கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

வேட்பாளரை அடித்த விஜயகாந்தை கைது செய்யாதது ஏன்? - நடிகர் வடிவேலு



“என்கிட்ட அடி வாங்கினா மகாராஜா ஆவாங்கனு விஜயகாந்த் சொல்றாரு. அப்போ எதுக்கு தேர்தல்... எல்லாரையும் நிக்க வெச்சு அடிக்க வேண்டியதுதான” என்று நடிகர் வடிவேலு காமெடியாக கூறினார்.
சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேலு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஜாம்பஜார் பகுதியில் 31.03.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நானும் உங்கள நேர்ல பாக்கணும்னு தினமும் ஆசப்படுவேன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் அய்யாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ரொம்ப கஷ்டப்பட்ட ஏழை குடும்பத்துல இருந்து வந்தவன் நான். என்னய இந்த அளவுக்கு உசத்துனது மக்களாகிய நீங்கதான்.
உங்களோட அடிப்படை தேவைய உணர்ந்து அஞ்சு முறை முதல்வராக இருந்த கலைஞர் பல நல்ல திட்டங்கள உங்களுக்கு செய்திருக்காரு. அவரோட நல்ல திட்டங்கதான் என்னயும் கவர்ந்துடுச்சு. அதனாலதான் அவரு ஆறாவது தடவையா முதல்வரா வந்தா இன்னும் நல்ல திட்டங்கள்லாம் செய்வாருனு உங்கள நேர்ல சந்திச்சு சொல்ல வந்திருக்கேன்.
மக்களுக்கு சம்பந்தமே இல்லாம இருந்த ஒருத்தரு திடீரென கட்சி ஆரம்பிச்சுட்டு, நான் கருப்பு எம்ஜிஆருங்கறார். யாரோடயும் கூட்டணி இல்ல தெய்வத்தோடயும், மக்களோடும்தான் கூட்டணின்னார். இப்ப எனது மானசீக குரு தொடங்கிய கட்சியோடத்தான் கூட்டணி சேர்ந்திருக்கேங்கறார். போன வருஷம் தேர்தல்ல அந்த கட்சி இல்லையா? அப்ப கூட்டணி சேர வேண்டியதுதான.
பிரசாரத்துலயே தண்ணி அடிச்சிட்டு, எல்லாரு முன்னாலேயும் வேட்பாளர அடிக்கிறாரு. கேட்டா, என்கிட்ட அடிவாங்கினா மகாராஜா ஆவாங்கிறார். அப்போ எதுக்கு தேர்தல் நடத்தனும். எல்லாரையும் இவரு கல்யாண மண்டபத்துக்கு வர வெச்சு வரிசையா நிக்க வெச்சு அடிக்க வேண்டியதுதானே. திமுக எம்பி ரித்திஷ் அடிச்சாருன்னு கைது பண்ணியிருக்காங்க. தேர்தல் பிரசாரத்துல எல்லாரு முன்னாலேயும் வேட்பாளர அடிச்சவர ஏன் அரஸ்ட் பண்ணல.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.

டெலிபோன் கம்பத்தில் ஏறிய தொண்டர் :
சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் பிரசாரம் செய்தார். அப்போது, திமுக தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நடிகர் வடிவேலு பேச்சை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வொருவரும் மாடியில் ஏறி நின்று கேட்டனர். ஒரு தொண்டர் டெலிபோன் கம்பத்தின் உச்சியில் ஏறி நின்று கேட்டார். ஏராளமானோர் வடிவேலுவை தங்களது செல்போனில் படம் பிடித்து தள்ளினர். வடிவேலு பேச தொடங்கியபோது மைக் சரியாக வேளை செய்யவில்லை. அப்போது கேட்குதா? கேட்குதா? என்று அவரது பாணியில் ஒவ்வொருவரிடமும் கேட்டார்.


விஜயகாந்த் வண்டில ஏறாதீங்க - அடி வாங்காம இருக்க வடிவேலு ஐடியா :

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிதி இளம் வழுதியை ஆதரித்து நடிகர் வடிவேலு 31.03.2011 அன்று எழும்பூர், சேத்துப்பட்டு, சூளை நெடுஞ்சாலை, சுந்தரபுரம், தட்டான்குளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது நடிகர் வடிவேலு பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, அதன் பிறகு தான் முதல்வர் ஆனார். ஆனால், தற்போது கட்சி ஆரம்பித்த ஒருவர், நான் தான் முதல்வர் என்று நையாண்டி செய்து வருகிறார். கட்சி தலைவருக்கு உண்டான குணம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை.
பிரசாரத்தின் போது வேட்பாளரை தாக்குகிறார். கெட்ட, கெட்ட வார்த்தையால், வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். இன்னும் அவரது கட்சியில் உள்ள 40 வேட்பாளருக்கு அடி காத்து இருக்கிறது. அடிவாங்காமல் இருக்க ஒரே வழிதானய்யா இருக்கு. அவருடன் பிரசாரம் செய்ய செல்லும்போது, பின்னாடி வண்டியில் வருகிறேன் என்று நழுவி விடுங்கள். இல்லையென்றால் அடி உண்டு.
எந்த தலைவராவது கட்சியில் உள்ளவரை அடிப்பாராய்யா? எனவே, கட்சியில் உள்ளவர்கள் இரவோடு இரவாக கட்சியை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள். விஜயகாந்த் கட்சியில் உள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், எல்லாரும் வீட்டை பூட்டி விட்டு தான் ஓட வேண்டும். எதாவது உங்கள் பகுதியில் உள்ள குறையை சுட்டி காட்டினால் ஓட்டு போட்ட உங்களையே அடிப்பார்.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.


No comments:

Post a Comment