கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

புதிய தலைமை செயலக வழக்கு விசாரணை கமிஷனுக்கு தடை கோரிய திமுக வழக்கில் பரபரப்பு விசாரணை


திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்று அப்போதைய ஜெயலலிதா அரசு முடிவு செய்தது. இதனால் சென்னை, ராணிமேரி கல்லூரியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அறிவித்தார். இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுநலன் வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து , ராணிமேரி கல்லூரியில் புதிய தலைமை செயலகம் கட்ட இடைக்கால தடை விதித்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓமந்தூர் எஸ்டேட்டில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். இதில் சட்டமன்றமும் உள்ளது. தேர்தலுக்கு முன்பே �நான் புதிய தலைமை செயலகத்திற்கு செல்லமாட்டேன்� என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் இருந்து அவரது உள்நோக்கத்தை தெரிந்து கொள்ளலாம். புதிய தலைமை செயலகம் கட்டியத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளது எனக்கூறி முன்னாள் நீதிபதி தங்கராஜ் தலைமையில் தமிழக அரசு, விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இது சட்டவிரோதமானது. பொது முக்கியத்துவம் உள்ள விஷயங்களுக்குத்தான் கமிஷன் அமைக்க முடியும். மேலும் குற்றச்சாட்டு உறுதியாக இருந்தால்தான் கமிஷன் அமைக்க முடியும். தலைமை செயலகம் கட்டியதில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக கேள்விப்பட்டோம் என தமிழக அரசு கூறியுள்ளது.
திமுகவுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷன் தலைவர் தங்கராஜ் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர். அவரை டான்சி வழக்கிலிருந்து விடுவித்தவர். இவர் வழங்கிய டான்சி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்படிப்பட்டவர் திமுகவுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார். இவரை மனித உரிமை கமிஷன் உறுப்பினராக நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனால் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள். எனவே தங்கராஜ் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். கமிஷன் விசாரணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் 20.07.2011 அன்று விசாரித்தனர்.
மனுதாரர் அன்பழகன் சார்பாக திமுக வக்கீல்கள் ஆலந்தூர் பாரதி, கிரிராஜன், ஆறுமுகம், அனிதா, சீனிவாசன் ஆகியோரும், அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் எஸ்.வெங்கடேஷ், அரசு சிறப்பு வக்கீல் எஸ்.இன்பதுரை ஆகியோரும் ஆஜராகினர். கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:
வக்கீல் சீனிவாசன்:
திமுக மீது அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார்கள்.
அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்:
இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க கூடாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அரசு தரப்பு கருத்தைக் கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு வாரம் அவகாசம் வேண்டும்.
சீனிவாசன்:
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை 12 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இங்கும் வாய்தா வாங்குகிறார். மனுதாரர் அன்பழகன் ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தால்தான் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் வழக்கு போடாமலிருந்தால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை சரியாக நடந்திருக்காது.
நவநீத கிருஷ்ணன்:
ஸ்பெக்ட்ரம் வழக்கெல்லாம் பத்திரிகைகளில் வருகிறது. அப்படிப்பட்டவர்கள் இங்கு தேவையில்லாமல் பேசுகிறார்கள். அது ஆயிரம் கோடி சம்பந்தப்பட்ட வழக்கு.
சீனிவாசன்:
அட்வகேட் ஜெனரல் கோர்ட்டை அரசியல் மேடையாக்கி விட்டார். இதை கோர்ட் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
தலைமை நீதிபதி இக்பால்:
அட்வகேட் ஜெனரல் பிஸியாக உள்ளார். சமச்சீர் வழக்கை விட்டுவிட்டு இந்த வழக்குக்கு வந்துள்ளார். அவர் கேட்கும் அவகாசத்தை கொடுக்கிறோம்.
சீனிவாசன்:
அவகாசம் கொடுங்கள். ஆனால் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
நவநீத கிருஷ்ணன்:
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதாடவிருக்கிறோம். எனவே விசாரணை கமிஷனுக்கு தடைவிதிக்க கூடாது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த மாதம் 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அன்றைய தினம் அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment