பேராயர் எஸ்றா சற்குணம் 73ம் பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5.5 கோடி நல திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
இசிஐ சபை பேராயர் எஸ்றா சற்குணம் 73ம் பிறந்த நாள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் 19.07.2011 அன்று நடந்தது. பேராயர் சுந்தர்சிங் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் முன்னிலை வகித்தார்.
விழாவில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5.5 கோடி நல உதவிகளை 2781 பேருக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கிரைண்டர், தையல் இயந்திரம், சைக்கிள், மூன்று சக்கர சைக்கிள், பள்ளி சீருடை, புத்தகம், காலணி, சுய வேலை வாப்பு போன்றவை வழங்கப்பட்டன.
விழாவில் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:
தனது பிறந்த நாளை பயனுள்ள நாளாக பேராயர் கொண்டாடுகிறார். நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல திட்ட உதவிகள் வழங்கும் வாய்ப்பை வழங்குகிறார். இப்படிப்பட்ட உதவிகளை அரசு செய்வதுதான் வழக்கம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி பேராயர் கூறினார். ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி கல்வி தரவே சமச்சீர் கல்வியை திமுக ஆட்சி கொண்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் அது ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு பிடிவாதமாக இருப்பது வேதனை தருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் நிச்சயம் நியாயம் கிடைக்கும்.
இதுபோன்ற தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால் பதவியை விட்டு இறங்கு என்று கண்டன கணைகள் பாய்ந்திருக்கும். ஆனால் கருணாநிதி பெருந்தன்மையாக இதை வெற்றி, தோல்வி என்று கருதாதீர்கள் என்றார்.
தரமான கல்வியை ஏழை மக்கள் பெறக்கூடாது; ஆடு மாடு மேய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆடு மாடுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும். அதை நிறைவேற்ற மக்கள் காத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், வசந்த குமார், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் பேசினர்.
விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், வசந்த குமார், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் பேசினர்.
No comments:
Post a Comment