கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 9, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி திமுக இளைஞரணி போராடும் : திருச்சியில் செயல்திட்ட குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி திமுக இளைஞரணி போராடும் என திருச்சியில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானத்தின் அடிப்படையில் நடந்த விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:

உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவை மக்களிடம் எடுத்து கூறி, விளக்குவதற் கான கூட்டம் தான் இது.
தமிழகத்தில் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிராமங்களில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோற்றதாக சிலர் கூறி வருகின்றனர். இந்த கூட்டத்தை பார்க்கும் போது நாம் தோற்கவில்லை. எந்த கட்சிக்கும் கூடாத கூட்டம் இப்போது கூடி உள்ளது. இந்த எழுச்சி யாருக்கும் வராது.
தேர்தலில் நாம் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என திட்டமிட்டு, எஸ்.எம்.எஸ். மூலம் சிலர் செய்த பிரசாரத்தால் நாம் தோற்கடிப்பட்டோம். திமுக இருந்த 5 ஆண்டு கால ஆட்சியில், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. இது நாடறிந்த உண்மை. அண்டை மாநிலங்கள் கூட தேர்தல் வந்தாலும், திமுக அறிவித்த அனைத்து திட்டங்களையும் அங்கு எடுத்து கூறி, வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அரசும் திமுக அறிவித்த திட்டங்களை அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை திமுக 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது. இந்த சாதனையை யார் மறுத்தாலும், அவர்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானத்தின் அடிப்படையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கு முதலில் நன்றி கூற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2011 தேர்தலில் பதிவான வாக்குகளில் 3 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 114 ஓட்டுகளை திமுக கூட்டணி பெற்றது. 1975ல் நெருக்கடி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, பலர் உயிர் தியாகம் செய்தனர். அப்போது ஏராளமான பொய் வழக்குகள் பதியப்பட்டன. அவற்றை எல்லாம் தகர்த்து எறிந்து, திமுக வெற்றி பெற்றது.
சமச்சீர் கல்வி என்பது ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி சமமான கல்வி தரவேண்டும் என்பது கருணாநிதியின் கொள்கையாகும். இதை மனதில் கொண்டு கல்வியாளர்களை, அறிவியல் மேதைகளை கலந்தாலேசித்து பல அம்சங்களை தேர்ந்தெடுத்து உருவாக்கியது தான் சமச்சீர் கல்வி.
2010&11 ஆண்டிற்கான 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, அவைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு, கல்வி கற்க துவங்கப்பட்டது. மேலும் 2011&12 புதிய பாடநூல் உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான பணிகளில் திமுக அரசு ஈடுபட்ட போது, தனியார் பள்ளிகள் மற்றும் சுயநலம் பெற்றவர்கள் சேர்ந்து கொண்டு இவற்றை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தை நாடினர். அதற்கு நீதிமன்றம் எந்த தடையும் போடவில்லை. சமச்சீர் கல்வி சரியானதே, இந்த கல்வி அனைவருக்கும் போய் சேரும் என மறுப்பு தெரிவித்து தடைபோடவில்லை.
தற்போது பெற்றோர், பொது நல விரும்பிகள் மீண்டும் சேர்ந்து உயர்நீதிமன்றத்தை நாடினர். விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு இயற்றிய சட்ட முன் மொழிவுகளை நிறைவேற்ற தடைவிதித்தது. இதில் ஆட்சேபனை பகுதி இருந்தால், அவற்றில் திருத்தம் செய்து அமல்படுத்தலாம் என கூறியது.
இதை அதிமுக அரசு ஏற்கவில்லை. அதன்பிறகு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு விசாரணை நடத்திய நீதிமன்றம், உயர்நீதிமன்றம் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து ஆராயவும் உத்தரவிட்டது. இவற்றில் சம்பந்தம் இல்லாதவர்களை அரசு நியமித்து அவற்றின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக பொறுமையாக இருந்தது. இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது.
திமுக இளைஞரணி, மாணவரணியும் சேர்ந்து சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வலியுறுத்தி நடுத்தெருவுக்கு வந்து போராடுவோம்.
தற்போது திமுக அரசால் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்த தடைவிதித்து, அதை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமித்துள்ளார் ஜெயலலிதா. திமுக பார்க்காத விசாரணை கமிஷனா, அல்லது விசாரணையா.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பயன்படுத்த மறுப்பது ஏன். திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் தான் தினமும் கோட்டைக்கு செல்கிறார் ஜெயலலிதா. பின்னர் அதில் ஏன் செல்ல வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் ராணிமேரி கல்லூரியை இடித்து விட்டு தலைமை செயலகம் கட்ட முடிவு எடுத்ததற்கு மாணவிகள், பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது அவற்றுக்கு ஆதரவு தெரிவித்தற்கு இரவோடு இரவாக எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது.
தற்போது, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி அவர் கூறுவதற்கு திமுக ஆட்சியில் மின் உற்பத்திக்காக செயல்படுத்த திட்டங்கள் தான் காரணம்.
அவர் ஆட்சியில் இருந்த 2 முறையும் மின் உற்பத்திகாக ஏதேனும் திட்டங்களை தீட்டியது உண்டா. ஆனால் திமுக இருந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், மேட்டூர் அனல் மின்நிலையம், உடன்குடி அனல் மின்நிலையம் ஆகிய இடங்களில் மின் உற்பத்திக்காக திட்டம் தீட்டப்பட்டது.
இவற்றில் 7 ஆயிரத்து 798 மெகாவாட் அளவிற்கு இந்த அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படும். அப்போது இவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, அதிமுக ஆட்சியில் இருப்பது சந்தேகம் தான்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் வரும். அவற்றை தாங்கி கொள்ள முடியாததால், திமுகவை அடக்க, ஒடுக்க ஜெயலலிதா முயலுகிறார். முன்னாள் அமைச்சர் நேரு கூறியது போல் தவறு இருந்தால், அவற்றை நிரூபித்து தண்டனை கொடுங்கள். அவற்றை ஏற்று கொள்கிறோம்.
திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான், இதுவரையிலும் அழிந்து போய் உள்ளனர். திமுக பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. திருச்சியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும். எந்த வழக்கும் போட்டாலும், அவற்றுக்கு அஞ்சாமல் துணிந்து திமுக செயல்படும்.
தற்போது அதிமுக கொண்டு வந்துள்ள நில அபகரிப்பு மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொட நாட்டில் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லையா, 80 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இரண்டரை கிலோ மீட்டர் பாதையை ஆக்கிரமித்துள்ள ஜெயலலிதா கடந்த 5 ஆண்டாக அங்கு தான் ஓய்வெடுத்தார்.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டில் விட வேண்டும் என கூறியும் அந்த உத்தரவை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்திற்கு துணை மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். உறையூர் பகுதி செயலாளர் கண்ணன், 52வது வட்ட செயலாளர் தி.மு.ரங்கா நன்றி கூறினர்.

No comments:

Post a Comment