கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 17, 2011

எழும்பூர் - மன்னார்குடி தினசரி ரெயில் விரைவில் : டி.ஆர்.பாலு


சென்னை எழும்பூர்-மன்னார்குடி இடையே மன்னை எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது என்று நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.


இது குறித்து 16.07.2011 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

’’நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதையில் பாதுகாப்பு குறித்த ஆய்வுப்பணி 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பணி முடிந்ததும், சென்னை எழும்பூர்-மன்னார்குடி இடையே மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

டெல்லியில் நேற்றுமுன்தினம் நான், ரெயில்வே போர்டு தலைவர் வினய் மிட்டலுடன் நடத்திய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ரெயில்வே போர்டு உறுப்பினர் (என்ஜினீயரிங்) மிஸ்ராவும் உடனிருந்தார். அரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், தெற்கு ரெயில்வேயில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே உள்ள 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதையில் வேகமாக போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றும், இந்தப் பாதையில் மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இரவுநேர ரெயிலை விரைவில் இயக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்கான திட்டச் செலவை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விவாதிக்கப்பட்டு, ரூ.780 கோடி செலவிலான இந்த திட்டப்பணியை மூன்று ஆண்டுகளில் முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த அகல ரெயில் பாதை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை எழும்பூரில் இருந்து தென்தமிழகத்திற்கு செல்ல கூடுதலாக ஒரு பாதை (3-வது பாதை) கிடைக்கும். தற்போது மெயின் லைன், கார்டு லைன் என இரண்டு பாதைகளில் தென்தமிழகத்திற்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.


செங்கல்பட்டு-திண்டுக்கல் இடையே இரட்டைப் பாதை அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. காலதாமதமாகும் முக்கியமான ரெயில்வே திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.


தற்போதைய திட்டப்படி, 107 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டு-விழுப்புரம் ரெயில் பாதையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை பாதை அமைக்கப்பட வேண்டும். 270 கிலோ மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-திண்டுக்கல் பாதையில், வாலாடி-அரியலூர் இடையே இருக்கும் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்த ஆண்டு (2012) இறுதிக்குள் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும். ரூ.800 கோடி மதிப்பிலான ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு ஆகும் செலவில் பங்கு கொடுப்பது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதுகுறித்த முடிவும் விரைவில் எடுக்கப்படும்.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் டெர்மினல் அமைப்பது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன. ரூ.45 கோடி தேவைப்படும் இந்த திட்டத்திற்காக, கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணி முடிவடைந்ததும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். அதன்பிறகு நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment