கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

தேர்தலின் பெயரால் அடிப்படை பணிகளை முடக்குவதா? - முதல்வர் கருணாநிதி கேள்வி


தேர்தலின் பெயரால் மக்களுக்கு அடிப்படை பணிகளை நடத்த விடாமல் முடக்குவது சரிதானா? தேர்தல் ஆணையம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி 15.04.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மார்ச் 3ம் தேதி Òஆணையத்தின் ஆணை பிறந்து விட்டதுÓ எனும் தலைப்பில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், Òஇன்னும் இரண்டு மாதங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் இடைவிடாமல் பணியாற்ற வேண்டிய காலம்! ஓய்வு கொள்ளாமல் உழைக்க வேண்டிய நேரம். கடந்த ஐந்தாண்டு காலமாக கழக அரசு தமிழக மக்களுக்காக ஆற்றிய அளவற்ற அரும்பணிகள் & தமிழ்நாட்டு மக்களால் எந்த அளவுக்கு கருதப்படுகிறது, போற்றப்படுகிறது என்பதற்கான முடிவினைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னும் இடையிலே 42 நாட்கள் தான் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கப் போவதற்கு. இதற்கெல்லாம் 17 நாட்கள் தான் உள்ளன.Ó என்று எழுதியிருந்தேன்.
நான் எழுதியவாறே கட்சிகள் எல்லாம் அல்லும் பகலும் உழைத்து தேர்தல் வாக்குப் பதிவும் நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் ஒரு மாத காலம் இடைவெளியினை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதைப்பற்றிக் கூட நான் முதலில் எழுதிய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தேன்.
அதில், Ò வாக்குகளை அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல் 13! அந்த வாக்குகளை எண்ணப் போகின்ற நாள் மே 13! ஒரு மாத கால இடைவெளி ஏன்? மேற்கு வங்கத்தில் ஆறு கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு தான் அந்த மாநிலத்திலே வாக்குகளை எண்ணும்போது இங்கேயும் எண்ணப்பட வேண்டுமாம்; அது தேர்தல் விதி முறை. ஆனால் எதற்காக ஒரு மாத காலம் இடைவெளி விட்டு, அவசர அவசரமாக ஏப்ரல் 13ந்தேதியே அனைவரையும் சிரமத்திற்கு ஆளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். என்ன காரணமோ தெரியாது!
மே 13ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டால், வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14ந்தேதி தான் தெரியும். ஆனால் தற்போதுள்ள சட்ட மன்றம் முடிவுற்று, அடுத்த சட்டமன்றம் மே 17ந்தேதியே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால் தற்போதுள்ள சட்டமன்றத்தின் காலம் மே 16ந்தேதியோடு முடிவடைகிறது. எனவே மே 17ந் தேதிக்குள் தமிழகத்திலே ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். புதிய சட்டப் பேரவையை மே 17ந்தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கெல்லாம் இருக்கின்ற நாட்கள் மே 15, மே 16ஆகிய இரண்டு நாட்கள் தான். அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
மே திங்கள் 17ந்தேதி யன்று தான் புதிய சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13ந்தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தில் முதல் வாரத்திலோ & அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியே அவசர அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் & சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?Ó
நான் இவ்வாறு எழுதியவாறே, தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்புகள் & மே திங்கள் 13ஆம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. அல்ல, அல்ல, எடுக்கப்படக் கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலை தான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் & அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்ப தாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அது மாத்திரமல்ல, அரசின் சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்க விருக்கும் தென்மேற்குப் பருவக் காற்று காலத்தின் போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம்! அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்திற்கு, அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்தவகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும், தேர்தல் ஆணையமும், தான் இதற்கெல்லாம் ஒரு முறையான தீர்வினைக் காண வேண்டும்!

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment