திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் அமைச்சர்கள் பலரும் கோவையில் முகாமிட்டுள்ளனர். தென்மண்டல திமுக அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி 23.07.2011 அன்று மதியம் 12.30 மணிக்கு கோவை வந்தார். ரெசிடென்சி ஹோட்டலில் தங்கி உள்ள கருணாநிதியை சந்தித்தார்.
கட்சி துணை பொது செயலாளர் பரிதிஇளம்வழுதி, சற்குண பாண்டியன், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தங்கம் தென்னரசு ஆகியோரும் 23.07.2011 அன்று காலை கோவை வந்தனர்.
தயாநிதி மாறன் கோவை வந்தார்
கோவையில் 23.07.2011 அன்று மாலை நடக்கும் திமுக செயற்குழு மற்றும் நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் கோவை வந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் 23.07.2011 அன்று காலை கோவை வந்த தயாநிதி மாறனுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் ஈரோடு குறிஞ்சி சிவக்குமார், விசைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் திருப்பூர் வாசுதேவன், கிணத்துக்கடவு துரை, பொள்ளாச்சி ஜான் உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள திமுக தலைவர் கருணாநிதியை, தயாநிதிமாறன் சந்தித்தார்.
No comments:
Post a Comment