கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 27, 2011

29.07.2011 அன்று திமுக போராட்டம் : மாணவர்கள், பெற்றோர்களுக்கு அழைப்பு


சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி வரும் 29ம் தேதி திமுக போராட்டம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர், ஆசிரியர், பெற்றோர் முழு ஆதரவளிக்க வேண்டும்; வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் 26.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எப்படியும் எப்பாடு பட்டேனும் எத்தகைய நீதிமன்றங்கள் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற முனைப்போடு தனியார் பள்ளி முதலாளிகளும் அதற்கு துணை போகும் தமிழக அரசும் மிகுந்த அக்கறையோடு உயர்நிலை வழக்கறிஞர்கள் எண்ணற்றவர்களை வைத்து வாதாடி போராடி தமிழ் மாநில மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஆவேச ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களது ஆட்டத்தை தடுக்கவும் அநீதியை வென்று அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் கடமைப்பட்டுள்ள தமிழகத்தின் கட்சிகள் பலவற்றின் தலைவர்களின் ஏகோபித்த குரலோடு திமுக குரலும் இணைந்திருக்கிறது. அதனால் திமுக மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் பல்வேறு அணிகள் சார்பாக 29ம் தேதி வெள்ளிக் கிழமை சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலு சேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சிறிதும் வன்முறைக்கு இடமின்றி அமைதியான முறையில் அறவழியில் சமச்சீர் கல்வி கோரிக்கையை வலியுறுத்தி அறப்போர் கிளர்ச்சி நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு திமுக தலைமை கழகம் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறப்போர் கிளர்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோருடன் இணைந்து சமச்சீர் கல்வி அறப்போர் கிளர்ச்சி அமைதியான முறையில் முழு அளவில் வெற்றி பெற இளைஞர் அணியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment