கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

திமுகவினர் மீது தொடர்ந்து வழக்கு : கருணாநிதி கடும் கண்டனம்


திமுக தலைவர் கருணாநிதி 20.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அல்லல் நீங்கும்; தொல் லை குறையும்; ஆரம்பமாகி விட்டன அரூபத்தின் லீலைகள்� என்று மனோகரா படத்தில் ஒரு உரையாடல் வரும். அதைத் தொடர்ந்து வருகின்ற வசந்த சேனையின் அட்டகாசங்களையும் பார்த் திருக்கிறோம்.
எதுவுமே அறியாமல் அவள் மடிதான் தனக்குச் சொர்க்க லோக மெத்தை என்று கூறிக் கொண்டு சொக்கிக் கிடப்பார் புருசோத்தம மன்னன்.
இப்படி அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள், மனோகரனாலும், அவனைப் பெற்றெடுத்த பத்தினித்தங்கமாம் பத்மாவதியின் சாபத்தினாலும், எப்படியெல்லாம் பட்டொழிந்தார்கள். கெட்டுத் தொலைந்தார்கள் என்ற முடிவையும் பார்த்திருக்கிறோம்.
இது நாடகத்தில், திரைக் காவியத்தில் படமாக மட்டுமல்ல. பாடமாகவும் உன் நெஞ்சில் பதிய வைக்கப்பட்ட பம்மல் சம்மந்தனார் எழுதிய பழைய சரித்திரத்தின் ஒரு புதிய பொன்னேடு; அந்த ஏடு, இதோ மீண்டும் திரும்புகிறது.
குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடைபெற்றாலும், அதை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக் கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திடமாட்டோம். அப்படிச் செய்பவர் களை மன்னிக்கவும் தயாராக இருக்கமாட்டோம்.
இதோ இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, �இம்� என்றால் சிறைவாசம், �ஏன்� என்றால் வனவாசம் என்று, �எதிர்க்கட்சிகளைகுறிப்பாக தி.மு.க வினரை அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலை காட்டாமல் இருந்திருந்தாலும், எல்லோரையும் சகட்டு மேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை காணுகிறோம்.
நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்த படியெல்லாம் திட்டங்களை அறிவித்து பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் எள்ளி நகையாட, எல்லா அறிவிப்புகளுமே மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் தூள் தூளாக நொறுங்கிப் போவதும் பார்க்கிறோம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment