கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 8, 2011

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: மத்திய மந்திரி தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து கலைஞர்


சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் 07.07.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு:

கேள்வி: மத்திய மந்திரி தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் மீடியா'க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல.

கேள்வி: தயாநிதி மாறனுக்கு கட்சி துணையாக இருக்குமா?

பதில்: இருக்கும்.

கேள்வி: இதுவரை துணையாக இருந்தது போல தெரியவில்லையே?

பதில்: இதுவரை அவருக்கு என்ன நடந்தது?

கேள்வி: தயாநிதிமாறனுக்கு பதில் வேறு யாராவது மத்திய மந்திரி ஆவார்களா?

பதில்: தெரியாது.

கேள்வி: மத்திய அரசிடம் இருந்தோ, காங்கிரஸ் தலைவியிடம் இருந்தோ, நேற்றிரவில் இருந்து யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்: இல்லை.

கேள்வி: இன்று பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே?

பதில்: அது உங்கள் கற்பனை.

இவ்வாறு கலைஞர் கூறினார்.

No comments:

Post a Comment