கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

நலத்திட்டங்கள் தொடர 6வது முறையாக கருணாநிதி மீண்டும் முதல்வராக வேண்டும் - திருமாவளவன்


‘நலத்திட்டங்கள் தொடர, முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வராக வேண்டும்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாவரசுவை ஆதரித்து, கட்சி தலைவர் திருமாவளவன் 11.04.2011 அன்று பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுளில் திமுக அரசு செய்த திட்டங்களில் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும், கலைஞர் வீட்டு வசதி திட்டம் மிகவும் அருமையான திட்டம். இத்திட்டத்தால் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர் சமூக மக்களும் அதிக அளவில் பயனடைந்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 லட்சம் கூரைவீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 3 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் திட்டத்தை ஜெயலலிதா அழித்து விடுவார். இத்திட்டம் மீண்டும் தொடர தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதி முதல்வராக வேண்டும்.
இவ்வாறு திருமாவள வன் பேசினார். வருங்கால சந்ததியினர் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் - கி.வீரமணி பேச்சு :
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து, தி.க. சார்பில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டம் 11.04.2011 அன்று நடந்தது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தலைமை வகித்தார்.
இதில், தி.க.தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
முதல்வர் கருணாநிதியின் தாய் வீடு தஞ்சை. கடந்த திமுக அரசால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலன் பெறாத குடும்பம் உண்டா. திமுக அரசின் சாதனைகள் தொடர வேண்டும் என்றால் உங்கள் சந்ததியினர் பலன்களை அடைய வேண்டும் என்றால் திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி வருங்கால சந்ததியினரின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவர்களுக்காக தான் தேர்தல் அறிக்கையில் லேப்டாப் அறிவித்துள்ளார்.
முன்பெல்லாம் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்பார்கள். இப்போது தெற்கிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என நிலைமையை மாற்றியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
பள்ளிகளில் தேர்வில் காப்பி அடித்தால் பறக்கும் படையினர் தண்டிக்க முடியும். ஆனால் இந்த தேர்தல் அறிக்கையை காப்பியடித்தவரை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதற்கு தான் வருகிறது தேர்தல்.
இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் கருணாநிதியை வீழ்த்த முடியாது - தங்கபாலு :

ஒரு ஜெயலலிதா அல்ல, ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் கருணாநிதியை வீழ்த்த முடியாது என்று தங்கபாலு பேசினார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 11.04.2011 அன்று இறுதிக் கட்ட பிரச்சாரம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக, பாஜ வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளை முற்றுகையிட்டனர்.
தங்கபாலுவுக்கு ஆதரவாக திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சியினர் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தனர்.
மாலை 5 மணிக்கு சித்திரைக்குளம் அருகே உள்ள காந்தி சிலை அருகே பிரசாரம் முடிந்தது. அப்போது தங்கபாலு பேசியதாவது;
வரலாற்று மிக்கத் தலைவராக உள்ள கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். கைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் சமூக பொருளாதாரம் மேம்பட மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள நம்முடைய அரசுகள் அமைந்துள்ளததுதான் காரணம்.
ஒரு ஜெயலலிதா அல்ல, ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் கருணாநிதியை வீழ்த்த முடியாது. தமிழகம் தீயவர்களின் கைகளில் போகக்கூடாது. வறண்ட தமிழகத்தை மீட்டு எடுத்தவர் கருணாநிதி. வெற்றிக் கூட்டணியின் முதல்வராக கருணாநிதி மீண்டும் அமர்வார்.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் - தங்கபாலு அறிக்கை :
மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வாக்காளர்களுக்கு தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 11.04.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வெற்றிக் கூட்டணியாக திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் களத்தில் உள்ளன. சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசும், கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய மகத்தான மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அத்திட்டங்கள் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட எங்கள் கூட்டணியை மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள் என மக்கள் முன் நிற்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தமிழகம் வளர்ச்சி பெற வாக்குறுதிகளை கொடுத்துள் ளோம். தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையில் அமையப்போகும் ஆட்சிக்கு மத்திய அரசின் இணக்கமான உறுதுணையும், நிதி உதவியும் அளிப்பதன் மூலம் தென்னக நதிகள் இணைப்பு, சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் திமுக சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எங்கள் கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் நிறைவேறவும், கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்கவும், தமிழகத்தில் நிலையான நல்லாட்சி தொடரவும் உங்களது வாக்குகளை எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

நல்ல திட்டங்கள் நிறைவேற வில்லிவாக்கத்தில் அன்பழகன் வெற்றி பெற வேண்டும் - ஜி.கே.வாசன் :

வில்லிவாக்கம் தொகுதி திமுக வே ட்பாளர் நிதியமைச்சர் அன்பழகனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வா சன் வில்லிவாக்கம் பகுதியில் 11.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்து பல நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. திமுகவின் மூத்த தலைவரான பேராசிரியர் உங்கள் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு 100 சதவீத சேவைகள் நிறைவேறும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 5 கோடி விவசாயிகள் பலம் பெற்றுள்ளனர். மத்திய அரசு இதற்காக 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் பலன் அடைந்துள்ளனர். அதிமுக, மக்களின் எண்ணங்களை, உணர்வுகளை புறக்கணித்துள்ளது. அவர்களது ஆட்சி காலத்தில் ஒரு துளி மையில் ஒரு லட்சத்துக்கும் மேலான அரசு ஊழியர்கள் மற்றும் சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினர். எஸ்மா & டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து அரசு ஊழியர்களை துன்புறுத்தினார்கள். நெசவாளர்களுக்கு கஞ்சி தொட்டி திறந்தனர்.
எனவே, மத்திய அரசுடன் இணைந்து தமிழக வளர்ச்சிப் பணிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர 6வது முறையாக முதல்வராக கருணாநிதி வர வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பேராசிரியர் அன்பழகனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு வாசன் பேசினார்.
காங்கிரஸ் பிரமுகர்கள் கோவிந்தசாமி, ஜவகர்பாபு, வைஷ்ணவ் பிரபாகர், ரவிச்சந்திரன் மற்றும் திமுக சார்பில் சதீஷ்குமார் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment