கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 24, 2011

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது



கோவை யில் 23.07.2011 அன்று நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து 4 மணி நேரத்துக்கு மேல் முன்னணி நிர்வாகிகள் விவாதித்தனர். செயற்குழு முடிவுகளை இன்றைய பொதுக்குழுவில் விவாதித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், திமுகவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க கோவையில் 23.07.2011 அன்று கட்சி யின் செயற்குழு கூட்டம் நடந்தது. 24.07.2011 அன்று பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கோவை சிங்காநல்லூர் அண்ணா அரங்கத்தில் 23.07.2011 அன்று மாலை 4.10 மணிக்கு திமுக செயற் குழு கூடியது. கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டா லின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொது செயலாளர்கள் பரிதிஇளம்வழுதி, சற்குணபாண்டியன், தலைமை நிலைய செய லாளர் துரைமுருகன், தென் மண்டல அமைப்பு செய லாளர் மு.க.அழகிரி, முன் னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறு முகம் உட்பட கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து கருணாநிதி பேசிய பின்னர், பொது செயலாளர் அன்பழகன் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சி நிர்வாகிகள் மீது அதிமுக அரசு போட்டு வரும் வழக்குகள், கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்காலத்தில் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ளவேண்டியவை குறித்து பேசி னார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் பேசினர்.
செயற்குழு கூட்டம் மாலை 4.10க்கு மணிக்கு தொடங்கி இரவு 8.10 வரை நடந்தது. இந்த கூட்டத்தில் 4 மணி நேரம் விவாதிக்கப்பட்ட முடிவுகளை இன்று நடக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு விவாதத்துக்கு பின்னர் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பல் வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், “செயற்குழு கூட்டத்தில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே பிரதானமாக பேசப்பட்டது. செயற்குழுவின் முடிவுகள் அனைத்தும் பொதுக்குழுவில் விவாதத்துக்கு விடப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தீர்மானங்களாக வடிவமைக்கப்படும்.
ஸ்டாலின்&அழகிரி இடையே பிரச்னை இருப்பதாக சில பத்திரிகைகள் மட்டும் தான் எழுதி வருகின்றன. எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்தில் மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஏதும் முடிவு செய்யவில்லை. இன்றைய பொதுக்குழுவில் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படலாம். தற்போதைக்கு காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை,“ என்றார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், “கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. திமுக ஜனநாயக அடிப்படையில் இயங்கும் கட்சி. பொதுக்குழுவில் தான் முடிவுகள் இறுதி செய்யப்படும். ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையே பிணக்கு என்றும் போட்டி என்றும் மீடியாக்களில்தான் செய்திகளும் கட்டுரைகளும் வருகின்றன; அவையே ஊதிப் பெரிதாக்குகின்றன“ என்றார்.
திமுகவின் செயற்குழு கூட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கு கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அரங்கின் வெளியே குவிந்திருந்தனர். அந்த பகுதியே மாநாடு போல் காட்சியளித்தது. செயற்குழு கூட்டத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை தொண்டர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

No comments:

Post a Comment