கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 9, 2011

ராஜினாமா ஏன்? கலைஞரிடம் தயாநிதிமாறன் விளக்கம்


தயாநிதிமாறன், சென்னையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கடந்த 7ம்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து 08.07.2011 அன்று இரவு விமானம் மூலம் அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சரியாக இரவு 8.35 மணிக்கு தயாநிதி மாறன் கோபாலபுரத்திற்கு வந்தார்.
பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. அப்போது டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் 08.07.2011 அன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். விமான நிலையத்தில் பாலுவை நிருபர்கள் சந்தித்தனர்.
கேள்வி:
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருப்பதால் அவருக்கு பதில் வேறு யாருக்கு அமை ச்சர் பதவி கேட்டீர்கள்?
பாலு:
இல்லை. வேறு யாருக்கும் கேட்க மாட் டோம்.
கேள்வி:
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். அவர் நாளை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவாரா?
பதில்:
பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார் என்று தெரியும்

பிரணாப் முகர்ஜி வருகை:
சென்னை வந்துள்ள நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர் கருணாநிதியை 09.07.2011 அன்று சந்தித்து பேசுகிறார்.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 08.07.2011 அன்று இரவு சரியாக 10.10 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இவரை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜே.எம்.ஆருண் எம்பி ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் பிரணாப் முகர்ஜி கிண்டி ராஜ்பவன் விருந்தினர் மாளிகைக்கு தனது காரில் சென்றார். இந்நிலையில், அவர் இன்று மதியம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.




No comments:

Post a Comment