கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

சென்னையில் கருணாநிதி தீவிர பிரசாரம்


சட்டப்பேரவை தேர்தலில் திமுக அணி மாபெரும் வெற்றியை ஈட்டும் என்று வில்லிவாக்கம், கொளத்தூரில் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி கூறினார். நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொளுத்தும் வெயிலில் கருணாநிதி தீவிர பிரசாரம் செய்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிதியமைச்சர் அன்பழகனை ஆதரித்து 08.04.2011 அன்று கொளுத்தும் வெயிலில் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்தார். காலை 10.20 மணிக்கு வில்லிவாக்கம் வந்த கருணாநிதிக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் முதல்வர் கருணாநிதி ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:
உங்களுடைய அன்பால், அரவணைப்பால் உங்களுடைய ஆதரவால் பேராசிரியருக்கு வெற்றி நிச்சயம் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் உணர்ந்ததை உறுதிப்படுத்துகின்ற வகையில் நம்முடைய தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் மேலும் மேலும் உழைப்பை வழங்க வேண்டும்.
இரண்டொரு நாட்கள்தான் இருக்கின்றன. இந்த நாட்களில் தூங்குவதற்கோ, உண்ணுவதற்கோ என்று ஓய்வு கொள்ளாமல், அந்த ஓய்வையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வெற்றி ஒன்றே நம்முடைய குறி என்ற முறையிலே திமுகவினர் பணியாற்ற வேண்டும்.
திமுக இன்றைக்கு நடத்துகிற இந்த அரசு எவ்வளவு மேன்மையானது, ஏழை எளிய மக்களுக்குத் தேவையானது என்பதையெல்லாம் நான் மாத்திரமல்ல, காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் சோனியாகாந்தியே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவிலேயே ஏழைஎளிய மக்களுக்காகப் பாடுபடுகின்ற, பணியாற்றுகின்ற, சாதனைகளைச் செய்கின்ற ஒரே ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகின்ற திமுக ஆட்சிதான் என்று கூறி அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட முற்போக்கான ஒரு மாநிலம், ஏழைகளுக்குப் பாடுபடுகின்ற ஒரு மாநிலம், இன்றைக்கு திமுக அரசின் கையில் இருப்பதும், அது தொடர்ந்து இருந்தால்தான் நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளையெல்லாம் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதை மறந்து விடக் கூடாது.
ஏறத்தாழ 21 லட்சம் குடிசைகள் தமிழ்நாட்டிலே இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மக்களுக்கெல்லாம் கான்கிரீட் வீடுகளைத் தருவதற்கான திட்டம் தீட்டப்பட்டு, 1 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டன என்ற அளவுக்கு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அந்தத் திட்டம் நிறைவேறவும், இன்னும் சென்னை போன்ற மாநகரங்களில் இருக்கின்ற குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்யவும் எஞ்சியிருக்கின்ற பணிகளை முடிக்கவும் உங்களுடைய ஆதரவு திமுகவுக்கு தேவை.
இன்றைக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்றால் காரணம் என்ன? பேராசிரியர் நிதி அமைச்சராக இருக்கிற காரணத்தால்தான், கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பார்த்து, எவ்வளவு இதற்காக ஒதுக்க முடியும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவர் என்னோடு கலந்து வகுத்த திட்டந்தான், இந்த ரேஷன் அரிசித் திட்டம்.
இப்போது இருக்கின்ற ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி தருகிறோம் என்றால், எதிர்காலத்திலே திமுக அரசு அமைக்குமேயானால், பரம ஏழைகளுக்கு ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி இனாமாகவே வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றோம்.
அத்தகைய ஒரு முற்போக்கான, ஏழைகளைப் பற்றி மாத்திரமே சிந்திக்கக் கூடிய ஏழை மக்கள், நடுத்தர மக்கள், பாட்டாளி மக்கள், மகளிர் வர்க்கம், தாய்மார்கள், மாணவர்கள் இவர்களுக்காகப் பாடுபடக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து, உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார். அப்போது நிதி அமைச்சர் அன்பழகன் உடன் இருந்தார்.
கொளத்தூர்:
பின்னர் அவர் கொளத்தூர் புறப்பட்டு சென்றார். அங்கும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து கருணாநிதி பேசியதாவது:
ஸ்டாலின் உங்களுக்கு அறிமுகம் ஆகாதவர் அல்ல; என்னுடைய மகன் என்ற முறையிலும் கூட. அவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளரால் எவ்வளவோ கொடுமைக்கெல்லாம் ஆளாக்கப்பட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நெருக்கடி காலத்தில் அவர் சிறைச்சாலையிலே அடைபட்டதும் உதைபட்டதும், அவரைக் காப்பாற்ற தீரன் சிட்டிபாபு போன்றவர்கள் தங்களுடைய உயிரை விட நேர்ந்ததும் நாடு அறிந்த உண்மையாகும்.
உதயசூரியன் சின்னம் இந்த வட்டாரத்திலே எங்கெங்கே இருக்கிறதோ அந்தச் சின்னங்களுக்கெல்லாம் வாக்களித்து, அதே நேரத்திலே திமுக மாத்திரமல்லாமல், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்குகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்திலும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாங்கனி சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment