தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருப்பூர் மாவட்டத்தில் 04.04.2011 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 04.04.2011 அன்று மாலை மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உடுமலைபேட்டை தொகுதி கொமுக வேட்பாளர் இளம்பரிதி ஆகியோரை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேவனூர்புதூர், முக்கோணம், உடுமலை மத்திய பஸ் நிலையம், மடத்துகுளம், கனியூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.
உடுமலை மத்திய பஸ் நிலையம், மடத்துக்குளத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் மட்டுமே நாங்கள் பொதுமக்களை சந்திக்க வரவில்லை. எந்த நேரத்திலும் உங்களை நாடி வருவோம். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் விமானத்தில், ஹெலிகாப்டரில் வந்து பேசுவார்கள். அவர்களுக்கு தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்நாடு, இல்லை என்றால் கோடநாடு. அவருடன் கூட்டணி வைத்த ஒருவர் அதிமுக கொள்கை இல்லாத கட்சி என்று சொல்கிறார். எதிரணியில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்பவரால் தமிழ்நாட்டில் தற்போது ஹெல்மேட்டுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இது ஒரு அணி அல்ல; அது ஒரு சனி.
உங்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் கருணாநிதி. கடந்த தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். உடுமலையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற நலத்திட்ட பணிகள் ஏராளம். 42 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டம். 22 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம், 33 கோடி ரூபாயில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டம், பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக வி.பி.புரம் மக்களுக்கு பட்டா வழங்கி உள்ளோம். 100 கோடி ரூபாய் மதிப்பிலான நகராட்சி நிலம் திமுக ஆட்சியின் போதே மீட்கப்பட்டது. 38 கோடி ரூபாயில் உடுமலை&பல்லடம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி மக்களின் தாகம் தணிப்பதற்காக, 2வது கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. 118 கோடி ரூபாய் மதிப்பில் கான்டூர் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில்தான் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம் அந்தஸ்தை பெற்றது. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை 2006 தேர்தலின் போது வெளியிட்டோம். அதில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என அறிவித்து வெளியிட்டோம். நடைமுறைப்படுத்த முடியாது என ஜெயலலிதா கூறியபோதும், தலைவர் கருணாநிதி பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்திட்டு அத்திட்டத்தை செயல்படுத்தினார். தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
சத்துணவில் வாரத்துக்கு 2 முறை வழங்கப்பட்ட முட்டை, தற்போது 5 முறை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் கடன் ஸீ7,000 கோடி திமுக ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் கடன் தள்ளுபடியால் அதிமுகவினரே அதிகம் பயன்பெற்றனர். உடுமலை எம்எல்ஏ சண்முகவேலு, 16 லட்ச ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளார். பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், திமுக அரசின் திட்டங்களினால் பலன் பெற்றுள்ளனர்.
1989ம் ஆண்டு ஏழை பெண்களின் திருமண உதவி தொகையாக திமுக அரசு ஸீ5,000 வழங்கியது. 1991ம் ஆண்டு அதிமுக அரசால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது, 1996ம் ஆண்டு கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஸீ10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் 20ஆயிரமாக உயர்த்தி பின்னர், அத்தொகை 25 ஆயிரமாகவும் வழங்கப்பட்டது. தற்போது 30ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். சொன்னதை செய்தோம். செய்வதை சொல்கிறோம். எனவே, திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உங்களுடைய ஆதரவை தாருங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திமுக அரசு சாதனை பற்றி மேடையில் 20 நிமிடம் சிறுமி அசத்தல் பேச்சு :
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 03.04.2011 அன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டா லின் திமுக கூட் டணி வேட்பாளர்களை ஆதரி த்து பேசினார்.
அவர் மேடைக்கு வருவதற்கு முன்பு கிணத்துக்கடவை சேர்ந்த துணி வியாபாரி ஜமால்முகமதுவின் மகள் சுல்தானா பர்வீன்(10) மேடையேறி மைக் பிடித்தாள். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், கான்கிரீட் வீடு, மகப்பேறு நிதி உதவி என திமுக அரசின் சாதனைகளை புள்ளி விவரத்துடன் சரளமாக பேசினாள். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. எதையும் எழுதி வைக்காமல், 20 நிமிடம் பேசியதை கண்டு அசந்து போயினர்.
பின்னர் மேடைக்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின் சிறுமியை பாராட்டினார். ஜமால்முகமது கூறுகையில், “சுல்தானா பர்வீன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். சிறு வயதில் இருந்தே பொதுக்கூட்டங்களுக்கு நான் அழைத்து செல்வேன். பேச்சாளர்கள் பேச்சை உன்னிப்பாக கவனிப்பாள். பத்திரிகையில் வருவதையும் படிப்பாள். பேசுவதற்காக நான் பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை. ஏற்கனவே செம்மொழி மாநாட்டிலும் பேசினாள்” என்றார்.
No comments:
Post a Comment