்ய் டுகூகூநு டநயனநச ஞசயயெமயசயய், டயனேநன யவ வாந ஊட்நய்யேண் ஹசையீடிசவ லெ ய ஆயடயலளயைய் ஹசைடண்நேள கடண்பாவ. ழடிறநஎநச, ஐஅஅபைசயவண்டிய் டீககண்உயைடள கடிடடடிறண்பே ண்ளேவசரஉவண்டிளே கசடிஅ வாந ஊநவேசந, னநயீடிசவநன ட்நச வடி ஆயடயலளயை லெ வாந ளயஅந கடண்பாவ, ண்அஅபைசயவண்டிய் ளடிரசஉநள ளயனை.”

என்று தான் தெளிவாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5 5 2003 அன்று தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு :

“Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means.”

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சினையில் அவர்கள் மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள் – அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சினையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சினை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது.

ஆனால் இந்தச் செய்தியை முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவிற்கே, அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் இல்லை, நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால் நம்முடைய அருமை நண்பர் சுதர்சனம், கோ.க. மணி அவர்கள் சிவபுண்ணியம் ரவிக்குமார் மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

மத்திய அரசின் பதிலைப் பற்றி அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் – அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்சினையை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Friday, April 16, 2010

திமுகவின் ஒற்றுமைக்கு உலை வைக்க காத்திருப்போரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கலைஞர் அறிவுரை


திமுகவின் ஒற்றுமைக்கும் புகழுக்கும் உலை வைக்க காத்திருப்போரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் சம்மந்தமான அல்லது அவரவர் சொந்தக்கருத்துகள் பற்றி சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளில் சொன்னவை, சொல்லதவை என்று தங்கள், தங்களது எண்ணங்களுக்கேற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டி விடப்படுவதும் - கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தங்கள் ஏடுகளுக்கு ஏதாவது செய்திகள் வேண்டும் என்றபதற்காக விளைந்துள்ள செய்திகளை அறுவடை செய்வதும் உண்டு. செய்திகள் விளையாத பகுதிகளில் வேண்டுமென்றே செய்திகள் விதைத்து, அதை விளைவிக்க முனைவோரும் உண்டு.

இந்தச் சூழலில் மீடியா எனப்படும் செய்தி வழங்கும் கழனிகளில் நல் விளைச்சல் எது - நச்சு விளைச்சல் எது எனப் பகுத்தறிய இயலாதபடி பலவற்றை - அரசியல் கட்சிகளும் - அந்தக் கட்சிகளின் தலைவர்களும் காணவும், சந்திக்கவும் நேரிடுகிறது. அதுவும் இன்னும் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு இடையே ஓராண்டு காலம்தான் இருக்கின்ற நிலையில் பத்திரிகைகளில் பலமான புயல் சின்னங்கள், எச்சரிக்கை அறிவிப்புகள் எனும் விதத்தில் பல கட்சிகளுக்கு மிடையே அய்யப்பாடுகள் - அச்சுறுத்தல்கள் ஆகியவை நாள் தோறும், நாழிகை தோறும் தோன்றுவதற்கான தொடக்கங்கள் - செய்தியாளர்களின் சிந்தனைக் கூடங்களில் பலமான அடித் தளங்களோடு உருவாகும் நிலையில எல்லா கட்சிகளுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது பொதுவான நிலை என்றாலுங்கூட - நம்முடைய திராவிட இன இயக்கமானம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அவற்றில் தனி கவனம் செலுத்தி தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் - பொறுப்பு மிகுந்தவர்களாக உள்ளோம் என்பதை நாடறியும்-நல்லோர் அறிவர்.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்களால் ''என் திராவிட ஜீவரத்தினங்களே'' என்று அழைக்கப் பெற்றவர்களும், அண்ணா அவர்களால், ''ஒரு தாயின் வயிறு இடம் தராத காரணத்தால் பல தாய்களின் வயிற்றில் உதித்த சகோதர்கள் நாம்'' என்று உணர்ச்சி பொங்க குறிக்கப்பட்டவர்களுமான உடன்பிறப்புக்களின் பாசறையாம் -

இந்தக் கழகமும் - கழகத்தை வழி நடத்துவோரும் - முன்னணி தளகர்த்தர்களும் - படை நடத்தும் பாங்கறிந்தோரும் - எழுத்தாளர், பேச்சாளர், செயல்வீரர் என்று எண்ணறிந்த அண்ணன் தம்பியரும் - அக்காள் தங்கைகளும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே உறுதியானதும், இறுதியானதுமான இந்த அறிக்கையை நாள் வெளியிட நேர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக - கழக வளர்ச்சியில் ஊக்க நிலையைத் தடுத்து, ஒரு தேக்க நிலையை உருவாக்க பல முனைகளிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள் போர்க்களத்தில் ஒரு வீரன் மீது பொழியப்படும் கணைகள்போல் என்னையும் - இந்த இயக்கத்தையும் நிலை குலையச் செய்து விடும் என்று யாராவது எதிர்ப்பார்களேயானால் - அவர்கள் இந்தக் கழகம் நடந்து வந்த பாதையை அறியாதவர்களாகவும், அறிந்திருந்தாலும் அதை மறந்தவர்களாகவும் தான் கருதப்படுவர்.

எத்தனையோ துரோகங்களை - கீழறுப்பு வேலைகளை அறுத்து எறிந்தும் - மிதித்து நடந்தும் திராவிடத் தமிழ் மக்களின் அணையா விளக்காக ஆயிரமாயிரம் வைரக் கற்களின் ஒளிமிகுந்த சுடராக விளங்குவது இந்த இயக்கம் என்ற பெருமிதத் தோடும்தான் பேராசிரியரும், நானும் இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு நாங்கள் பின்பற்றும் வழி - பெரியார் வழியும், அண்ணா வழியும் இணைந்த இன ஒற்றுமை எனும் இணையற்ற வழியாகும்.

அந்த வழியே செல்லும் நம்மிடையே ஒற்றுமைக்கு உலை வைத்திடவும் - ஓங்கி வளரும் நம் புகழைச் சிதைத்திடவும் ஓநாய் குணம் படைத்தோர் காத்திருப்பர் என்பது நாம் அறியாதது அல்ல. அதனால்தான் வைத்த விழி தவறாமல் - கடக்கும் வழி உணர்ந்து நடப்போம் வா என்று உடன்பிறப்புகளுக்கு எச்சரிக்கை அழைப்பாகத்தான் இந்த அறிக்கை அமைகிறது.

தொடக்கத்தில் நான் குறிப்பிட்டவாறு, சில செய்திக் கழனியாளர்களின் சேட்டைகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகள் எதுவாயினும் - அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்லறைக்கு அனுப்பி வைத்து விட்டு - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து நிற்கும் இந்தக் கழகத்தைக் கட்டி காத்திட நான் தரும் இந்த அழைப்பில் அல்லது அறிவுரையில் அல்லது வேண்டுகோளில் அல்லது எச்சரிகையில் தொடர்புடையோர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தினர் யாரும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என்று பதவிப் பொறுப்பில் இருப்பாராயின், அந்தப் பொறுப்பு பற்றிய அய்ய வினாக்களுக்கும் - அறிவிப்புகளுக்குமட்டுமே செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டுமே அல்லாது, கழகம் எடுக்க வேண்டிய முடிவுகள், ஈடுபட வேண்டிய செயல்கள், மற்றக் கட்சிகளோடான உறவுகள் - இவை பற்றியெல்லாம் பொதுக்குழு, செயற்குழு எடுக்கின்ற முடிவுகளை செய்த்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பினை பேராசிரியரும் நானும் மட்டுமே முறையே பொதுச்செயலாளர், தலைவர் என்ற முறையில் பெற்றிருக்கிறோம் என்பதை அழுத்திக் கூறுகிறேன்.

எனவே பல்வேறு பொறுப்புகளில் உள்ள கழகத்தினர் தாம் வகிக்கும் பொறுப்புகள் பற்றிய வினாக்களுக்கும், அய்யப்பாடுகளுக்கும் மட்டுமே செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கவேண்டுமே தவிர - கட்சிக் கட்டுப்பாட்டுக்கு மீறிய நிலையில் - கழகத்தினர் எவரும் தன்னிலை விளக்கங்கள் தருவதற்கு கழக அமைப்புகள் இருக்கும்போது, அதனை விடுத்து செய்தியாளர்கள் சந்திப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் ஏற்புடையதல்ல. கழகக் கட்டுப்பாடு என்ற நிலையில் ஏற்கக் கூடியதும் அல்ல.

எனவே ''வெறும் வாயை மெல்லுவோருக்கு கொஞ்சம் அவல் கொடுப்பதைப் போல'' நமது கழகத்தினர் யாராயினும், எவராயினும், எந்த அமைப்பில், பொறுப்பில் இருப்பவராயினும் அல்லது அவரது குடும்பத்தினராயினும் கட்சித் தொடர்புடைய செய்திகளை கட்சியின் தலைமைதான் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும்தான் தங்கள் பணி எனக்கொண்டு அனைவரும் தொண்டாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.