அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 06.04.2011 அன்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரியகருப்பன் (திமுக, திருப்புத்தூர்). தமிழரசி (திமுக, மானாமதுரை,), திருநாவுக்கரசர் (காங்கிரஸ், அறந்தாங்கி), ராஜசேகரன் (காங்கிரஸ், சிவகங்கை), கே.ஆர் ராமசாமி (காங்கிரஸ், காரைக்குடி) ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் சிறப்பாக செயல்படுகிறது. அதுபோல மாநிலத்திலும் நம்மை சார்ந்த அரசு 5 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த 5 அண்டுகளில் தமிழக மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே சிந்தனை, ஒரே கொள்கை கொண்ட அரசுகள் அமைந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இந்த வளர்ச்சி மூலம் எல்லோருக்கு கல்வி, சுகாதார வசதி சென்றடைய வேண்டும் என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கை. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து அடித்தட்டு மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்களது நோக்கம். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உலகம் முழுவதும் பாராட்டுகின்றனர்.
மற்ற நாட்டு தலைவர்கள் இதனை வியந்து பாராட்டி, தங்கள் நாட்டில் செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். நாட்டின் முன்னேற்றத்தில் பெண்கள் பங்கு முக்கியம். அவர்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் 3ல் ஒருபங்கு ஒதுக்கீடு கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமான அரசு தமிழகத்தில் உள்ளதால் பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த முழுவெற்றிக்கு காரணம் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.
இந்தியாவில் அதிக வளர்ச்சி பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி, வாகன வளர்ச்சி, ஐவுளித்துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐடி துறை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. சமுதாய ரீதியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதால்தான் பல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. வேறு எப்போதும் இல்லாத வகையில் தமிழகஅரசுக்கு மத்திய அரசின் மானியமாக ரூ.ஒரு லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழகம், இந்தியாவை வளர்ச்சி பாதையில் முன்னேற்ற ஒன்றாக செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தங்கபாலு கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தங்கபாலு கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment