சேது திட்டத்தை முடக்கிய ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் - முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் :
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படவிடாமல் தடுத்த ஜெயலலிதாவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
ராமநாதபுரம் தொகுதி காங். வேட்பாளர் ஹசன்அலி, முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளில் காதர்முகைதீன் 06.04.2011 அன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார். ஆனால் கருணாநிதி வாடிய பயிரை மட்டுமல்ல வாடிய உயிரையும் கண்டு வாடுகிறார். அதனாலேயே மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினார். ஜெயலலிதா கோடநாட்டில் ஏழைகளுக்கு சொந்தமான நடைபாதையை அபகரித்தார். கருணாநிதி, தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார். ஆனால் கருணாநிதி வாடிய பயிரை மட்டுமல்ல வாடிய உயிரையும் கண்டு வாடுகிறார். அதனாலேயே மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினார். ஜெயலலிதா கோடநாட்டில் ஏழைகளுக்கு சொந்தமான நடைபாதையை அபகரித்தார். கருணாநிதி, தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டி:
தமிழர்களின் பல்லாண்டு கனவான சேது சமுத்திர திட்டம் திமுக கூட்டணி அரசால் முழு வடிவம் பெற்று செயல்பட இருந்தது. ஜெயலலிதாவால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் தடுக்கப்பட் டுள்ளது.
தமிழர்களின் பல்லாண்டு கனவான சேது சமுத்திர திட்டம் திமுக கூட்டணி அரசால் முழு வடிவம் பெற்று செயல்பட இருந்தது. ஜெயலலிதாவால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் தடுக்கப்பட் டுள்ளது.
சேதுசமுத்திரம் திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட் டிருந்தால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தமிழகத்தின் மேன்மைக்காக திமுக கூட்டணியை ஆதரியுங்கள் - ஜி.கே.வாசன் :
தமிழகத்தின் மேன்மைக்கும், உயர்வுக்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் பாமக வேட்பாளர் பால்பாஸ்கரை ஆதரித்து, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது, ஜி.கே.வாசன் பேசியதாவது:
மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம் என்று எந்த நிலையில் பார்த்தாலும் தமிழகம் முதல்நிலை மாநிலமாக விளங்குகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த அரசு அமைய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். எம்பி சித்தன் இத்தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளார். எனவே எம்பியும், எம்எல்ஏவும் இணக்கமான சூழ்நிலையில் ஒத்துழைப்புடன் செயல்பட மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இதன்மூலம் தொகுதியின் வருங்கால வளர்ச்சிக்கு உத்தரவாதம் ஏற்படும். மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. இத்திட்டங்களை தொகுதி முழுவதும் கொண்டு போய் சேர்க்க பாமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தின் வருங்கால மேன்மைக்கும், உயர்விற்கும் வழிவகை செய்ய திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். எங்களை ஆதரித்து நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். எம்பி.க்கள் சித்தன், ஞானதேசிகன் உடனிருந்தனர்.
அதிமுகவுடன் கூட்டணியால் பத்தோடு பதினொன்று ஆகிவிட்டார் விஜயகாந்த் - பாமக நிறுவனர் ராமதாஸ் :
‘அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் விஜயகாந்த் தனித்தன்மையை இழந்து விட்டார்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய 06.04.2011 அன்று சேலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இதே போல் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குவங்கியும் பலமாக உள்ளது.
இந்த இரண்டும் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தரும். எதிரணியில் அதிமுகவுக்கு மட்டுமே வாக்குவங்கி உள்ளது. வேறு எந்த கட்சிக்கும் கணிசமான வாக்குகள் இல்லை. நடிகர் விஜயகாந்த், இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்று கூறியதால் அவருக்கு வாக்குகள் கிடைத்தது.
தற்போது ஜெயலலிதாவின் பின்னால் நின்று பத்தோடு பதினொன்றாகி, அவரது தனித்தன்மையை இழந்து விட்டார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி நடப்பது நூற்றுக்கு நூறு உண்மை. மத்திய அமைச்சர் அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய மதுரை ஆட்சியர் சகாயம் உத்தர விட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு, கச்சத்தீவுமீட்பு, சேதுசமுத்திர திட்டம், நதிநீர் இணைப்பு என்று சரியான கோரிக்கைகளை, சரியான நேரத்தில், சரியான தலைவரிடம் முதல்வர் கருணாநிதி வைத்துள்ளார். இவை அனைத்தும் நிறைவேற தமிழக மக்கள் மீண்டும் கருணாநிதியை முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment