கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

அதிமுகவை கைப்பற்ற விஜயகாந்த் திட்டம் - வடிவேலு பேச்சு



தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிரசாரத்திற்காக செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பார்க்கும் போது மீண்டும் தமிழக முதல்வராக கருணாநிதி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும்.
பணம் வாங்கி கொண்டு பிரசாரம் செய்யவில்லை, கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் நான் ஆதரிப்பதற்கு காரணம். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி என்னை மிகவும் பாதித்தது. கருவில் இருக்கும் குழந்தைக்கு நிதி உதவி கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். அதிமுக கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த், ஜெயலலிதாவை அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அவர் அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். எனக்கு தேமுதிக முக்கிய நிர்வாகிகளிடமிருந்து ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் 41 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயரை கடகடவென விஜயகாந்தால் கூற முடியாது. தேமுதிக கட்சி அல்ல; அது கடை. அதனால் கல்லா கட்டுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரைப்பாக்கம் கோவிலஞ்சேரி, மாடம்பாக்கம், மப்பேடு, சேலையூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் போன்ற பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

No comments:

Post a Comment