கத்தோலிக்க பிஷப் பீட்டர்பெர்னாண் டோவை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்தார்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மதுரை கோ.புதூரில் உள்ள மதுரை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் பீட்டர்பெர்னாண்டோவை 08.04.2011 அன்று சந்தித்தார். அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்து பிஷப் பீட்டர்பெர்னாண்டோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிறுபான்மை சமுதாயத்தினரின் இன்றுள்ள சில கோரிக்கைகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் தெரிவித்தேன். அதை அவர் செய்து தருவதாக கூறினார். சிறுபான்மையினருக்கு ஏற்கனவே முதலமைச்சர் கருணாநிதி, நிறைய செய்து வருகிறார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அழகிரி தேர்தலுக்காக ஆதரவு கேட்டார். திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, சில முக்கிய கோரிக்கைகளை அவரிடம் வைத்தேன். தலித் கிறிஸ்தவர்களை தலித் பட்டியலிலும், வன்னியர் கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 7 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் எனத்தெரிவித் தேன். இந்த கோரிக்கைகளை வரும் திமுக ஆட்சியில் செய்து தருவதாக அவர் தெரிவித்தள்ளார்
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment