கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 11, 2011

திமுகவினர் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம் : கோவையில் ஸ்டாலின் பேட்டி



திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜயா டிரேட் பேர் மைதானத்தில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அந்த இடத்துக்கு அண்ணா வளாகம் என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதை பார்வையிட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 11.07.2011 அன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு வந்து ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
85 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. செயற்குழு, பொதுக்குழுவுக்காக முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட அரங்கம் தயாராகிறது. கூரையின் மேற்பகுதியில் பாரசூட்டுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன விரிப்புகள் போடப்படும். தரையில் தூசி பறக்காமல் இருக்க கார்பெட் விரிக்கப்படுகிறது. மேடையை ஒட்டி, திமுக தலைவர் கருணாநிதிக்காக ஓய்வு அறை ஒன்றும் தயாராகிறது. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
செயற்குழுவில் 200 பேர், பொதுக்குழுவில் 1950 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேர் பங்கேற்பார்கள். 23, 24ம் தேதிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும். இதை கருணாநிதி அறிவிப்பார்.
ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இதுபற்றி புகார் மனுக்கள் பெற கருணாநிதி அறிவாலயத்தில் இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்கலாம். உண்மை இருக்கும்பட்சத்தில் வழக்கு போடலாம். ஆனால் எவ்வித முகாந்திரமும் இன்றி திட்டமிட்டு பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன், ஈரோடு மாவட்ட செயலாளர் ராஜா, முன்னாள் எம்.பி மு.ராமநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, அருண்குமார், சிங்காரவேலு, நடராசன், பொன்முடி, மாநகர திமுக செயலாளர் வீரகோபால், பொருளாளர் நாச்சிமுத்து, மாவட்ட திமுக பொருளாளர் பி.நாச்சிமுத்து, இளைஞரணி அமைப்பாளர் முருகவேல், மாநகர திமுக துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட திமுக துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவைத்தலைவர் சவுந்தர்ராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, ரத்னவேலு, ராமுமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment