நாமக போட்டியிடும் தொகுதிகள் தவிர 213 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நடிகரும், கட்சியின் தலைவருமான கார்த்திக் 31.03.2011 அன்று சென்னையில் வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் 27 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டேன். 3 பேர் விலை போய் விட்டனர். 3 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இறுதியாக 21 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். உசிலம்பட்டி வேட்பாளர் வீரண்ணா ராஜூவை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதற்கெல்லாம் பயப்படும் கட்சி இது இல்லை. விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது பற்றி கருத்து கூற முடியாது. அவர் சேர்ந்து இருக்கும் கூட்டணி அப்படி. நாங்கள் போட்டியிடும் 21 தொகுதிகள் தவிர மற்ற 213 தொகுதிகளில் திமுகவுக்கு ஓட்டு போடுவோம். ஏனென்றால் அதிமுகவால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. முதல்வர் கருணாநிதியை சந்தித்து இருந்தால் எனக்கு கிடைத்து இருக்கும் மரியாதையே தனி. தவறு செய்து விட்டேன். பரவாயில்லை. எங்கள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு கூறினார்.
இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment