கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தேர்தல் கமிஷன் கெடுபிடியை தாண்டி திமுக அணிக்கு மக்கள் ஆதரவு - மு.க.அழகிரி உற்சாக பேட்டி


தேர்தல் கமிஷன் விதித்த கெடுபிடிகளை மீறி மக்கள் திமுக அணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி, மகன் துரைதயாநிதி ஆகியோர் 13.04.2011 அன்று காலை 9.50 மணியளவில் மதுரை பழங்காநத்தம் முத்துப்பட்டி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
வாக்களித்து விட்டு வெளியே வந்த மு.க.அழகிரி அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் மக்கள் திமுக அணிக்கு ஆதரவாக ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். இந்த எழுச்சியை பார்க்கும் போது 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வர் ஆவார்.
ஜெயலலிதா பணம் பட்டுவாடா, வன்முறை என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார். இதுவே அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
தேர்தல் கமிஷன் எடுக்கக்கூடிய கெடுபிடி நடவடிக்கைகளில் எங்காவது பணம் பட்டுவாடா செய்ய முடியுமா? திமுக அணி வேட்பாளர்கள் தேர்தல் கமிஷன் நிர்ணயித்ததை விட குறைவாகவே பணம் செலவழித்துள்ளனர்.
நாங்கள் திமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் மட்டுமே மக்களிடம் சொல்லி பிரசாரம் செய்தோம்.
ஜெயலலிதா அணியினரோ கருணாநிதியின் குடும்பத்தை பற்றியும், அவர்களை பழி வாங்குவோம் என்றும் சொல்லி பிரசாரம் செய்து வந்தனர். தேர்தல் ஆணையம் திமுக கூட்டணிக்கு எதிராகவும், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் மக்கள் திமுக அணியின் பக்கமே இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment