கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 12, 2011

சமச்சீர் கல்வி விவகாரம் - அரசு கோரிக்கை நிராகரிப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு



சமச்சீர் கல்வி விவகாரம் குறித்து கமிட்டி உறுப்பினர்கள் அளித்த கருத்துகளை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவகாசம் வேண்டும் என்று அரசு கேட்டதற்கு, நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்குகள் 11.07.2011 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனோன்மணியம் தரப்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி கூறியதாவது:
கடந்த 1983ம்ஆண்டு கல்வியை சீரமைக்க மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. இதற்கு பேராசிரியர் யஷ்பால் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் குழு பரிந்துரை செய்ததை பின்பற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இரு பாடத்திட்ட முறைகளை கொண்டு வந்தன.
தமிழகத்தில் மட்டும் மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் ஆகிய 4 வழி பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு ஓரே பாடத்திட்டத்தின் கீழ் கல்வி போதிக்க சமச்சீர் கல்வியை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நிபுணர்களின் கருத்து கேட்டு கொண்டு வந்தது.
இதை புதிய அரசு அவசர அவசரமாக தள்ளிவைத்தது அரசியல் உள்நோக்கமுடையது. எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் சமத்துவம் கிடைக்கும் வகையில் சமூக நீதியை நோக்கி சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான சட்டம் செல்லும் என்றும் உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அப்படி கூறிய தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மே மாதம் 21ம் ஆட்சிக்கு வந்த புதிய அரசு சமச்சீர் புத்தகங்களை கிடப்பில் போட்டு விட்டு பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சடிக்க டெண்டர் விட்டது. அதன்பிறகு தான் அமைச்சரவை கூடி யாரிடமும் கருத்து கேட்காமல் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்தது. இதில் ஏன் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்.
9 கோடி சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள்
ஸி200
கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது. இந்த புத்தகங்கள் எல்லாம் வீணாகியுள்ளன. இது பொதுமக்களின் பணம். அரசு கொள்கை மாறினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. கடந்த 45 நாட்களாக மாணவர்கள் எந்த புத்தகத்தை படிப்பது என்று குழம்பி உள்ளனர். இந்த அவல நிலையை நீதிமன்றம் நீக்க வேண்டும்.
சமச்சீர் கல்வியை முறைப்படுத்த வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அமைத்த கமிட்டி சமச்சீர் கல்வி தரமற்றது என்று அறிக்கை கொடுத்துள்ளது.
ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் கல்வித்துறை செயலாளர்கள் மாறினாலும் கடந்த ஆட்சியின் கொள்கையை கல்வித்துறை செயலாளர் பின்பற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் கலந்து கொண்டனர். அதுபோல மாணவர்கள் பாதிக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும்.
4 முறை கூட்டம் - 15 மணி நேர ஆலோசனை :
இந்த கமிட்டியில் கல்வியாளர்கள் இல்லை. அவர்கள் என்ன கருத்து கூறினார்கள் என்று தெரியவில்லை. கமிட்டி அறிக்கையில் அவர்களின் கையெழுத்து இல்லை. கமிட்டி 4 முறை கூடி 15 மணி நேரம் விவாதம் நடத்தியது. 1 கோடியே 35 லட்சம் மாணவ, மாணவிகளின் நலனை எப்படி 15 மணி நேரத்தில் முடிவு எடுக்க முடியும். இவ்வாறு வக்கீல் எஸ்.பிரபாகரன் வாதாடினார்.

No comments:

Post a Comment