கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

சலுகைகளை ரத்து செய்தவர் ஜெயலலிதா


ஏழை மக்களுக்கு திட்டம் தீட்டியவர் முதல்வர் கருணாநிதி என மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் 30.03.2011 அன்று இரவு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கருணாநிதி ஆட்சியில் சமத்துவபுரம், உழவர் சந்தை, கலைஞர் வீட்டு வசதி திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு சேருகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது திருமண உதவித் தொகையை நிறுத்தினார். அரசு ஊழியர்களுக்கு சலுகைகளையும் ரத்து செய்தார். அதற்கு மாறாக வழக்குகள் பதிவு செய்தார். மக்களுக்கு எந்த சேவையும் செய்யாத ஜெயலலிதா கூட்டணி தோல்வி அடையும். எனவே திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment