நில மோசடி வழக்கு தொடர்பாக கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை திமுக நிர்வாகிகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார்.
நிலம் வாங்கிய பிரச்னையில் மோசடியில் ஈடுபட்டு மிரட்டியதாக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு, திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 20.07.2011 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பெரியசாமி, தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், எம்எல்ஏக்கள் மைதீன்கான், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஏ.எல்சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சிறைக்குள் சென்ற அமைச்சர் மு.க.அழகிரி, திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், “நண்பர்கள் என்ற முறையில் இவர்களை பார்க்க வந்தேன். தங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி என்னிடம் தெரிவித்தார்” என்றார். பின்னர் அவர் மதுரை புறப்பட்டு சென்றார்.
மதுரை:
மு.க.அழகிரி வருகையையொட்டி, பாளையங்கோட்டை மத்திய சிறை முன் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.
மதுரை:
கொடைக்கானல் நகராட்சி தலைவரான திமுகவை சேர்ந்த முகமது இப்ராகிம், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 20.07.2011 அன்று மதியம் சிறைக்கு சென்று பார்த்தார். வெளியே வந்த அவர், அங்கு நின்றிருந்த முகமது இப்ராகிமின் குடும்பத்தினரை பார்த்து, �தைரியமாக இருங்கள்; பார்த்துக் கொள்ளலாம்” என ஆறுதல் கூறினார். சிறைக்கு வெளியே திமுகவினர் திரண்டிருந்தனர்.
நில மோசடி வழக்கு தொடர்பாக பொட்டு சுரேஷ் வீட்டில் சோதனை :
நிலமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் வீட்டில் போலீசார் 20.07.2011 அன்று சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளத்தை சேர்ந்த பாப்பா என்பவர் கொடுத்த நில மோசடி புகாரை தொடர்ந்து, 19.07.2011 அன்று திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து டிவிஎஸ் நகரில் உள்ள பொட்டு சுரேஷ் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மதுரை புறநகர் மாவட்ட கூடுதல் எஸ்பி மயில்வாகனன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் 20.07.2011 அன்று மாலை 4.30 மணி அளவில் சென்றனர். அப்போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்த வாட்ச்மேனிடம் வீட்டை சோதனையிட வந்திருப்பதாக போலீசார் கூறிவிட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பொட்டு சுரேஷ் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் அங்கு சென்றனர். ஆள் இல்லாத வீட்டில் வாரன்ட் இல்லாமல் எப்படி சோதனை போடலாம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். �உங்களிடம் வாரன்ட் காண்பிக்க வேண்டியதில்லை. தேவைப்படும் இடத்தில் ஆவணங்களை காண்பிப்போம்� என போலீசார் கூறிவிட்டு, சோதனையை தொடர்ந்தனர்.
மேலும், திருப்பாலை ராமசாமி நகரில் உள்ள பொட்டு சுரேஷின் நெருங்கிய நண்பரான மீனாட்சிசுந்தரத்தின் வீட்டிலும் போலீசார் 20.07.2011 அன்று சோதனை நடத்தினர். மேலும், தல்லாகுளத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல், வில்லாபுரத்தில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் வீடு மற்றும் அவனியாபுரத்தில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் திருப்பரங்குன்றம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெஞ்சுவலி
பொட்டு சுரேஷின் நண்பர் மீனாட்சிசுந்தரத்தின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது , நெஞ்சு வலிப்பதாக மீனாட்சிசுந்தரம் போலீசாரிடம் கூறினார். இதனை தொடர்ந்து சோதனையில் இருந்த போலீசார், பாதுகாப்புடன் மீனாட்சிசுந்தரத்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment